Advertisment

CoronaVirus India updates: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 42-ஆக உயர்வு: சென்னை, மதுரையில் தலா ஒருவர் அனுமதி

Corona Virus : இந்தியா மற்றும் தமிழகத்தில் கொரோனா குறித்த மருத்துவ செய்திகள், அரசு அறிவிப்புகள் குறித்த உடனடி தகவல்களை இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
coronavirus latest news updates

coronavirus latest news updates

தமிழகத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டுவிட்டர் பதிவின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.

Advertisment

சென்னையின் மேற்கு மாம்பலம் பகுதியை சேர்ந்த 25 வயது இளைஞருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தனிமைப்படுத்தப்பட்டு தனியார் மருத்துவமனையில் கண்காணிப்பில் உள்ளார்.

விருதுநகர் ராஜபாளையம் பகுதியை சேர்ந்த 60 வயது முதியவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கண்காணிப்பில் உள்ளார்.

மார்ச் 28ம் தேதி நிலவரப்படி

2,09,284 நபர்கள்  - பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்

13,323 பேர் - தனிமை வார்டுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

3,044 பேருக்கு வெண்டிலேட்டர் வசதி செய்து தரப்பட்டுள்ளது

277 பேர் புதிதாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்

மாதிரி பரிசோதனை - 1500 ( நெகட்டிவ் - 1252 பாசிட்டிவ் -40 ( 2 பேர் டிஸ்சார்ஜ்)

சோதனை செய்யப்பட்டு வருபவை - 208

என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் 775 ஆக்டிவ் கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரையில், 78  பேர் மருத்துவக் கண்காணிப்புக்குப் பின் வீடு திரும்பியுள்ளதாகவும்,19 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலன் அமைச்சகம் இன்று (மார்ச்-28) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா செய்தியாளர்களிடம்," 2009 ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடியை விட ஒரு மோசமான மந்தநிலையை தற்போது உலகம் எதிர்கொள்கிறது. 2021 ஆம் ஆண்டில் இந்த மந்த நிலையில் இருந்து மீளவாய்ப்புள்ளது" என்று தெரிவித்தார்.

இதற்கிடையில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம்,"கொரோனா வைரஸ் பரவலின் 3 ஆம் கட்டத்திற்குத் டெல்லி தயாராகி விட்டது" என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதிகளவிலான எண்ணிக்கை வந்தாலும்,அதை நிலைத்தன்மையோடு டெல்லி அரசு கையாளும் என்று தெரிவித்தார்.

இன்று காலைவரை உலகளாவிய இறப்பு எண்ணிக்கை 27,333 ஆக உயர்ந்துள்ளது.

Live Blog

Corona Virus : இந்தியா மற்றும் தமிழகத்தில் கொரோனா குறித்த மருத்துவ செய்திகள், அரசு அறிவிப்புகள் குறித்த உடனடி தகவல்களை இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.



























Highlights

    21:45 (IST)28 Mar 2020

    அவசரம் பயணம் செய்வதற்கு அனுமதி பெற தனி காவல்துறை கட்டுப்பாட்டு அறை எண் அறிவிப்பு - தமிழக அரசு

    தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் இருந்து அவசரமாக பயணம் மேற்கொள்வோர் அனுமதி பெறுவதற்காக பிரத்யேக காவல்துறை கட்டுப்பாட்டு அறை எண் அறிவிக்கப்பட்டுள்ளது. அவசரமாக பயணம் மேற்கொள்வார் கட்டுப்பாட்டு அறை எண் 75300 01100 என்ற எண்ணை அழைக்கலாம் என அறிவித்துள்ளது.

