சர்ச்சை சாமியார் சந்திராசாமி மரணம்

சந்திரா சாமிக்கு உலகளாவிய தொடர்பும் உண்டு. வழக்குகளும் உண்டு.

சந்திரா சாமிக்கு உலகளாவிய தொடர்பும் உண்டு. வழக்குகளும் உண்டு.

author-image
kosal ram
புதுப்பிக்கப்பட்டது
New Update
சர்ச்சை சாமியார் சந்திராசாமி மரணம்

பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய சாமியார் சந்திராசாமி, இன்று மாலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 66. சமீபத்தில் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட அவர் அப்பலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் அவர் திடீரென மல்டி ஆர்கன் செயலிழந்தது. இதையடுத்து சிகிச்சை பலைனின்றி இன்று மாலை 3 மணியளவில் மரணம் அடைந்ததாக மருத்துவமனை செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.

Advertisment

ஜோதிட திறமையும், அரசியல் தொடர்பும் அவரை பிரபலப்படுத்தியது. முன்னாள் பிரதமர் நரசிம்மராவிற்கு நெருக்கமான ஆன்மீக குருவாக இருந்தவர். டெல்லியில் அவர் அமைத்துள்ள ஆசிரமத்திற்கான இடத்தை இந்திரா காந்தி வழங்கினார்.

சந்திரா சாமிக்கு உலகளாவிய தொடர்பும் உண்டு. புருனே சுல்தான், நடிகை எலிசபத் டெய்லர், இங்கிலாந்து பிரதமர் மார்கிரெட் தாட்ஷர், ஆயூத வியாபாரி அடனன் கஷோக்கி, மும்பை டான் தாவூத் இப்ராஹிம் ஆகியோருடனும் நட்புடன் இருந்தார்.

சந்திரா சாமி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளும் உள்ளது. இவர் மீதான நிதி மோசடி தொடர்பாக 1996ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இவர் மீது பெரா வழக்கும் உள்ளது. இவர் ஆசிரமத்தில் ஐடி ரெய்டு நடத்தி, ஆயுத வியாபாரி அண்டன் கஷோக்கியிடம் இருந்து 11 மில்லியன் டாலர் பெற்றதுக்கான ஆவணங்களைக் கைப்பற்றினர். ராஜிவ் காந்தி கொலை தொடர்பாக அமைக்கப்பட்ட ஜெயின் கமிஷன், இவர் மீது புகார் கூறியது.

Advertisment
Advertisements

இவர் மீதான அந்நிய செலவாணி மோசடி வழக்கை இன்றும் என்போர்ஸ்மெண்ட் டைரக்ட்ரேட் விசாரித்து வருகிறது. 2009ம் ஆண்டு இவரை வெளிநாடு செல்ல சுப்ரிம் கோர்ட் தடை விதித்தது.

Rajiv Gandhi

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: