Coronavirus outbreak Delhi Government will pay house rent of the migrants says Arvind Kejriwal : இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா நோய் தொற்று தீவிரமடைந்து வருகிறது. வீட்டை விட்டு யாரும் 21 நாட்களுக்கு வெளியேற வேண்டாம் என்று ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் அனைவரும் வீட்டுக்குள் முடங்கியுள்ளனர். தொடர்ந்து கைகளை கழுவ வேண்டுகோள் விடுக்கப்பட்ட நிலையில், கோடை காலத்தில் தண்ணீர் இன்றி தத்தளிக்கும் நிலையும் உருவாகியுள்ளது.
மேலும் படிக்க : நம் முன்னோர்கள் காடுகளுக்கு அளித்த மரியாதையை உன் தலைமுறையும் தர வேண்டும் – காடர்
வீடு இருக்கும் நபர்கள் தங்களின் வீட்டுக்குள்ளேயே முடங்கியிருக்க, வீடற்றவர்களின் நிலை மேலும் மோசமடைந்துள்ளது. ஆதரவற்றவர்கள், வீடற்றவர்களின் தேவையை நிறைவேற்ற மாநில அரச பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் அண்டை மாநிலங்களில் வேலை செய்யும் மக்கள் தங்களின் சொந்த மாநிலங்களுக்கு, பொது போக்குவரத்து இல்லாத காரணத்தால், நடந்தே செல்லும் அவல நிலையும் உருவாகியுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் மகாராஷ்ட்ராவில் இருந்து குஜராத்துக்கும், டெல்லியில் இருந்து உ.பி. நோக்கியும் இடம் பெயர துவங்கினர். இந்நிலையில் டெல்லி அரசு மிக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் ”நீங்கள் எங்கு இருக்கின்றீர்களோ, அங்கேயே இருங்கள். அங்கேயே தங்குங்கள். இதனை மக்கள் பின்பற்றாவிட்டால் மோசமான விளைவுகள் தான் உருவாகும். மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் டெல்லி அரசு செய்துத் தரும். வெளிமாநில மக்கள் யாரும் வெளியேற வேண்டாம். டெல்லி அரசே உங்களின் வீட்டு வாடகைகளை செலுத்தும்” என்று அறிவித்துள்ளார் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். இந்த அறிவிப்பால் மக்கள் கொஞ்சம் நிம்மதி அடைந்துள்ளனர்.
மேலும் படிக்க : ’கொரோனாவில் மக்களுக்கு சேவை செய்யணும்’: நர்ஸாக மாறிய பாலிவுட் நடிகை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook
Web Title:Coronavirus outbreak delhi government will pay house rent of the migrants says arvind kejriwal