    கட்டுப்பாட்டு அறையை கண்காணிக்க காவல் துணை ஆணையர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. திருமணம், இறப்பு, மருத்துவம் போன்ற அவசர தேவைக்கான பயணத்துக்கு இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அவசர பயணம் சென்னைக்குள்ளேயோ, மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையோ செல்ல நேரிட்டால் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    20:47 (IST)28 Mar 2020

    ராஜிவ் கொலை வழக்கு குற்றவாளி ரவிச்சந்திரன் ரூ.5000 கொரோனா நிவாரண நிதி

    முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலைவழக்கில் தண்டனை அனுபவித்துவரும் ரவிச்சந்திரன் தான் சிறையில் வேலை செய்து சம்பாதித்த பணத்தில் இருந்து ரூ.5000 கொரோனா நிவாரண நிதியுதவிக்கு வழங்கியதாக தகவல்

    19:24 (IST)28 Mar 2020

    கொரோனா தடுப்பு பணிகளுக்காக டாடாகுழுமம் ரூ.1500 கோடி மத்திய அரசுக்கு நிதியுதவி

    இந்தியாவின் முன்னணி தொழில்துறை குழுமமான டாடா குழுமம் மத்திய அரசுக்கு ரூ.1000 கோடி பிரதமர் பொது நிவாரண நிதிக்கு நன்கொடையாக அளிப்பதாக தெரிவித்துள்ளது.

    டாடா அறக்கட்டளை சார்பில் ரூ.500 கோடி மத்திய அரசுக்கு நன்கொடை அளிப்பதாக தெரிவித்துள்ளது.

    இதன் மூலம் டாடா குழுமத்திலிருந்து ரூ.1500 கோடி மத்திய அரசுக்கு நன்கொடை அளிக்கப்படுகிறது.

    19:14 (IST)28 Mar 2020

    தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி; மொத்த எண்ணிக்கை 42 ஆக உயர்வு

    சென்னை மேற்கு மாம்பலத்தில் வசிக்கும் 25 வயது இளைஞருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிஅழ்க சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அவர் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவைனையில் திவிர சிகிசை அளிக்கப்படுகிறது. அவருடைய உடல்நிலை நல்ல நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    17:56 (IST)28 Mar 2020

    கொரோனா தடுப்புக்காக பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் பிரதமர் பொது நிவாரண நிதிக்கு ரூ.25 கோடி நன்கொடை

    கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காகவும் மக்களைக் காக்க பிரதமர் பொது நிவாரண நிதிக்கு நிதி அளிக்க பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

    இதையடுத்து, பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பிரதமர் பொது நிவாரண நிதிக்கு ரூ.25 கோடி நன்கொடை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

    17:50 (IST)28 Mar 2020

    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 41 ஆக உயர்வு - சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ்

    சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்: தமிழகத்தில் மொத்தம் 41 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    வீடு வீடாக சென்று யாராவது காய்ச்சல், இருமல் பிரச்னைகளுடன் இருக்கிறார்களா என்று கண்காணிக்கப்படுவார்கள்.

    காய்ச்சல், இருமல், இருந்தால் அவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்ய திட்டம்.

    கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்து கண்டறித்து வருகிறோம்.

    10 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன்

    போதுமான அளவு முக கவசம் இருக்கிறது. முககவசத்துக்கு எந்த தட்டுப்பாடும் இல்லை.

    17:41 (IST)28 Mar 2020

    தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கோரோனா பாதிப்பு ; மொத்த எண்ணிக்கை 41 ஆக உயர்வு

    சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்: தமிழகத்தில் மொத்தம் 41 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    17:09 (IST)28 Mar 2020

    கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு பொதுமக்கள் நிவாரண நிதி வழங்க பிரதமர் மோடி வேண்டுகோள்

    கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு பொதுமக்கள் நிவாரண நிதி வழங்க பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    கொரோனா தடுப்பு பணிகளுக்கு மக்கள் தங்களால் இயன்ற நிதியுதவியை தருமாறு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    பேரிடர்களின் போது இது போன்ற நிதி உதவி மக்களைக் காக்க உதவும் - பிரதமர் மோடி

    இதற்காக PM CARES என்ற வங்கிக் கணக்கு உருவாக்கப்பட்டுள்ளது. நிதி அளிக்க விரும்புபவர்கள், Account - PM Cares, Ac No-2121PM20202, IFSC - SBIN0000691-ல் மக்கள் நிதியளிக்கலாம்.

