விரைவில் ரூ.200 நோட்டுகள் வெளியாகும்: மத்திய அரசு

மத்திய அரசு புதிய 200 ரூபாய் நோட்டுகளை வெளியிட முடிவு செய்துள்ளது. இதேபோல, 50 ரூபாய் நோட்டுகளை வெளியிடப்படுவதையும் மத்திய அரசு உறுதி செய்துள்ளது.

புதிய 200 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படும் என்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி மத்திய அரசு அறிவித்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையினால், மக்கள் பெரியதும் சிரமத்திற்குள்ளாயினர். பணத்தை மாற்றுவதற்காக வங்கிகள் மற்றும் ஏ.டி.எம் வாசல்களில் நாள் கணக்கில் காத்திருக்க நிலை ஏற்பட்டது. 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் திடீரென செல்லாது என அறிவிக்கப்பட்டதே இதற்கு முக்கிய காரணமாகும். அதற்கு பதிலாக புதிய 2000 ரூயாய் தாள்களும், புதிய 500 ரூபாய் தாள்களும் வெளியிடப்பட்டன.

இந்த நிலையில், மத்திய அரசு புதிய 200 ரூபாய் நோட்டுகளை வெளியிட முடிவு செய்துள்ளது. இதேபோல, 50 ரூபாய் நோட்டுகளை வெளியிடப்படுவதையும் மத்திய அரசு உறுதி செய்துள்ளது. ரிசர்வ் வங்கி அடுத்த வாரத்தில் இந்த புதிய ரூபாய் தாள்களை வெளியிடலாம் என்று கூறப்படுகிறது.

தற்போது 2000 ரூபாய் தாள்கள் புழக்கத்தில் உள்ள நிலையில், அதற்கு சில்லரை மாற்ற வேண்டும் என்றால், 500 ரூபாய் தாள்களே அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், 200 ரூபாய் தாள்களின் வருகையானது, சில்லரை வழங்குவதில் 500 ரூபாய் தாள்களின் இடத்தை சற்று பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கள்ள நோட்டுகளை தடுக்கும் வகையில், இந்த 200 ரூபாய் தாள்கள் அதிக பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டு வரவுள்ளதாம். 200 ரூபாய் எப்போது புழக்கத்திற்கு கொண்டு வரப்படும் என்பது குறித்து தகவல் இல்லை. எனினும், அடுத்தவாரம் இந்த 200 ரூபாய் வெளியிடப்படலாம் என்று தகவல் தெரிவிக்கின்றன.

×Close
×Close