கர்நாடகாவில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி : சி-ஃபோர் அமைப்பு நடத்திய சர்வே வெளியீடு

45 சதவிகிதம் பேர் சித்தராமையா சிறந்த முதல்வர் என்றும 26 சதவிகிதம் பேர் எடியூரப்பாவுக்கும், 13 சதவிகிதம் பேர் குமாரசாமி முதல்வராகவும் ஆதரவளித்துள்ளனர்.

கர்நாடகாவில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என சி-ஃபோர் அமைப்பு நடத்திய சர்வே தெரிவித்துள்ளது.

கடந்த சட்டமன்ற தேர்தலிலும் இந்த அமைப்பு வெளியிட்ட சர்வே படியே காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கர்நாடகாவில் விரைவில் சட்டசபைத் தேர்தல் வர உள்ளது. 224 சட்டசபை தொகுதிகளை கொண்ட, கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.

தென் மாநிலங்களில் பலமிழந்து காணப்படும் பிஜேபிக்கு, கர்நாடகாவில் மட்டுமே ஆட்சியை பிடிக்கும் அளவுக்குப் பலம் இருக்கிறது. கர்நாடகாவில் பெறும் வெற்றி அடுத்த ஆண்டு, நடைபெற உள்ள மாக்களவை தேர்தலிலும் எதிரொலிக்கும். எனவே எப்படியாவது வெற்றி பெற்ற தீரவேண்டும் என்பதால் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது.

இந்நிலையில் சி-ஃபோர் அமைப்பு, மார்ச் 1 முதல் 25ம் தேதி வரையில் 154 தொகுதிகளில் சர்வே நிகழ்ந்துள்ளது. இந்த சர்வே முடிவு இன்று வெளியிடப்பட்டது. அதன் படி காங்கிரஸ் கட்சி கூடுதலாக 9 சதவிகித வாக்குகளைப் பெற்று 46 சதவிகித வாக்குகளைப் பெறும் என்று சொல்லியுள்ளது. அதே நேரத்தில் 31 சதவிகித வாக்குகளைப் பெறும் என்றும் மஜத 16 சதவிகித வாக்குகளை மட்டுமே பெறும் என்று சர்வே சொல்கிறது.

காங்கிரஸ் கட்சி 126 இடங்களையும், பிஜேபி 70 தொகுதிகளைப் பெறும் என்றும், மஜத 27 தொகுதிகளை வெல்லும் எனவும் கணிப்பை வெளியிட்டுள்ளது. இதில் மஜக கட்சிக்கு பின்னடைவு ஏற்படும் என தெரிகிறது.

சர்வேயில் 22,357 பேர் கலந்து கொண்டனர். இவர்களில் 45 சதவிகிதம் பேர் சித்தராமையா சிறந்த முதல்வர் என்று கூறியுள்ளனர். 26 சதவிகிதம் பேர் எடியூரப்பாவுக்கும், 13 சதவிகிதம் பேர் குமாரசாமி முதல்வராகவும் ஆதரவளித்துள்ளனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close