    பொதுமக்கள், UPI-pmcares@sbi என்ற யுபிஐ ஐடியிலும் நிதி அளிக்கலாம் - பிரதமர் மோடி வேண்டுகோள்

    மேலும் விவரங்களுக்கு https://www.pmindia.gov.in என்ற இணையதளத்தில் நிதி உதவி அளிப்பது குறித்து அறியலாம்.

    16:13 (IST)28 Mar 2020

    சென்னையில் அத்தியாவசியப் பணிகளில் ஈடுபடுவோர் பாஸ் பெற்றுக்கொள்ளலாம் மாநகராட்சி அறிவிப்பு

    சென்னை மாந்கராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சென்னையில் அத்தியாவசியப் பணிகளில் ஈடுபடுவோருக்கான வெளியே செல்வதற்கான அனுமதி பாஸ் பெற்றுக்கொள்ளலாம். வணிகம், தனியார் நிறுவனங்கள், ஊடக சேவை, சுகாதார சேவை, பொதுச்சேவை, ஆகியவற்றில் பணிபுரிபவர்கள் சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகம் மற்றும் 4 மண்டல அலுவலகங்களில் பாஸ் பெற்றுக்கொள்ளலாம்” என அறிவித்துள்ளது.

    15:55 (IST)28 Mar 2020

    அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்ட தமிழக முதல்வருக்கு மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் எழுதியுள்ள கடிதத்தில், “கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்த, தமிழக முதல்வர் பழனிசாமி அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்” வலியுறுத்தியுள்ளார்.

    14:26 (IST)28 Mar 2020

    நிதி கோரி பிரதமருக்கு முதல்வர் நன்றி

    தமிழகத்திற்கு ரூ.9000 கோடி நிதி ஒதுக்க கோரி பிரதமருக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார். ”கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள ரூ.9000 கோடி நிதி தேவைப்படுகிறது" எனவும் மக்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்தும் அந்தக் கடிதத்தில் முதல்வர் குறிப்பிட்டுள்ளார். 

    14:05 (IST)28 Mar 2020

    கன்னியாகுமரி கொரோனா வைரஸ் வார்டில் 3 பேர் உயிரிழப்பு

    கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி தனிமைப்படுத்தப்பட்ட  கொரோனா வைரஸ் வார்டில் இன்று ஒரே நாளில் இரண்டு வயது குழந்தை  மூன்று பேர் இன்று உயிர் இழந்துள்ளனர். இவர்கள் மூவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று முடிவுகள் இன்னும் வெளியிடப் படவில்லை. இதுகுறித்த விரிவான அறிக்கைகள் அதிகாரிகளிடம் இருந்து எதிர்பார்க்கப்படுகிறது.     

    13:44 (IST)28 Mar 2020

    நான் தனிமைப்படுத்தப்பட்டதாக வரும் செய்திகள் உண்மையல்ல : கமல் ஹாசன்

    சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கமலின் வீட்டில், மாநகராட்சி ஊழியர்கள் கமல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்ற நோட்டீசை ஒட்டி இருந்தனர். அதற்கு கமல் ஹாசன் தற்போது ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.  

    13:39 (IST)28 Mar 2020

    கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவு: 8,795 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிப்பு

    கொரோனா வைரஸ் தொற்று தடுக்கும் நடவடிக்கையாக, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. இந்நிலையில், உத்தரவை மீறியதாக இதுவரை 8,795 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்ததாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், 5,501 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

    12:56 (IST)28 Mar 2020

    கொரோனா வைரஸ் தொற்று: கேரளா முதல் உயிர் இழப்பை பதிவு செய்தது

    கேரளா இன்று தனது முதல் உயிர் இழப்பை பதிவு செய்தது.  இறந்தவர் (69) துபாயில் இருந்து திரும்பிய இவருக்கு, கொரோனா வைரஸ்    அறிகுறிகள் கண்டறியப்பட்டதால், மார்ச் 22 ஆம் தேதி கலாமசேரி மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார்.

