Advertisment

இந்தியாவில் 653 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி; 7ம் இடத்தில் தமிழகம்

சண்டிகர், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் தலா மூன்று பேருக்கும், உ.பி.யில் 2 பேருக்கும், கோவா, ஹிமாச்சல் பிரதேசம், லடாக் மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் தலா ஒருவருக்கும் ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Coronavirus latest updates Omicron

Coronavirus latest updates Omicron : உலகம் முழுவதும் ஒமிக்ரான் மாறுபாட்டின் தொற்று பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு நாடுகளில் மீண்டும் கொரோனா விதிமுறைகளை பின்பற்ற ஆரம்பித்துள்ளன. இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று மற்றும் கொரோனா பரவலின் நிலை, மத்திய மற்றும் மாநில அரசுகள் மேற்கொண்டிருக்கும் தடுப்பு நடவடிக்கைகள் என்ன என்பதை விவரிக்கிறது இந்த கட்டுரை.

Advertisment

Omicron numbers and top 5 states

ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 653 ஆக உயர்ந்துள்ளது. ஒமிக்ரான் அதிகமாக பரவியுள்ள முதல் 5 மாநிலங்களாக மகராஷ்ரா (167), டெல்லி (165), கேரளா (57), தெலுங்கானா (55), குஜராத் (49) உள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6358 ஆக பதிவாகியுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் நபர்களின் மொத்த எண்ணிக்கை தற்போது 75,456 ஆக உள்ளது. நலம் பெற்று வீடு திரும்பும் நோயாளிகளின் விகிதம் 98.90% ஆக உள்ளது

Coronavirus latest updates Omicron

தமிழகத்தில் மொத்தம் 34 நபர்களுக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 16 பேர் பூரண நலம் பெற்று தங்களின் வீடுகளுக்கு சென்றுள்ளனர். இந்தியாவில் அதிக அளவில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களை கொண்டிருக்கும் மாநிலங்களின் பட்டியலில் 7ம் இடத்தில் தமிழகம் உள்ளது.

மத்திய அரசு ஒமிக்ரான் தொற்றை உறுதி செய்ய அதிக காலம் எடுத்துக் கொள்கிறது. அதற்குள் நோயாளி பூரண நலம் பெற்று வீட்டுக்கு சென்று விடுகிறார். ஒமிக்ரான் பரிசோதனை முடிவுகளை அறிவிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரங்கள் வழங்க வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேற்று (27/12/2021) செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியது குறிப்பிடத்தக்கது.

சண்டிகர், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் தலா மூன்று பேருக்கும், உ.பி.யில் 2 பேருக்கும், கோவா, ஹிமாச்சல் பிரதேசம், லடாக் மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் தலா ஒருவருக்கும் ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பூஸ்டர் டோஸ் லேட்டஸ்ட் அப்டேட் என்ன?

39 வாரங்களுக்கு முன்பு, இரண்டாம் கட்ட தடுப்பூசியை பெற்றுக் கொண்ட முன்கள பணியாளர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள், மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர் தங்களின் பூஸ்டர் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

Covid-19 shots for teens

குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசிகளை ஜனவரி 3 முதல் வழங்க மத்திய அரசு முடிவு செய்திருக்கும் நிலையில் 15 முதல் 18 வயதினருக்கு கோவாக்ஸின் தடுப்பூசி மட்டுமே வழங்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இந்த தடுப்பூசிகளை பெற கோவின் செயலி / இணைய தளத்தில் ஜனவரி 1ம் தேதி முதல் பதிவு செய்து கொள்ளலாம்.

Night curfew

ஒமிக்ரான் தொற்றை கட்டுக்குள் கொண்டு வர ஏற்கனவே உ.பி., உத்தரகாண்ட், டெல்லி மற்றும் ஹரியானா போன்ற மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ள நிலையில் இந்த பட்டியலில் புதிதாக இடம் பெற்றுள்ளது கேரளா. டிசம்பர் 30 துவங்கி ஜனவரி 2ம் தேதி வரை இந்த இரவு நேர ஊரடங்கு நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment