சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளால் பாஜக எம்.எல்.ஏ கொல்லப்பட்டது குறித்து விசாரிக்கும் குழுவின் தலைவரான நீதிபதி முதல், நரேந்திர மோடி அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட இந்தியாவின் முதல் ஊழல் தடுப்பு நீதிபதி வரை, ஜென்ஹுவா டேட்டா உருவாக்கிய வெளிநாட்டு முக்கிய தகவல் தரவுத்தளம் (ஓ.கே.ஐ.டி.பி), கண்காணிப்பதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போதைய இந்தியாவின் தலைமை நீதிபதி, உச்சநீதிமன்றத்தில் மற்றொரு நீதிபதி, உயர் நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் மற்றும் உச்சநீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற 4 நீதிபதிகள் உட்பட 30 நீதிபதிகளை ஜென்ஹுவா டேட்டா கண்காணித்து வருகிறது.
இந்த கண்காணிப்பு பட்டியலில், இந்தியாவின் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.கான்வில்கர், ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதி சந்தீப் மேத்தா, அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சுனிதா அகர்வால் உள்ளிட்டோர் அடங்கியுள்ளனர்.
உச்ச நீதிமன்றத்தில் இருந்து ஓய்வு பெற்று தற்போது முக்கிய பதவிகளில் இருக்கும் நீதிபதிகளும் இந்த கண்காணிப்பு பட்டியலில் அடங்கியுள்ளனர். லோக்பால் அமைப்பின் தலைவர் நீதிபதி பினாக்கி சந்திர கோஸ், தொலைத் தொடர்பு பிரச்னைகளுக்கான தீர்வு மற்றும் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (டி.டி.எஸ்.ஏ.டி) தலைவர் நீதிபதி சிவ கீர்த்தி சிங், மும்பை பங்குச் சந்தையின் நிர்வாக சபை தலைவர் நீதிபதி விக்ரமஜித் சென், இந்தியாவின் பத்திரிகை கவுன்சில் தலைவர் நீதிபதி சந்திரமௌலி குமார் பிரசாத் ஆகியோர் அடங்கியுள்ளனர்.
மேலும், இந்த பட்டியலில் அறிவுசார் சொத்து மேல்முறையீட்டு வாரியத்தின் முன்னாள் தலைவர் நீதிபதி கே. பாஷா (ஐ.பி.ஏ.பி) மற்றும் ஐ.பி.ஏ.பி முன்னாள் துணைத் தலைவர் நீதிபதி எஸ்.உஷா ஆகியோரும் உள்ளனர்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆய்வு செய்த இந்த பட்டியலில், இடதுசாரிகள் தொடர்பான சம்பவங்களை விசாரிக்க தனி விசாரணை ஆணையங்களுக்கு தலைமை தாங்கும் 2 நீதிபதிகளும் உள்ளனர். சிக்கிம் உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சதீஷ் அக்னிஹோத்ரி. இவர் தந்தேவாடாவில் நடந்த நக்சல்கள் தாக்குதலில் பாஜக எம்.எல்.ஏ பீமா மண்டவி மற்றும் 4 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டது குறித்து விசாரிக்க, சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் 2019 ஆகஸ்டில் அமைத்த நீதி விசாரணை ஆணையத்திற்கு தலைமை தாங்குகிறார்.
1982ம் ஆண்டு ஆனந்த மார்க்கின் ஒரு துறவி உள்பட 16 துறவிகள் படுகொலை செய்யப்பட்டதை விசாரிக்க மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நியமித்த ஒரு நபர் ஆணையத்திற்கு அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் செயல் தலைமை நீதிபதி அமிதவா லாலா தலைமை வகிக்கிறார். அவர் இதுவரை பல மூத்த இடது சாரி தலைவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு வரவழைத்துள்ளார்.
முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.கே.பாலசுப்பிரமண்யன் மற்றும் அரிஜித் பசாயத் ஆகியோர், இந்தியாவில் ஒரு வெளிநாட்டு முதலீட்டு முயற்சி தொடர்பான முன்கூட்டிய வரி விவகாரங்களில் இணைந்து தீர்ப்புகளை வழங்கும் அட்வான்ஸ் ரூலிங் (ஏ.ஏ.ஆர்) அதிகாரிகளின் தலைவர்களாக உள்ளனர். இந்த தரவுகளின் ஆய்வில், மேலும் 2 தலைமை நீதிபதிகள் ஏ.பி.ஷா (டெல்லி) மற்றும் மோஹித் ஷா (மும்பை) - ஏ.ஏ.ஆர்- இல் இருந்து எழும் அதே விஷயத்துடன் மறைமுகமாக இணைக்கப்பட்டுள்ள இவர்களும் கண்காணிக்கப்பட்டுள்ளனர்.
2012 ஆம் ஆண்டில், ஏ.ஏ.ஆர்.-இன் தலைவரான நீதிபதி பாலசுப்பிரமண்யன், மொரீஷியஸைச் சேர்ந்த காஸ்டில்டன் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனத்திற்கு விதிக்கப்படும் குறைந்தபட்ச மாற்று வரிக்கு (MAT) ஆதரவாக தீர்ப்பளித்திருந்தார். 2014 ஆம் ஆண்டில், ஐ-டி துறை MAT-ஐத் வேண்டும் பல வெளிநாட்டு சேவை முதலீட்டாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது; வெளிநாட்டு முதலீட்டாளர்களிடையே ஏற்பட்ட சலசலப்பைத் தொடர்ந்து, அப்போதைய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, நீதிபதி ஏ.பி.ஷா தலைமையிலான ஒரு குழுவை அமைத்தார். இவர் இந்தியாவில் நிரந்தரமாக வணிக தளங்களை வைத்திருக்காத / இந்தியாவில் நிரந்தரமாக நிறுவனங்களை வைத்திருக்காத வெளிநாட்டு நிறுவனத்தின் முதலீட்டாளர்கள்/ வெளிநாட்டு சேவை முதலீட்டாளர்களுக்கு குறைந்தபட்ச மாற்று வரி (MAT) பொருந்தமாக இருக்காது என்று பரிந்துரைத்தார். அதே நேரத்தில், பம்பாய் உயர் நீதிமன்றத்தில், MAT போன்ற விவகாரத்தில் லக்ஸம்பர்க் முதலீட்டாளர் அபெர்தீன் சொத்து மேலாண்மை தொடர்பான ஒரு வழக்கை விசாரிக்கும் தலைமை நீதிபதி மோஹித் ஷா இந்த பட்டியலில் உள்ளார்.
இந்த பட்டியலில் மனித உரிமைகள் குழுவின் ஒரு பகுதியாக இருந்தவர்களும் உள்ளனர்: முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சிரியாக் ஜோசப், சிவ்ராஜ் விருபண்ணா பாட்டீல், சுஜாதா மனோகர் என இவர்கள் அனைவரும் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் பணியாற்றியுள்ளனர். ஒரிசா உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி மற்றும் ஜம்மு காஷ்மீர் மனித உரிமைகள் ஆணையத்தின் முன்னாள் தலைவர் பிலால் நாஸ்கி; ஒரிசா உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி மற்றும் அசாம் மனித உரிமைகள் ஆணையத்தின் முன்னாள் தலைவர் சுஜித் ராய்; ஜார்கண்ட் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி மற்றும் ஆயுதப்படை தீர்ப்பாயத்தின் முன்னாள் தலைவர் பிரகாஷ் டாடியா ஆகியோரும் இந்த கண்காணிப்பு பட்டியலில் உள்ளனர்.
இந்த கண்காணிப்பு பட்டியலில், பி.சி.சி.ஐ-க்குள் சீர்திருத்தங்களை பரிந்துரைக்க உச்ச நீதிமன்றம் அமைத்த குழுவுக்கு தலைமை தாங்கிய உச்ச நிதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா; இப்போது செயல்படாத போட்டி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தலைவராக இருந்த முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி கணபத் சிங் சிங்வி. இவர் இந்திய பிரீமியர் லீக்கை ஒழுங்கமைப்பதில் தனது மேலாதிக்க நிலையை தவறாக பயன்படுத்தியதற்காக பிசிசிஐக்கு ரூ.52.24 கோடி அபராதம் விதித்த இந்திய போட்டி ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்தார். பிசிசிஐயின் புதிய மேற்பார்வையாளராக உச்ச நீதிமன்ற நீதிபதி டி.கே.ஜெயினை நியமித்த அமர்வில் ஒருவராக இருந்த முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி அபய் மோகன் சப்ரே ஆகியோர் இருந்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.