Covid-19 Cases Update : மாநில நிதி பகிர்வாக தமிழகத்திற்கு ரூ1928 கோடி நிதியை அறிவித்தார் நிர்மலா சீதாராமன். தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை தாண்டியது. நேற்று ஒரே நாளில் தமிழகத்தில், 688 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 49.82 லட்சமாக உயர்ந்துள்ளது. வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 19,56,361 ஆகவும், வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,24,535 ஆகவும் உயர்ந்துள்ளது.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மேலும் இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஜூன் ஒன்றாம் தேதி, தேர்வு தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஜூன் 15-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. வைரஸ் தொற்றால் நாடு முழுவதும் முற்றிலுமாக போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஜூன் ஒன்றாம் தேதி முதல், நாடு முழுவதும் 200 பயணிகள் ரயில் இயக்கப்படும் என ரயில்வே அமைச்சர், பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இந்த ரயில்கள் வழக்கமான அட்டவணைப்படி, இயக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Highlights
பொது முடக்கத்தால் மூடப்பட்ட திருப்படி ஏழுமலையான் கோயிலுக்கு உண்டியல் வருமானம் ரூ.1.97 கோடி கிடைத்துள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த 987 பேர் இன்று ஒரே நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை 5,882 பேர் குணமடைந்துள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மாநிலங்களுக்கான நிதி பகிர்வின் அடிப்படையில் தமிழகத்துக்கு மத்திய அரசு 1928 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது.
அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்துக்கு ரூ.8225 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
தமிழகத்தில் இன்று மேலும் புதிதாக 743 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 13,191 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று மேலும் 3 பேர் உயிரிழந்தனர். இதனால் கொரோனா பாதிப்பால் இதுவரை மொத்தமாக 87 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கேரளாவில் மேலும் 24 பேருக்கு கொரோனா தொற்று – பாதிப்பு எண்ணிக்கை 666ஆக உயர்வு
கேரளாவில் கொரோனாவுக்கு 161 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்
யு.பி.எஸ்.சி தேர்வுகளுக்கான புதிய தேதி ஜூன் 5ம் தேதி அறிவிக்கப்படும். சிவில் சர்வீஸ் தேர்வுகள் மட்டுமின்றி இதர தேர்வுக்கான புதிய தேதியும் ஜூன் 5ல் அறிவிக்கப்படும் – யுபிஎஸ்சி
மே 25 முதல் படிப்படியாக உள்நாட்டு விமான சேவை
* விமான நிறுவனங்கள் தயராக இருக்க மத்திய அரசு அறிவுறுத்தல்
* விமான நிலையங்களிலும் முன்னேற்பாடுகளை செய்ய உத்தரவு
* “விமானங்களை இயக்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும்”
அம்பன் புயல் முன்னெச்சரிக்கை : மேற்குவங்கத்தில் சுமார் 5 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்
ஒடிசாவில் சுமார் 1.58 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வெளிமாநில தொழிலாளர்களை அழைத்துச்செல்ல உ.பி. அரசு அனுமதி தராமல் உள்ளது
பேருந்துகளில் பாஜக சின்னம், கொடியை கூட பயன்படுத்திக்கொள்ளுங்கள்
சாலையில் செல்பவர்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அல்ல; அவர்கள் இந்தியாவின் முதுகெலும்பு
– பிரியங்கா காந்தி</p>
இலங்கையில் சிக்கியுள்ள 2,000 இந்தியர்களை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் நிலையில், இலங்கையில் சிக்கியுள்ளவர்களை மீட்காதது வேதனை
– ஜவாஹிருல்லா
மேற்குவங்கம் – வங்கதேசம் இடையே கரையை கடந்து வருகிறது அம்பன் புயல்
கரையை கடக்கும் போது மணிக்கு 180 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி வீசும்
அம்பன் புயல் 4 மணி நேரத்தில் கரையை கடக்கும் என வானிலை மையம் தகவல்
ஊரடங்கு காலத்தில் குடும்ப வன்முறை தொடர்பாக இதுவரை 616 புகார்கள் பெறப்பட்டுள்ளன.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் விளக்கம்.
நாடு முழுவதும் 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நடத்த அனுமதி – உள்துறை அமைச்சகம் அறிவிப்பு
மாணவர்கள் நலன் கருதி ஊரடங்கில் இருந்து தளர்வு அறிவிப்பு. முக கவசம், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் அறிவுறுத்தல். கொரோனா பாதிப்பு அதிகமுள்ள சிவப்பு மண்டலங்களிலும் தேர்வு நடத்தலாம். மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பேருந்து வசதி, தெர்மல் ஸ்கிரீனிங், கிருமி நாசினி பயன்பாடு கட்டாயம்.
கொரோனா பாதிப்பு சீராகி இயல்புநிலை திரும்பும்போது 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்த வேண்டும். சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்தப்பின் உதயநிதி ஸ்டாலின் பேட்டி. 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து 2,3 நாட்களில் நல்ல முடிவை அறிவிப்பதாக அமைச்சர் கூறினார் – உதயநிதி ஸ்டாலின்
’சென்னையில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டியது வெயில்’
சென்னை நுங்கம்பாக்கத்தில் இன்றும் 107.24 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது
– வானிலை ஆய்வு மையம்
சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனுடன் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு
* 10ஆம் வகுப்பு தேர்வை ஜூலை மாதம் ஒத்திவைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்த நிலையில் சந்திப்பு
ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டிய தொகையில் தமிழகத்திற்கு ரூ.295 கோடி ஒதுக்கீடு. ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தொகையில் இருந்து அதிகபட்சமாக உ.பி.க்கு ரூ.816 கோடியும், பீகாருக்கு ரூ.502 கோடியும், ம.பி.க்கு ரூ.330 கோடியும் ஒதுக்கீடு
– மத்திய அரசு
கொரோனா அச்சத்தால் புதுச்சேரியில் மதுக்கடைகள் திறப்பு தாமதம்
மதுக்கடை திறக்கப்பட்டால் தமிழக பகுதியிலிருந்து மக்கள் வர வாய்ப்புள்ளதால் கொரோனா பரவும் அபாயம் உள்ளது
– கலால்துறை அமைச்சர் நமச்சிவாயம்
ஆந்திராவில் நாளை முதல் மாவட்டங்களுக்கு இடையே அரசு பேருந்துகள் இயக்கப்படும்
கொரோனா பாதிப்பில்லாத மண்டலங்களில் முதல் கட்டமாக 1,683 பேருந்துகள் இயக்கப்படும்
– APSRTC
உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முகக்கவசம் அணியாமல் வரும் நபர்களுக்கு ரூ.100 அபராதம் – நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
உலகளவில் கொரோனா பாதிப்பு 50 லட்சத்தை கடந்தது
* உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3.25 லட்சமாக உயர்வு
* நலம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 19,70,680க்கும் மேற்பட்டோர்
* தற்போது வரை 50 லட்சத்து 295 பேர் பாதிப்பு
சென்னையில் அதிக பாதிப்பு உள்ள பகுதிகளில் வீடு வீடாக சென்று தெர்மல் பரிசோதனை
* பொது மக்கள் கொரோனா மையங்களுக்கு வரத் தயங்கும் பகுதிகளில் இந்த பரிசோதனை நடத்தப்படுகிறது – சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன்
தமிழ்நாடு கைத்தறி தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்யாத நெசவாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள், கைத்தறி மற்றும் துணிநூல் இயக்குநர் வழங்குவார் என செய்திகுறிப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார். தகுதியான நெசவாளர்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள சம்பந்தப்பட்ட துறையில் விண்ணப்பம் செய்து பயன் அடையுமானு முதலமைச்சர் பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்திய மருத்துவ கவுன்சில் பரிந்துரைப்படி பாதுகாப்பு உபகரணம் வழங்கப்பட்டுள்ளதா? என்றும் கேள்வி
* விரிவான பதில் மனுவை 27ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் – நீதிபதிகள்
* பதில் மனு தாக்கல் செய்யாவிட்டால் நீதிமன்றமே உத்தரவு பிறப்பிக்கும் – நீதிபதிகள்
முன்களப் பணியாளர்களுக்கு முகத்தை மறைக்கும் வகை முக கவசங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா?
* தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
கொரோனாவைத் தடுக்க சென்னையில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது
* தொற்று பரவும் வாய்ப்புள்ள பகுதிகளில் சாதாரண காய்ச்சல், இருமல் இருந்தால் உடனடியாக பரிசோதிக்கப்படும் – அமைச்சர் விஜயபாஸ்கர்
* கூடுதலாக 500 சுகாதார ஆய்வாளர்கள் களப்பணியில் இருப்பார்கள்
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று புதிதாக 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 600-ஐ கடந்தது
வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்த 81 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இருந்து வந்த 80 பேருக்கும், டெல்லியில் இருந்து வந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த வண்ணாரப்பேட்டையை சேர்ந்த 70 வயது மூதாட்டி இன்று உயிரிழந்தார்.
மே 31 வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளதால் ரம்ஜான் தொழுகையை வீடுகளிலேயே நடத்திக் கொள்ளுங்கள் என, ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்களுக்கு அரசு தலைமை காஜி முகமது அயூப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ராயபுரம் மண்டலத்தில் 1,400-ஐ கடந்தது கொரோனா பாதிப்பு. சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 1,423 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
உலக சுகாதார அமைப்பின் நிர்வாக வாரிய தலைவராக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
மகாராஷ்டிராவில் 37,136 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது; குணமடைந்தோர் எண்ணிக்கை 9,639ஆக உயர்வு; உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,325ஆக உயர்வு
பதிவு பெறாத நெசவாளர்களுக்கு ரூ.2000 நிதியுதவி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தகுதியான நெசவாளர்கள் அந்தந்த மாவட்ட கைத்தறி, துணிநூல் துறைக்கு விண்ணப்பம் செய்து பயன்பெறலாம். நிதியுதவிக்கான விரிவான வழிகாட்டி நெறிமுறைகளை கைத்தறி, துணிநூல் துறை இயக்குநர் வழங்குவார் என கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,01,139-லிருந்து 1,06,750 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 39,174-லிருந்து 42,298 ஆகவும், கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,163-லிருந்து 3,303 ஆகவும் உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 49.82 லட்சமாக உயர்ந்துள்ளது. வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 19,56,361 ஆகவும், வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,24,535 ஆகவும் உயர்ந்துள்ளது.