காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தாயார் காலமானார். அவருக்கு வயது 90.
இது குறித்து டெல்லியில் இருந்து காங்கிரஸ் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், “காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தாயார் பாலோ மைனோ (Paola Maino) இத்தாலியில் உள்ள அவரது வீட்டில் வயது முதிர்வு காரணமாக சனிக்கிழமை (ஆக.27) காலமானார். அவருக்கு வயது 90. அவரது இறுதிச் சடங்குகள் ஞாயிற்றுக்கிழமை (ஆக.28) நடைபெற்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி
அதேபோல் சோனியா காந்தியின் மகன் ராகுல் காந்தி,
இது குறித்து காங்கிரஸ் மூத்தத் தலைவர் ஜெய்ராம் ரமேஷ், “சோனியா காந்தியின் தாயார் பாலோ மைனோ அவரது சொந்த ஊரில் சனிக்கிழமை காலமானார். மறுநாள் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன” எனத் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”