    இதயக் கோளாறு மற்றும் இரத்த அழுத்த பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட இவர் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டிருந்தார். கடந்த காலத்தில் இவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப் பட்டதாகவும் மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

    12:20 (IST)28 Mar 2020

    கொரோனா வைரஸ் தொற்று நடவடிக்கைக்கு புதிய 108 அவசரகால ஆம்புலன்ஸ்

    தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்காக மக்கள் நல்வாழ்வு (ம) குடும்ப நலத்துறையின் 24 மணி நேரமும் இயங்கும் அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில் புதிய 108 அவசரகால ஆம்புலன்ஸ் வாகனங்களை வழங்கிடும் அடையாளமாக அவற்றிற்கான சாவிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஓட்டுநர்களிடம் வழங்கினார்.

    Image

    12:08 (IST)28 Mar 2020

    கட்சி பாகுபாடின்றி அனைவருக்கும் உதவுங்கள் - மு.க ஸ்டாலின் வேண்டுகோள்

    ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், தங்கள் கிராமங்களுக்குச் செல்லும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவுமாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது கட்சி உறுப்பினர்களை வலியுறுத்தினார். இன்று தனது ட்விட்டரில் , ' இது போன்ற ஒரு அவசரகால சூழ்நிலையில், அணைத்து மாநிலங்களும் ஒன்றிணைந்து, கட்சி பாகுபாடின்றி எளியவருக்கு உதவ வேண்டும். சிறு உதவிக்காக துடிக்கும் அனைத்து மக்களுக்கும் உங்களால் இயன்ற உதவிகளை செய்யுமாறு திமுக கழக உறுப்பினர்களை கேட்டுக்கொள்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.   

    12:06 (IST)28 Mar 2020

    உதவிகளை செய்யுமாறு திமுக உறுப்பினர்களை கேட்டுக்கொள்கிறேன் - ஸ்டாலின்

    ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், தங்கள் கிராமங்களுக்குச் செல்லும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவுமாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது கட்சி உறுப்பினர்களை வலியுறுத்தினார்.

    ஸ்டாலின் இன்று தனது ட்விட்டரில் , " இது போன்ற ஒரு அவசரகால சூழ்நிலையில், அணைத்து மாநிலங்களும் ஒன்றிணைந்து, கட்சி பாகுபாடு காட்டாமல் எளியவருக்கு உதவ வேண்டும். சிறு உதவிக்காக துடிக்கும் அனைத்து மக்களுக்கும்  இயன்ற உதவிகளை செய்யுமாறு திமுக கழக உறுப்பினர்களை கேட்டுக்கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.   

    12:06 (IST)28 Mar 2020

    உதவிகளை செய்யுமாறு திமுக உறுப்பினர்களை கேட்டுக்கொள்கிறேன் - ஸ்டாலின்

    ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், தங்கள் கிராமங்களுக்குச் செல்லும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவுமாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது கட்சி உறுப்பினர்களை வலியுறுத்தினார்.

    ஸ்டாலின் இன்று தனது ட்விட்டரில் , " இது போன்ற ஒரு அவசரகால சூழ்நிலையில், அணைத்து மாநிலங்களும் ஒன்றிணைந்து, கட்சி பாகுபாடு காட்டாமல் எளியவருக்கு உதவ வேண்டும். சிறு உதவிக்காக துடிக்கும் அனைத்து மக்களுக்கும்  இயன்ற உதவிகளை செய்யுமாறு திமுக கழக உறுப்பினர்களை கேட்டுக்கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.   

