Advertisment

Coronavirus Updates: இந்தியாவில் வைரஸ் பாதிப்பு 11,000 நெருங்குகிறது; தமிழகத்தில் 1204 பேருக்கு தொற்று உறுதி

Coronavirus Latest LIVE Updates: கொரோனாவால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் நிலை குறித்து உடனடி அப்டேட்டை நீங்கள் இங்கே படிக்கலாம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Coronavirus Updates: இந்தியாவில் வைரஸ் பாதிப்பு 11,000 நெருங்குகிறது; தமிழகத்தில் 1204 பேருக்கு தொற்று உறுதி

Coronavirus Live Updates  : இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில்,51 மரணங்கள் மற்றும் 905 புது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10,000-ஐத் தாண்டியுள்ளது. இதில் 8,988 பேர் சிகிச்சையில் உள்ளனர், 1,035 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர், 339 மரணமடைந்துள்ளனர்

Advertisment

மேலும் படிக்க : கொரோனாவால் இறந்த மருத்துவரை அடக்கம் செய்ய எதிர்ப்பு; பொதுமக்கள் போராட்டம்

மார்ச்.24ம் தேதி அறிவிக்கப்பட்ட தேசிய பொது முடக்கம் இன்றோடு முடிவடையும் நிலையில், ரயில்வே சேவைகளைத் தொடங்குவதற்கான எந்தவித இசைவும் அதிகாரப்பூர்வமாக வரவில்லை. கடந்த வாரத்தில், பல மாநிலங்கள் கோவிட்-19 தடுப்பு நடவடிக்கையாக, இந்த    மாத இறுதி வரை ஊரடங்கை  நீட்டிக்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருந்தன.

எதார்த்த சூழலை கருத்தில் கொண்டு, ஏப்ரல் 15 முதல் திட்டமிடப்பட்ட அனைத்து ரயில் சேவைகளையும் ரத்து செய்வதற்கான் ஆவணங்களை ரயில்வே வாரியம் தயார் செய்து வருகிறது.  கொரோனா வைரஸ் தொடர்பான மேலும் சில முக்கிய செய்திகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

மேலும் படிக்க : மிரட்டும் கொரோனா… மிரண்டு போன வல்லரசுகள்… அசராமல் நிற்கும் பெண் தலைமைகள்!

Live Blog

Coronavirus News Live Updates: கொரோனா வைரஸ் தொடர்பான அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள இந்த லைவ் ப்ளாக்கில் இணைந்திருங்கள்.



























Highlights

    22:30 (IST)14 Apr 2020

    69 வயது மருத்துவருக்கு கொரோனா பாதிப்பு

    ஷில்லாங்கில் 69 வயது மருத்துவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது;

    பாதிக்கப்பட்ட மருத்துவருடன் தொடர்பில் இருந்த சுமார் 2,000 பேர் கண்டறியப்பட்டுள்ளனர்

    -கான்ராட் சங்மா, மேகாலயா முதல்வர்

    22:08 (IST)14 Apr 2020

    காணொளிக் காட்சி மூலம் நடைபெறும் - மு.க.ஸ்டாலின்

    தி.மு.க. தலைமையிலான அனைத்துக் கட்சிக் கூட்டம் 16.4.2020 அன்று காணொலிக் காட்சி மூலம் நடைபெறும் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

    ஊரடங்கு நடைமுறையில் இருக்கின்ற நேரத்தில் கொரோனா நோய்த் தொற்று குறித்து முதலமைச்சர், அமைச்சர்களுடனும், அதிகாரிகளுடனும், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட துறை அதிகாரிகளுடனும் - ஏன், மருத்துவ நிபுணர்களுடனும், மதத் தலைவர்களுடனும் ஆலோசனைக் கூட்டங்கள் தலைமைச் செயலகத்தில் நடத்தப்பட்டுள்ளன. அந்த அடிப்படையில் கொடிய கொரோனா நோய் குறித்து 15.4.2020 அன்று நடைபெறும் வகையில் அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    தமிழக மக்களின் நலன் சார்ந்த பிரச்சினை குறித்து , திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டம் ரத்து செய்யப்படுகிறது என்றும்; 16.4.2020 (வியாழக்கிழமை) காலை 11 மணி அளவில் அன்று அனைத்துக் கட்சிகளின் இந்த ஆலோசனைக் கூட்டம், காணொலிக் காட்சி மூலம் நடைபெறும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    21:43 (IST)14 Apr 2020

    39 லட்சம் டிக்கெட்களும் ரத்து

    ஏப்.15 முதல் மே 3 வரை முன்பதிவு செய்யப்பட்ட 39 லட்சம் டிக்கெட்களும் ரத்து. முழு கட்டணமும் அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்படும் - ரயில்வே

    21:42 (IST)14 Apr 2020

    திமுக தரப்பில் காவல்துறைக்கு பதில்

    அனைத்து விதிமுறைகளையும் முறையாக பின்பற்றி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுவதாக திமுக தரப்பில் காவல்துறைக்கு பதில்

    திட்டமிட்டபடி நாளை அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் - திமுக

    21:42 (IST)14 Apr 2020

    நெஞ்சுரம் கொண்டவர்கள் என்பதை நிரூபிப்போம்

    தோழமைக் கட்சிகள் கூட்டத்துக்கு தடையா? எந்த அடக்குமுறையையும் சந்திக்கும் நெஞ்சுரம் கொண்டவர்கள் என்பதை நிரூபிப்போம் - வைகோ

    20:56 (IST)14 Apr 2020

    காவல்துறை அனுமதி மறுப்பு

    திமுக சார்பில் நாளை அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் காவல்துறை அனுமதி மறுப்பு

    20:39 (IST)14 Apr 2020

    பாஸ் மே 3 ஆம் தேதி வரை நீட்டிப்பு

    சென்னை மாநகராட்சியில் அத்தியாவசியப் பணிக்கான பாஸ் மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

    20:37 (IST)14 Apr 2020

    திமுகவுக்கு காவல்துறை நோட்டீஸ்

    சென்னையில் நாளை கூட்டணி கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்த திமுகவுக்கு காவல்துறை நோட்டீஸ்

    * கட்சி தலைவர்கள் நேரடியாக அலுவலகத்திற்கு வந்து கூட்டத்தை நடத்த போலீசார் தடை

    * காணொலி காட்சி மூலமாக கூட்டத்தை நடத்தலாம் என தேனாம்பேட்டை போலீசார் அறிவுறுத்தல்

    20:37 (IST)14 Apr 2020

    7 வழிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும்

    பிரதமர் மோடியின் 7 வழிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் - தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

    கொரோனா போராட்டத்தில் இந்தியா வெல்ல, தமிழகம் முன்மாதிரி மாநிலமாக விளங்கவேண்டும் - தமிழக ஆளுநர்

    20:00 (IST)14 Apr 2020

    தேர்வுகள் ஒத்திவைப்பு

    'பாரதியார் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு'

    * ஏப்ரலில் நடைபெறவிருந்த இளநிலை, முதுநிலை, ஆராய்ச்சி படிப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு

    * ஊரடங்கு உத்தரவு விலக்கப்பட்ட பிறகு தேர்வு தேதிகள் அறிவிக்கப்படும்

    - பாரதியார் பல்கலைக்கழகம்

    20:00 (IST)14 Apr 2020

    உத்தவ் தாக்கரே உடன் அமித்ஷா தொலைபேசியில் பேச்சு

    பாந்த்ரா போராட்டம் தொடர்பாக மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே உடன் அமித்ஷா தொலைபேசியில் பேச்சு

    பாந்த்ராவில் நடைபெற்ற போராட்டம் , தடியடி கவலை அளிக்கிறது

    இதுபோன்ற நிகழ்வுகள் கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தை பலவீனப்படுத்தும் - அமித்ஷா

    19:27 (IST)14 Apr 2020

    எந்த சாட்சியும் கிடையாது

    பத்து வினாடிக்கு மூச்சை இழுத்து பிடிக்க முடிந்தால் #COVID19 இல்லை என்பதற்கு எந்த சாட்சியும் கிடையாது. எனவே பொய்யான தகவலை நம்ப வேண்டாம்.

    19:25 (IST)14 Apr 2020

    அர்ப்பணிப்பு மற்றும் பொறுப்புணர்வு பாராட்டத்தக்கது

    ஒவ்வொரு காவலரும் அரசாங்கத்தின் வழிகாட்டுதல்களை நிறைவேற்றிட வெளிப்படுத்தும் அர்ப்பணிப்பு மற்றும் பொறுப்புணர்வு பாராட்டத்தக்கது - டிஜிபி திரிபாதி

    உங்களது மோசமான நாட்களை, சிறந்த நாட்களாக மாற்ற கடுமையாக செயல்பட்டாக வேண்டும் - டிஜிபி

    19:25 (IST)14 Apr 2020

    தப்பிய டெல்லி இளைஞர் பிடிபட்டார்

    கொரோனா பாதிப்புடன் விழுப்புரத்தில் இருந்து தப்பிய டெல்லி இளைஞர் பிடிபட்டார்

    செங்கல்பட்டு அருகே படாலம் பகுதியில் விழுப்புரம் போலீசார் சுற்றிவளைத்தனர். விழுப்புரம் முதல் சென்னை வரை 3 மொழிகளில் போஸ்டர் ஒட்டி போலீசார் தேடி வந்தனர்

    18:44 (IST)14 Apr 2020

    ரூ.64.27 கோடி ஒதுக்கீடு

    கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ரூ.64.27 கோடி ஒதுக்கீடு - அரசாணை வெளியீடு

    * மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து சென்னை மாநகராட்சி, ஊரக வளர்ச்சி,

    காவல்-தீயணைப்பு துறைக்கு ஒதுக்கீடு

    18:43 (IST)14 Apr 2020

    அரசுக் கண்காணிப்பில் உள்ளவர்கள் -135

    வீட்டுக்கண்காணிப்பில் உள்ளவர்கள் 28711. அரசுக் கண்காணிப்பில் உள்ளவர்கள் -135

    28 நாட்கள் கண்காணிப்பு முடித்தவர்கள் - 68519

    இதுவரை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 19255

    இதுவரை சோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை -15502

    - பீலா ராஜேஷ்

    18:16 (IST)14 Apr 2020

    ஒரே நாளில் 31 பேருக்கு கொரோனா

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 31 பேருக்கு கொரோனா தொற்று;

    தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,204 ஆக உயர்வு.

    - பீலா ராஜேஷ்

    17:56 (IST)14 Apr 2020

    ஒரே நாளில் 567 உயிரிழப்புகள்

    ஸ்பெயினில் ஒரே நாளில் 567 உயிரிழப்புகள்!

    அமெரிக்கா, இத்தாலிக்கு அடுத்ததாக மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையில் 3ம் இடத்தில் உள்ள ஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 567 பேர் உயிரிழப்பு.

    ஸ்பெயினில் மொத்த பலி எண்ணிக்கை 18,056ஆக அதிகரித்தது..

    17:47 (IST)14 Apr 2020

    பாந்த்ராவில் தொழிலாளர்கள் போராட்டம்

    சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கக்கோரி மும்பை பாந்த்ராவில் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.

    உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் இல்லை எனக்கூறி தொழிலாளர்கள் போராட்டம்

    17:40 (IST)14 Apr 2020

    ரஜினிகாந்த் வேண்டுகோள்

    கொரோனா கட்டுப்பாடுகளை மக்கள் அனைவரும் தவறாமல் கடைபிடிக்க வேண்டும். கொரோனா பாதிப்பில் இருந்து உங்களை நீங்களே பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

    எந்த நாட்டில் வசிக்கிறீர்களோ அந்நாட்டின் விதிமுறைகளை பின்பற்றுங்கள். உங்கள் குடும்பத்தினர் கவலையில் உள்ளனர், உங்களை நீங்கள் பாதுகாத்து கொள்வதே அவர்களுக்கு நீங்கள் அளிக்கும் புத்தாண்டு பரிசு.

    - ரஜினிகாந்த்

    17:30 (IST)14 Apr 2020

    தமிழகம், கேரளா, இமாச்சல்பிரதேசம் மாநிலங்களில் வெளவால்களுக்கு கொரோனா உறுதி - ஐ.சி.எம்.ஆர்

    தமிழகம், கேரளா, இமாச்சல்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வெளவால்களுக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது.

    16:33 (IST)14 Apr 2020

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 31 பேர் கொரோனாவால் உயிரிழப்பு - மத்திய சுகாதாரத்துறை

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 31 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்றும் கொரோனாவால் புதிதாக 1,211 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், 117 பேர் குணமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    15:59 (IST)14 Apr 2020

    இந்தியா பரிசோதனைக் கருவிகள் வாங்குவதில் தாமதமாவது பின்னடைவு - ராகுல் காந்தி

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில், “இந்தியா பரிசோதனைக் கருவிகளை வாங்குவதில் தாமதமாக்குவது இப்போது பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஒரு மில்லியன் இந்தியர்களுக்கு வெறும் 149 சோதனைகள் செய்யப்படுகிறது. லாவோஸ் நைஜர் மற்றும் ஹோண்டுராஸ் நாடுகளைக் காட்டிலும் குறைவாக பரிசோதனை செய்யும் நிலையில் உள்ளோம். கொரோனா வைரஸை எதிர்த்து போராடுவதற்கு அதிக அளவில் பரிசோதனை செய்வது முக்கியம்” என்று தெரிவித்துள்ளார்.

