Advertisment

கொரோனா மரணங்கள் : இழப்பீடு வழங்க மத்திய அரசு ஒப்புதல்; நிதி சுமையை ஏற்க மாநிலங்களுக்கு கோரிக்கை

எதிர்காலத்தில் கொரோனா தொற்று தாக்கத்தால் உயிரிழப்பவர்களுக்கும், அடுத்த கட்ட அறிவிப்பு வெளியாகும் வரை இந்த நிதி வழங்கப்படும் என்று தேசிய பேரிடர் மேலாண்மை அறிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
Covid19, covid deaths, coronavirus

Covid deaths : கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்த நபர்களின் உறவினர்களுக்கு இழப்பீடாக தேசிய பேரிடர் மேலாண்மை ரூ. 50 ஆயிரத்தை மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் பெற்று மக்களுக்கு விநியோகிக்க வேண்டும் என்று தேசிய பேரிடர் மேலாண்மை பரிந்துரைத்துள்ளது.

Advertisment

இதை செயல்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்ட வழிகாட்டுதல்களில், இறந்தவரின் நெருங்கிய உறவினர்களுக்கு நிதி வழங்க வேண்டும் என்றால், அவர்கள் சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் (MoHFW) அமைச்சகம் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) செப்டம்பர் 3 அன்று கொண்டு வரப்பட்ட கோவிட்19 வழிகாட்டுதல்களின் படி கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார் என்று சான்றளிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் கொரோனா தொற்று தாக்கத்தால் உயிரிழப்பவர்களுக்கும், அடுத்த கட்ட அறிவிப்பு வெளியாகும் வரை இந்த நிதி வழங்கப்படும் என்று தேசிய பேரிடர் மேலாண்மை அறிவித்துள்ளது.

முழுக்க முழுக்க இழப்பீட்டு நிதியை மாநில அரசுகளில் பொறுப்பில் விடக் கூடாது என இந்த வழிகாட்டுதல்கள் குறித்து கேரளா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்கள் பதில் அளித்துள்ளன.

மக்களுக்கு தேவையான நிதி உதவிகளை வழங்குவதில் இருந்து மாநிலங்கள் முழுமையாக தங்களை விலக்கிக் கொள்ள கூடாது என்றாலும், பெரும்பான்மையான பங்கு மத்திய அரசிடம் இருந்து வர வேண்டும். இழப்பீடு வழங்குவதற்கும் தங்களுக்கும் முழுமையாக சம்பந்தம் இல்லை என மத்திய அரசு கூறக் கூடாது என கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவரும், அம்மாநில கல்வித்துறை அமைச்சருமான கோவிந்த் சிங் தோடாசாரா இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசிய போது, நீங்கள் இந்த இழப்பீட்டு நிதியை மாநிலங்கள் மீது திணிக்க கூடாது. என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்று கூறுங்கள். மத்திய அரசின் நிவாரண நிதியில் இருந்து தான் இதனை வழங்க வேண்டும். அதில் சந்தேகம் ஏதும் இல்லை. வெள்ளம் மற்றும் மழைக்காலங்களில் ஏற்படும் சேதங்களுக்கு நிதி வழங்குகிறீர்கள். கோவிட்19-யும் அதில் இணைக்க வேண்டும். ஒரு மாநிலம் மட்டும் இதில் பாதிக்கப்படவில்லை. இது தொற்று நோய். தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தான் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறினார்.

ராஜஸ்தானின் நிதி அமைச்சராகவும் செயல்படும் அம்மாநில முதல்வர் அசோக் கெலாட்டை கருத்துகளுக்கு அணுக முடியவில்லை.

தேசிய பேரிடர் மேலாண்மை - நாட்டின் முதன்மை பேரிடர் மேலாண்மை நிர்வாகம் பிரதமர் மூலம் நிர்வகிக்கப்படுகிறது. உச்ச நீதிமன்றத்தின் ஜூன் 30ம் தேதி உத்தரவின் பெயரில் செப்டம்பர் 11ம் தேதி அன்று வழிகாட்டுதல்களை உருவாக்கிய மத்திய அரசு. புதன்கிழமை அன்று என்.டி.எம்.ஏ. வழிகாட்டுதல்கள் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

வழக்கறிஞர்கள் கௌரவ் குமார் பன்சால் மற்றும் ரீபக் கன்சால் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் என்.டி.எம்.ஏவை, இழப்பீடு தொடர்பான வழிகாட்டுதல்களுடன் வருமாறு அறிவித்தது. ஆனாலும், இழப்பீட்டு தொகையாக வழங்க வேண்டிய நியாயமான தொகை என்ன என்பதை குறிப்பிடவில்லை. பிற நிவாரணங்களுக்கான NDRF/SDRF மற்றும் முன்னுரிமைகள் மற்றும் தேசிய ஆணையம்/யூனியன் அரசு மற்றும் நிவாரணம் மற்றும் தடுப்பு, தயார்நிலை, தணித்தல் மற்றும் மீட்பு மற்றும் நிதியுதவிக்கு தேவையான குறைந்தபட்ச நிதிகளுக்கு தேவையான நிதி மற்றும் பேரிடர் மேலாண்மையின் கீழ் கடமைகளை நிறைவேற்றுவதற்கு தேவையான நிதிகள் சட்டம் 2005 கீழ் தேசிய மற்றும் மாநில பேரிடர் மேலாண்மையின் கீழ் இருக்கும் நிதியின் தேவை/கிடைப்பது போன்ற காரணிகளை கருத்தில் கொண்டு தொகையை நிர்ணயிக்க பரிசீலிக்கலாம் என்று அறிவித்தது உச்ச நீதிமன்றம்.

