கிழக்கு லடாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் Line of Actual Control (LAC) இந்தியா, சீனா இரு நாடுகளும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான துருப்புகளை நிறுத்தியுள்ள நிலையில், பதற்றமான சூழல் தொடரும் நிலையில் பெய்ஜிங் தனது ரயில் சேவையை எல்லைப் பகுதியில் உள்ள அக்சாய் சின் வழியாக 2025-க்குள் 4,000 கி.மீ.க்கு விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அக்சாய் சின், இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் உரிமை கோரப்படும் எல்லைப் பகுதியாகும். அக்சாய் சின், 1950களின் பிற்பகுதியில் இரு நாடுகளுக்கும் இடையே ஒரு சர்ச்சைக்குரிய புள்ளியாக இருந்து வருகிறது. மேலும் 1962-ம் ஆண்டு இந்தியா-சீனா போரின் மையமாக இருந்தது.
எல்லையில் சீனாவின் உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் நடவடிக்கைகளை இந்தியா உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளது. மேலும் இந்தியா, இதை சீன ராணுவத்தின் சாத்தியமான சக்தியாக பார்க்கிறது. இது தனது படைகளை கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி எளிதாக அணிதிரட்ட முடியும் என்று கூறுகிறது. மேலும் எல்லையில் 33 மாதங்களுக்கும் மேலாக பதற்றம் நீடித்து வருகிறது. இந்திய அரசு இந்த அறிவிப்பை பெய்ஜிங்கின் psy-ops என்று கூறுகிறது.
திபெத் ஆணையம்
சீனாவின் தற்போதைய 1,359 கி.மீ தூரத்தில் இருந்து ரயில்வே நெட்வொர்க்கை மேம்படுத்தும் திட்டத்தை திபெத் தன்னாட்சிப் பகுதி மேம்பாடு மற்றும் சீர்திருத்த ஆணையம் வெளியிட்டது.
அக்சாய் சின் வழியாகச் செல்லும் முன்மொழியப்பட்ட ஜின்ஜியாங்-திபெத் ரயில்வே திட்டத்தின் ஷிகாட்சே-பகுக்ட்சோ பகுதி 2025-ம் ஆண்டுக்குள் முன்னேற்றம் காணும் என்று சீன அரசு தெரிவித்துள்ளது. 2025-ம் ஆண்டுக்குள் சிச்சுவான்-திபெத் ரயில்வேயின் யான்-நியிஞ்சி பிரிவு, சின்ஜியாங்-திபெத் ரயில்வேயின் ஷிகாட்சே-பகுக்ட்சோ பகுதி மற்றும் யுனானின் போமி-ரௌக் பகுதி உட்பட பல ரயில்வே திட்டங்களின் கட்டுமானப் பணிகள் பெரும் முன்னேற்றத்தைக் காணும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 1,000 கி.மீ விரிவாக்கம்
14-வது ஐந்தாண்டு திட்டம் (2021-2025) கீழ் செயல்படுத்தப்படும் இந்த ரயில்வே திட்டம் மூலம் 55 மாவட்டங்கள் இணைக்கப்படுகிறது என்று சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. இது 2035 ஆம் ஆண்டுக்குள் மேலும் 1,000 கி.மீ விரிவாக்கம் செய்யப்படுகிறது.
சீனா எல்லையில் தனது தளவாட திறனை படிப்படியாக விரிவுபடுத்தி வருகிறது. சமீபத்திய நடவடிக்கையானது, நிலப்பரப்பில் இருந்து ஆட்களையும் பொருட்களையும் கொண்டு செல்வதற்கான அதன் திறனை கணிசமாக மேம்படுத்தும்.
இதற்குப் பதிலடியாக, சீனா எல்லைக்கு அருகே இந்தியாவும் ரயில் பாதைகளை அமைக்கும் முயற்சிகளை விரைவுபடுத்தியுள்ளது. எல்லைப் பகுதியில் சீனாவுக்கான இந்தியாவின் ரயில் பாதை 4 வழிகளில் வரையறுக்கப்படும். வடகிழக்கில் மூன்று பாதைகளும், வடக்கில் ஒரு பாதையும் வரையறுக்கப்படும். இவை ஒட்டுமொத்தமாக 1,352 கி.மீ. கொண்டது.
இந்தியா பதிலடி
பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம் மற்றும் லடாக் ஆகிய மாநிலங்களில் 498-கிமீ பானுப்லி-பிலாஸ்பூர்-மனாலி-லே வழித்தடத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கியுள்ளது. ரூ. 83,360 கோடி மதிப்பீட்டில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த ரயில் பாதை முழுமையடையும் போதும் சீனாவின் கிங்காய்-திபெத் பாதையை முந்தி உலகின் நீண்ட தூர ரயில் பாதையாக இது மாறும்.
மற்ற மூன்று ரயில் பாதைகளும் அருணாச்சலப் பிரதேசத்தின் எல்லையுடன் இணைக்கப்பட்டுள்ளன. மிஸ்ஸமாரி-டெங்கா-தவாங் (378 கிமீ ரூ. 54,473 கோடி); பாசிகாட்-தேசு-ரூபாய் (227 கிமீ ரூ. 9,222 கோடி); வடக்கு லக்கிம்பூர்-பாமே-சிலபதர் (249 கிமீ ரூ. 23,339 கோடி). இந்தப் பாதைகளுக்கான விரிவான திட்ட அறிக்கைகள் (டிபிஆர்) தயார் நிலையில் உள்ளன.
இந்திய ரயில்வே துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், இவை அனைத்தும் அதிகாரப்பூர்வ “strategic lines” என்று தீர்மானிக்கப்பட்டுள்ளன. ஆயுதப்படைகளின் தேவைகளுக்கு ஏற்ப கட்டப்பட்டு பாதுகாப்பு துறை அமைச்சகத்தால் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அறிக்கைகளை ஆய்வு செய்வதும், இந்த வழித்தடங்கள் குறித்த அடுத்தடுத்த நடவடிக்கைகளும் ரயில்வே மற்றும் பாதுகாப்புத் துறை இடையேயான ஆலோசனைக்குப் பிறகு நடக்கும் என்று கூறினார்.
இந்த அகலப்பாதை வழிதடங்களுக்கான திட்டங்கள் 10 ஆண்டுகள் திட்டமிடப்பட்டன. இந்த வழித்தடங்கள் பாதுகாப்பு துறை அமைப்பால் அடையாளம் காணப்பட்ட வழிதடங்கள் ஆகும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.