மத்திய பிரதேசம் சித்திரகூட் இடைத்தேர்தல்... ஆளும் பாஜக-வை வீழ்த்தி காங்கிரஸ் வெற்றி!

மத்திய பிரதேச மாநிலம் சித்திரகூட் இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் நிலான்ஷு சதுர்வேதி வெற்றி வாகை சூடினார்

மத்திய பிரதேச மாநிலம் சித்திரகூட் இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் நிலான்ஷு சதுர்வேதி வெற்றி வாகை சூடினார். மத்திய பிரதேசம் மாநிலம் சித்ரகூட் சட்டப்பேரவை தொகுதி இருந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ பிரேம்சிங் கடந்த மே மாதம் உடல் நலக் குறைவால் காலமானார். இதையடுத்து, காலியான சித்ரகூட் சட்டப்பேரவை தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

கடந்த நவம்பர் 9-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், மொத்தம் 65 சதவீத வாக்குகள் பதிவாகின. காங்கிரஸ் தரப்பில் நிலான்ஷு சதுர்வேதி போட்டியிட்ட நிலையில், பா.ஜ.க. சார்பில் சங்கர்லால் திரிபாதி போட்டியிட்டார். மொத்தம் 12 வேட்பாளர்கள் போட்டியிட்ட போதிலும், காங்கிரஸ், பா.ஜ.க. இடையே தான் கடும் போட்டி நிலவியது.

இந்நிலையில், இன்று காலை 8 மணிக்கு வாக்குப் பதிவு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தொடங்கியது. முதலில் இருந்தே காங்கிரஸ் வேட்பாளர் நலான்ஷு சதுர்வேதி முன்னிலை வகித்தார். இறுதியில் பா.ஜ.க. வேட்பாளர் சங்கர்லால் திரிபாதியை விட 14,000-க்கும் மேற்பட்ட வாக்குகள் அதிகம் பெற்று சதுர்வேதி வெற்றி பெற்றார். மத்திய பிரதேசத்தில் முதலமைச்சர் ஷிவ்ராஜ் சிங் சௌகான் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்றுவரும் வேளையில், தற்போது சித்ரகூட் இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்றுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

×Close
×Close