இஸ்ரோவால் முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தில் செயல்படும் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்படுகிறது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜி.சாட்-19 தகவல்தொடர்பு செயற்கைகோளுடன், ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட், மாலை 5:28 மணிக்கு விண்ணில் ஏவப்பட இருக்கிறது.
இந்த ஜி.சாட்-19 தகவல் தொடர்பு செயற்கைகோள் 3 ஆயிரத்து 136 கிலோ எடைகொண்டது. இது பூமியை படம் எடுத்து அனுப்புதல், கடல் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், சாலை போக்குவரத்தை கண்காணித்தல், நிலம் தொடர்பான தகவல்கள், புவியியல் ஆய்வு உள்ளிட்ட பல தகவல் தொடர்பு பணிகளை மேற்கொள்ளுகிறது.
பூமியில் இருந்து குறைந்தபட்சம் 179 கிலோ மீட்டர் தொலைவிலும், அதிகபட்சமாக 35 ஆயிரத்து 975 கிலோ மீட்டர் தொலைவிலும் இந்த செயற்கைகோள் நிலை நிறுத்தப்படும். இதில் 4 ஆயிரத்து 500 வாட் திறன் கொண்ட 2 பேட்டரிகள், 2 ஆன்டனாக்கள், சூரிய தகடுகள் மற்றும் நவீன கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த செயற்கைகோளின் ஆயுட்காலம் 10 ஆண்டுகள் ஆகும்.
இவ்வளவு அதிக எடை கொண்ட செயற்கைகோளை முதன்முறையாக இஸ்ரோ இன்று ஏவுவது குறிப்பிடத்தக்கது.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook
Web Title:Cryogenic gslv mark iii rocket to be launch today
பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை எப்போது? 3 நாட்களில் முடிவெடுக்கும் ஆளுநர்
கமல்ஹாசன் எங்கள் கூட்டணிக்கு வருவதை வரவேற்கிறேன் : தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ்அழகிரி
டிராகன் பழத்திற்கு சமஸ்கிருத பெயர் : குஜராத் முதல்வரின் நடவடிக்கைக்கு காரணம் என்ன?
சீரம் இன்ஸ்டிடியூட்-ல் திடீர் தீவிபத்து : 5 பேர் பலியானதாக தகவல்