scorecardresearch

ராகுல் காந்தி எம்.பி பதவி பறிப்பு: தீர்ப்பு வந்த 24 மணி நேரத்தில் அதிரடி

எம்.பி பதவியிலிருந்து ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது.

rahul-gandhi-parl
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி

எம்.பி பதவியிலிருந்து ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை  செயலகம் அறிவித்துள்ளது.

காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி 2019-ம் ஆண்டு மக்களை தேர்தல் பிரச்சாரத்தின் போது, மோடி என்ற பெயர்களை கொண்டவர்கள்  திருடர்களாக உள்ளனர் என்று பேசியிருந்தார். இந்நிலையில் அவர் பிரதமர் மோடியை அவதூறாக பேசியதாக பாஜக சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் நேற்று  தீர்ப்பு வழங்கியது. இந்த தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கான ஜாமினும் ராகுலுக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில் அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து எம்.பி பதவியில் இருந்து அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது.

இந்த தகுதி நீக்கம், தண்டனை அறிவிக்கப்பட்ட நேற்றைய நாளில் இருந்தே அமலுக்கு வருகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு கேரளாவின்  வயநாடு தொகுதியில் இருந்து  ராகுல் காந்தி எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Day after his conviction rahul gandhi disqualified from lok sabha

Best of Express