கோவிட் -19 என்பது ஒரு பேரழிவு, இது குறையவில்லை. மொத்த இறப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வைரஸின் புதிய மாறுபாடுகள் மற்றும் எதிர்கால அலைகள் குறித்து நிச்சயமற்ற தன்மை உள்ளது. எனவே, இழப்பீடு மூலமாக ஏற்படும் நிதி சுமையை முழுமையாக கண்டறிய இயலாது. இறப்பு எண்ணிக்கை உயரும்போது அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு உதவி வழங்கக்கூடிய வகையில் திட்டமிட வேண்டும் என்று கோருகிறது என என்.டி.எம்.ஏ. வழிகாட்டுதல்களை உருவாக்கும் போது குறிப்பிட்டது.

கோவிட் -19 தடுப்பு, மேலாண்மை மற்றும் பதிலின் பல்வேறு அம்சங்களுக்காக மாநில அரசுகள் ஏற்கனவே SDRF இலிருந்து பெரிய செலவுகளைச் செய்து வருகின்றன. கூடுதலாக, தேசிய பட்ஜெட்டில் இருந்து மத்திய அரசு கோவிட் தொற்று தடுப்பு நட்வடிக்கைஅளாஇயும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தேவையான நிதி உதவியையும் (உதாரணமாக ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் பி.எம்.கரிப் ஆகியோருக்கு வழங்கப்படும் ஆதரவு கல்யாண் யோஜனா தொகுப்பு) வழங்குகிறது. மாநில அரசுகளும் தங்களின் பட்ஜெட்டில் இருந்து நலத்திட்டங்களை அறிவித்துள்ளது. சில மதிப்புமிக்க பிரிவுகளில் சில நிதி மற்றும் பொருள் உதவிகள் ஏற்கனவே வெவ்வேறு வடிவங்களில் வழங்கப்பட்டு வருகின்றன.

இழப்பீடு நிதியை தீர்மானிக்கும் போது நடக்கக்கூடிய பிற பேரழிவுகள் மற்றும் அந்த வழக்குகளிலும் உதவி வழங்க வேண்டிய அவசியத்தை ஆணையம் கணக்கில் எடுத்துக்கொண்டது. கோவிட் -19 முன்னோடியில்லாத பேரழிவு என்றாலும், அடிக்கடி நிகழும் பிற இயற்கை பேரழிவுகள் குறையவில்லை. மற்ற பேரழிவுகளுக்கும் சரியான நேரத்தில் மற்றும் பயனுள்ள பதிலை வழங்க போதுமான நிதி கிடைப்பது முக்கியம் என்றும் குறிப்பிட்டுள்ளது.

கோவிட் -19 பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அதிகாரப்பூர்வ ஆவணங்களை வழங்குவதற்கான எளிமையான வழிகாட்டுதல்களை கொண்டு வருமாறு உச்சநீதிமன்றம் மத்திய அரசை கேட்டுக் கொண்டது, இது மரணம் தொடர்பாக நகராட்சி அல்லது பிற அதிகாரிகளால் வழங்கப்பட்ட ஆவணங்களைத் திருத்துவதற்கு உதவும் என்றும் கூறியது.

இதற்கு பதில் அளித்த அமைச்சகம் மற்றும் ஐ.சி.எம்.ஏர். இணைந்து வழிகாட்டுதல்களை உருவாக்கியுள்ளன. அதன்படி ஆர்டி-பிசிஆர்/ மூலக்கூறு சோதனை/ விரைவான ஆன்டிஜென் சோதனை மூலம் கண்டறியப்பட்ட வழக்குகள், அல்லது மருத்துவமனை அல்லது மருத்துவரால் அனுமதிக்கப்பட்டிருந்தால் கோவிட் நோயால் இறந்தவர் என்று கருதப்படுவர்.

இது மருத்துவமனைக்கு வெளியே/ நோயாளி வசதிக்கு வெளியே நடந்தாலும் கூட, சோதனை செய்யப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் அல்லது கோவிட் -19 வழக்காக மருத்துவ ரீதியாக நிர்ணயிக்கப்பட்ட தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் கோவிட் -19 நோயால் ஏற்படும் இறப்புகளுக்கும் இந்த நிதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

விஷம் அருந்துதல், கொலை, தற்கொலை மற்றும் விபத்துகளில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் இறந்திருக்கும் பட்சத்தில் அவர்களின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கு இந்த நிதி வழங்கப்பட முடியாது என்று கூறப்பட்டுள்ளது.

இந்த வழிகாட்டுதல்களை பரிசீலிக்கும் போது, கோவிட் நோயாளி தற்கொலை செய்துகொண்டால், அது கோவிட் மரணமாக கருதப்படாது என்று கூறிய வழிகாட்டுதலை மறுபரிசீலனை செய்யுமாறு உச்சநீதிமன்றம் அரசாங்கத்தை கேட்டுக் கொண்டது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் அறிவிப்பின் படி இதுவரை 4,45,768 நபர்கள் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

Inputs from ENS, Jaipur; PTI

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Coronavirus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment