”டியர் மிஸ்டர் மோடி! ஹாப்பி வேலண்டைன்ஸ் டே!”: பிரதமரை கலாய்த்து காங்கிரஸ் வீடியோ

நேற்று காதலர் தினத்தன்று, பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் கட்சி தன் ட்விட்டர் பக்கத்தில் ‘காதலர் தின’ வாழ்த்துகளை தெரிவித்துள்ளது.

நேற்று காதலர் தினத்தன்று, பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் கட்சி தன் ட்விட்டர் பக்கத்தில் ‘காதலர் தின’ வாழ்த்துகளை தெரிவித்துள்ளது. அதில், பிரதமரின் கொள்கைகளை விமர்சித்து அவரை கலாய்த்து காங்கிரஸ் கட்சி வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

அந்த வீடியோவில் ‘பேஹ்லா நஷா’ எனும் இந்தி காதல் பாடல் இடம்பெற்றுள்ளது. அந்த வீடியோவில், “டியர் மிஸ்டர் மோடி, அன்பை பரப்புங்கள், மோசடியை அல்ல.”, என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், மோடி மற்ற நாட்டு தலைவர்களை அரவணைப்பதை கேலி செய்யும் விதமாக, “கட்டிப்பிடிப்பதை குறைத்துக்கொண்டு, அதிக வேலைகளை செய்யுங்கள்”, என அந்த வீடியோவில் உள்ளது.

”இந்தியர்கள் அனைவரின் மீதும் சமமாக அன்பு வையுங்கள். எங்களுடைய மனதில் இருப்பவற்றையும் சில சமயங்களில் கேளுங்கள். எல்லா உறவுகளுக்கும் அத்தியாவசியமான பண்பான, கொடுக்கும் வாக்குறுதிகளை காப்பாற்றுங்கள். உங்களால் செய்ய முடிந்தனவற்றை வாக்குறுதிகளாக கொடுங்கள்”, என அந்த வீடியோ முழுவதும் பிரதமர் மோடியை கேலி செய்யும் விதமாக அமைந்துள்ளது.

×Close
×Close