/tamil-ie/media/media_files/uploads/2023/06/Odisha-train-accident.jpg)
கோரமண்டல் ரயில் விபத்து: புதுவை அரசு உதவி எண்கள் அறிவிப்பு
கொல்கத்தாவின் ஷாலிமார்- சென்னை சென்ட்ரல் இடையே இயக்கப்படும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று (ஜுன் 2) சென்னை நோக்கி வந்த போது இரவு 7 மணியளவில் ஒடிசா மாநிலம் பாலாசோர் அருகே தடம் புரண்டு கோர விபத்து ஏற்பட்டது.
ரயில் தடம்புரண்டு மற்றொரு தண்டவாளத்தில் விழுந்த நிலையில் பெங்களூரில் இருந்து கொல்கத்தா நோக்கி சென்ற ரயில், தடம்புரண்ட கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் மீது மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து தேசிய மற்றும் மாநில மீட்புக் குழுவினர் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர். விடிய விடிய மீட்பு பணிகள் நடைபெற்து வருகிறது. ஹெலிகாப்டர் மூலம் மீட்புப் பணி நடைபெறுகிறது. இந்த கோர சம்பவத்தில் 233க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்றும் 900க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் புதுச்சேரியை சேர்ந்தவர்கள் சிக்கி இருக்கலாம் என தெரிய வருகிறது. அவ்வாறு விபத்தில் சிக்கி இருந்தால் அவரது பெயர்களை உடனடியாக புதுச்சேரி அரசின் அவசரகால கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கும்படி அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இது குறித்து புதுவை அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒடிசாவில் நடத்த கோரமண்டல் ரயில் விபத்தில் புதுச்சேரியை சேர்ந்தவர்கள் சிக்கி இருப்பதாக தெரிந்தால் அவர்களின் விபரங்களை தெரிவிக்கவும் மற்றும் அவரச உதவிக்கும், புதுச்சேரி மாநில அவசரகால கட்டுப்பாட்டு அறையில் இயங்கும் கீழ்க்காணும் தொலைபேசி எண்களை உடனடியாக தொடர்பு கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. 1070, 1077,112, 0413-2251003, 2255996 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் அவசரகால மையம் 24 மணி நேரமும் (24 x7) இயங்கும்" எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி: பாபு ராஜேந்திரன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.