    11:51 (IST)28 Mar 2020

    கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றை எதிர்த்துப் போராடும் வகையில் தனிமைப்படுத்தும் வார்டுகளை ரயிலில் ஏற்பாடு செய்துள்ளது  இந்திய ரயில்வே நிர்வாகம். 

    11:47 (IST)28 Mar 2020

    தமிழகத்தில் வீட்டுக் கண்காணிப்பில் 88,695 பேர்- ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ்

    தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நடவடிக்கையாக 88,695 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக  வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய ஆணையர், " கட்டுப்பாடுகள் மத்தியில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.    

    10:32 (IST)28 Mar 2020

    கொரோனா வைரஸ் தொற்று: கிராமத்தை பூட்டிய மக்கள்

    கர்நாடகா மாநிலம் சகார தாலுக்காவில் உள்ள கிராம மக்கள் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க, மரக்கட்டைகள் மூலம்  தங்கள் கிராமத்தை பூட்டியுள்ளனர். வெளியாட்கள் தங்கள் கிராமத்திற்குள் நுழையாதவாறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது . 

    10:20 (IST)28 Mar 2020

    கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை: உலக நாடுகளுக்கு அமெரிக்கா நிதி உதவி

    கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராட  64 நாடுகளுக்கு சுமார் 174 மில்லியன் டாலர் நிதி உதவியை அமெரிக்கா வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. இதில் இந்தியா 2.9 மில்லியன் டாலர் நிதி உதவி பெரும் என்று  கூறப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி அமெரிக்கா அரசு கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக உலக நாடுகளுக்கு $100 மில்லியன் அமெரிக்கா டாலரை ஒதுக்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.   

    இந்திய அரசு ஆய்வக அமைப்புகளைத் தயாரிக்கவும், நிகழ்வு அடிப்படையிலான கண்காணிப்பை செயல்படுத்தவும்,  தயார்நிலையை  உருவாக்க தொழில்நுட்ப வல்லுநர்களை ஆதரிக்கவும் இந்த நிதி உதவுகிறது.

    10:08 (IST)28 Mar 2020

    கொரோனா வைரஸ் எண்ணிக்கை 775-ஆக உயர்வு, பலி- 19

    இந்தியாவில் 775 ஆக்டிவ் கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரையில், 66 பேர் மருத்துவக் கண்காணிப்புக்குப் பின் வீடு திரும்பியுள்ளதாகவும்,19 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலன் அமைச்சகம் இன்று (மார்ச்-28) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த புதுப்பிக்கப்பட்ட புள்ளிவிவரங்களில், இரண்டு புதிய இறப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன (நேற்று வரை 17). எவ்வாறாயினும், மாநில வாரியான புள்ளிவிவரங்கள் காத்திருப்பதால் இந்த இரண்டு புதிய மரணங்கள் எங்கிருந்து வந்தன என்பதை உடனடியாக அறிய முடியவில்லை.

    Corona Virus Lockdown day 4 Updates : கொரோனா நோய்த் தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக காய்கறி, மளிகைக்கடைகள், பெட்ரோல் பங்குகள், உணவு கொண்டுவரும் நிறுவனங்கள், ஆதரவற்றோர்களுக்கு உணவளிப்பவர்கள் உள்ளிட்டோருக்கு பல கட்டுப்பாடுகளை முதல்வர் பழனிசாமி நேற்று அறிவித்த்தார். இந்த புதிய கட்டுப்பாடுகள் நாளை (மார்ச் 29) முதல் நடைமுறைக்கு வருகின்றது.

    மார்ச் 1ம் தேதி முதல் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் திரும்பியவர்களை வீடுகளில் இருந்து வெளியேற்றி தனி முகாம்களில் வைத்து சிகிச்சை அளிக்க கோரிய வழக்கில், தமிழக அரசு 2 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    Corona Corona Virus
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment