ஒரே குடும்பத்தில் 11 பேரை இழந்த துயரம்... 7 பெண்கள் 4 ஆண்கள் மரணம் குறித்து விசாரணை

ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேரும் மர்மமான முறையில் இறந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பெண்கள் மற்றும் 4 ஆண்கள் உட்பட 11 பேர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் அமைந்துள்ள புராரி பகுதியில் இருந்த வீட்டில் 11 பேரின் சடலங்கள் இன்று காலை மீட்கப்பட்டன. இறந்த 11 பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இதில் 7 பேர் பெண்கள் மற்றும் 4 பேர் ஆண்கள். 11 பேரில் வயதான பெண் ஒருவர் உடல் தரையில் இருக்க, 10 பேரின் உடல்களும் தூக்கில் தொங்கியப்படி இருந்தது.

தூக்கில் தொங்கிய 10 பேரின் உடல்களும் கண்கள் கட்டப்பட்டிருந்த நிலையில் இருந்ததால் இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. 11 பேரின் உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பியுள்ளனர்.

வீட்டின் அருகில் இருந்தவர்களிடம் விசாராணை நடத்தியதில், மரணித்த குடும்பத்தினர் கடந்த சில மாதங்களாகவே தொழிலில் அதிக அளவிலான நஷ்டத்தை சந்தித்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது. மேலும் இவர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தால் நீண்ட நாட்களாகவே அக்குடும்பம் கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததும் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. புராரி போலீசார் இந்தச் சம்பவத்தை தொடர்ந்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close