    14:59 (IST)14 Apr 2020

    ஊரடங்கு நீட்டிப்பால் நாடு முழுவதும் மெட்ரோ ரயில் சேவை மே 3 வரை ரத்து - மத்திய அரசு

    கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அமலில் உள்ள ஊரடங்கு நீட்டிப்பால் நாடு முழுவதும் அனைத்து மெட்ரோ ரயில் சேவைகளும் மே 3 வரை ரத்து செய்யப்படுகிறது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

    14:56 (IST)14 Apr 2020

    தமிழகத்தில் நாட்டுப்படகுகள், இயந்திர நாட்டுப்படகுகள் தொடர்ந்து மீன்பிடிக்கலாம் - மீன்வளத்துறை

    கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு மே 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசியப் பணிகளுக்கு தடையில்லை என்ற வகையில், தமிழகத்தில் நாட்டுப் படகுகள், இயந்திரம் பொருத்திய நாட்டுப் படகுகள் மூலம் தொடர்ந்து மீன் பிடிக்கலாம் என்று மீன்வளத்துறை அறிவித்துள்ளது.

    14:25 (IST)14 Apr 2020

    பிரதமரிடம் மக்கள் எதிர்பார்ப்பது அறிவுரைகள் மட்டுமல்ல; நிவாரண உதவிகள் - பொருள் உதவிகள் - மு.க.ஸ்டாலின்

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர்

    நரேந்திர மோடியைக் குறிப்பிட்டு, பிரதமர் மோடி வழங்கிய 7 அறிவுரைகள் மக்களுக்கு இன்னும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

    மக்கள் எதிர்பார்ப்பது அறிவுரைகள் மட்டுமல்ல; நிவாரண உதவிகள் - பொருள் உதவிகள்! மக்கள் மனதில் உள்ள கேள்விகளுக்கு, பதில் சொல்லும் உரையை எப்போது ஆற்றப் போகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    14:15 (IST)14 Apr 2020

    ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் ரத்து செய்ய தேவையில்லை - ரயில்வே அறிவிப்பு

    ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் ரத்து செய்ய தேவையில்லை என்றும் அவர்கள் செலுதிய முழு கட்டணமும் அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.

    14:09 (IST)14 Apr 2020

    ஆந்திராவில் கொரோனா நிலவரம்

    ஆந்திராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 473 ஆக உயர்வு. இன்று புதிதாக 34 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    14:08 (IST)14 Apr 2020

    மகாராஷ்ட்ரா நிலவரம்

    மகாராஷ்ட்ராவில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 2455 ஆக உயர்வு. இன்று புதிதாக 121 பேருக்கு கொரோனா உறுதி. இந்தியாவில் அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இங்கு தான் அதிக அளவில் உள்ளது., 

    14:06 (IST)14 Apr 2020

    கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு தேமுதிக நிதி உதவி

    கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 5 கோடி மதிப்பில் நிதி நிவாரணப் பொருட்கள் வழங்கப்படும் என்று தேமுதிக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மே 3ம் தேதிக்கு பிறகு நிவாரணப் பொருட்கள் வழங்கப்படும் என்று விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

    14:04 (IST)14 Apr 2020

    Gujarat fights corona

    குஜராத்தில் கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 45 அதிகரித்து 617 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 26 நபர்கள் உயிரிழந்துள்ளனர் 55 பேர் நலமடைந்துள்ளனர்.

    14:02 (IST)14 Apr 2020

    சென்னையில் முக கவசம் இல்லாமல் வண்டி ஓட்டினால் ரூ. 500 அபராதம்

    சென்னையில் இன்று முதல் முகக்கவசம் அணிவது கட்டாயமாகிறது. முக கவசம் அணியாமல் வாகனம் ஓட்டினால் ரூ. 500 அபராதமாக வசூலிக்கப்படும் எனவும், தமிழ்நாடு மோட்டார் வாகன சட்டம் 179வது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும் எனவும் காவல்துறை அறிவித்துள்ளது.

    14:00 (IST)14 Apr 2020

    கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக அமைச்சரவை கூட்டம்

    நாளை மத்திய அமைச்சரவை கூடி, கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர். பிரதமர் மோடி தலைமையில் இந்த கூட்டம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    13:41 (IST)14 Apr 2020

    76 லட்சம் வரை அபராதம் வசூல்

    தமிழகத்தில் தடை உத்தரவை மீறியதாக 1,47,238 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரையில் ஒரு லட்சத்தி ஐம்பதாயிரம் வரையில் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அபராத தொகை மட்டும் ரூ.76,96,544 வசூல் செய்யப்பட்டுள்ளது.

    12:58 (IST)14 Apr 2020

    கொரோனா நோயாளிகளுக்கு பிரத்யோகமாக உருவாக்கப்பட்ட air evacuation pod

    இந்திய கப்பற்படை தெற்கு கமாண்ட், கொச்சியில் கொரோனா வைரஸ் நோயாளிகளை, மற்றவர்களுக்கு பாதிப்புகள் ஏதும் ஏற்படாத வகையில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றும் வகையில் air evacuation pod  ஒன்றை தயாரித்து உள்ளனர். 

    12:37 (IST)14 Apr 2020

    மோடியின் ஊரடங்கு நீட்டிப்பை ஏற்று, அவரை ஆதரிக்கிறோம்... ஆனால் ? - சிதம்பரம் ட்வீட்

    12:13 (IST)14 Apr 2020

    மக்களுக்கு சேவை செய்யும் ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களுக்கு பாராட்டுகள் - ரஜினி ட்வீட்

    புத்தாண்டை முன்னிட்டு ரஜினி வெளியிட்ட ட்வீட்

    11:38 (IST)14 Apr 2020

    மண்டல வாரியான பாதிப்புகள் - சென்னை மாநகராட்சி அறிவிப்பு

    தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை சென்னையில் மிகவும் அதிகமாக உள்ளது. இந்நிலையில் மண்டலவாரியாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை வெளியிட்டுள்ளது சென்னை மாநகராட்சி. 

    11:31 (IST)14 Apr 2020

    வேலூரிகள் ஊரடங்கு விதிமுறைகள் தளர்த்தல்

    கொரோனா வைரஸ் காரணமாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு இன்று முடிவுக்கு வருகிறது. இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவில் தளர்வினை அறிவித்திருக்கிறார் அம்மாவட்ட ஆட்சியர். கடைகள் திறந்திருக்கும் நேரம் நீட்டிப்பு! 

    11:28 (IST)14 Apr 2020

    தமிழகத்தில் கொரோனா வைரஸால் மேலும் ஒருவர் பலி

    கொரோனா வைரஸ் காரணமாக, தமிழகத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 12-ஐ தொட்டது. கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 96 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

    11:26 (IST)14 Apr 2020

    220 பரிசோதனை முகாம்கள்

    ஊரடங்கில் சில தளர்வுகள் குறித்து நாளை முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்படும் என்றும் மோடி அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்த ஜனவரி அன்று ஒரே ஒரு ஆய்வகம் மட்டுமே இருந்தது. ஆனால் தற்போது 220-க்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனை முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    11:25 (IST)14 Apr 2020

    மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

    21 நாட்கள் ஊரடங்கு இன்றுடன் நிறைவடையும் நிலையில் மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து அறிவித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. கொரோனா நோயின் தாக்கம் குறைவதற்கான அறிகுறிகள் இன்னும் தெரியாத காரணத்தால் இந்த முடிவை இன்று அறிவித்தார் மோடி 

    09:19 (IST)14 Apr 2020

    இந்தியாவில் கோவிட்- 19 தொற்று எண்ணிக்கை பத்தாயிரத்தைத் தாண்டியது

    இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,000-ஐத் தாண்டியுள்ளது. இதில் 8,988 பேர் சிகிச்சையில் உள்ளனர், 1,035 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர், 339 மரணமடைந்துள்ளனர். கோவிட்- 19 தடுப்பு நடவடிக்கை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இன்னும் சற்று நேரத்தில் நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளார்.  

    Coronavirus News Live Updates: சென்னை உயர்நீதிமன்றம், மதுரை கிளை உட்பட தமிழகம் முழுவதுமுள்ள அனைத்து நீதிமன்றங்களின் பணிகள் ஏப்ரல் 30 வரை நிறுத்தி வைத்து உயர்நீதிமன்ற பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

    கொவிட்-19 க்கு எதிராகப் போராடி வரும் இந்தியாவின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் நாட்டின் தொலைதூரப் பகுதிகளுக்கு அத்தியாவசிய மருத்துவ சரக்குகளைக் கொண்டு செல்ல 218க்கும் மேற்பட்ட லைஃப்லைன் உதான் விமானங்கள் சிவில் விமானப் போக்குவரத்துத் துறையினால் (MoCA) இயக்கப்பட்டுள்ளன.உயிர் காக்கும் உதான் விமானங்கள் இன்று வரை 2,05,709 கி.மீ தூரம் பயணித்திருப்பதுடன், சுமார் 377.50 டன் சரக்குகளையும் கொண்டு சென்றுள்ளது.

    Coronavirus Corona Corona Virus
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment