நெருக்கடி நிலைகளை கையாள்வதில் இந்தியா மற்றும் சீனா மேம்பட்டுள்ளன. எனினும், இந்திய தலைவர்கள் இருநாடுகளிடையே உள்ள உறவை மேம்படுத்த முயற்சிக்க வேண்டும் என சின ஊடகம் தெரிவித்துள்ளது. சிக்கிம் மாநிலத்தின் நாதுலா பகுதியில் பாதுகாப்புதுறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சீன வீரர்களிடம் கலந்துரையாடிய நிலையில், சீன ஊடகம் இவ்வாறு தெரிவித்துள்ளது.
இந்தியா, பூடான், சீனா ஆகிய நாடுகளின் எல்லைப் பகுதிகள் சந்திக்கும் இடமாக டோக்லாம் உள்ளது. அப்பகுதியில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சாலை அமைக்க சீனா முயற்சி மேற்கொண்டது. இதற்கு இந்தியா சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால், எச்சரிக்கை விடுக்கும் வகையில் சீன ராணுவ வீரர்கள் டோக்லாம் எல்லையில் குவிக்கப்பட்டனர். இதேபோல, இந்திய ராணுவ வீரர்களும் டோக்லாம் எல்லையில் குவிக்கப்பட்டனர். விஸ்வரூபம் எடுத்த இப்பிரச்சனை, இரு மாதங்களுக்கும் மேலாக நீடித்ததால், இந்தியா-சீனா இடையே மோதல் உருவாக்கும் நிலை இருந்தது. இரு நாட்டு தூதரகங்கள் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் ஆகஸ்ட் மாத இறுதியில் இரு நாட்டு படைகளும் எல்லையில் இருந்து வாபஸ் பெறப்பட்டன. இதனிடையே, சமீபத்தில் சீன ராணுவத்தின் துணையுடன் டோக்லாமில் மிண்டும் சாலை அமைக்கும் பணியில் சீனா ஈடுபடுவனால் மீண்டும் பதற்றம் ஏற்பட்டது.
இந்த நிலையில், சிக்கிம் மாநிலத்தின் நாதுலா பகுதிக்கு சென்றிருந்த பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், சீன ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடியானர். அப்போது, நிர்மலா சீதாராமன் சீன வீரர்களுக்கு வணக்கம் தெரிவித்தார். ‘நமஸ்தே’ என்று கூறிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், அதற்கான அர்த்தத்தை, சீன வீரர்களிடம் எடுத்துரைத்தார். பின்னர் சீன வீரர்களுக்கு பதிலுக்கு கைகூப்பி வணக்கம் தெரிவித்தனர்.
இது தொடர்பாக “சைனிஸ் அசோசியேஷன் ஃபார் சவுத் ஏசியன் ஸ்டடிஸ்”-ன் நிபுணரான குயின் பெங்க், குளோபல் டைம்ஸ்-க்கு அளித்த பேட்டியில், இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனின் செயல்பாடு இந்தியா- சீனா இடையேயான நல்லுறவை சகஜநிலைக்கு திரும்ப கொண்டு வருவதாக அமைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
பெய்ஜிங்கில் உள்ள ஓசியானியா ஸ்டடீஸ்-ன் இயக்குனர் ஹியூ ஷிஷெங் கூறியுள்ளதாவது: இந்தியா-சீனா இடையேயான நல்லுறவை பாதுகாக்க இரு நாடுகளும் முயற்சிகள் மேற்கொண்டன. எனினும், கடந்த 3 ஆண்டுகளாக இந்தியா-சீனா நல்லூறவில் விரிசல் உள்ள நிலையில், சீனா மீதான பார்வை இந்தியாவில் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.