New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/09/sonia-gandhi-1.jpg)
காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாடு சென்ற நிலையில் இன்று மாலை இந்தியா திரும்புவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ் கட்சியில் அடுத்த தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அக்டோபர் 17ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மூத்த தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாடு சென்ற நிலையில் இன்று (செப்.16) மாலை இந்தியா திரும்புவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அடுத்த வாரம் மனுத்தாக்கல் தொடங்கவுள்ள நிலையில், சோனியா காந்திக்குப் பிறகு யார் கட்சியை வழிநடத்துவது என்பது குறித்து இன்னும் தெளிவு இல்லை. கட்சியில் குழப்பம் நீடிக்கிறது. திங்கட்கிழமை முதல் சோனியா கட்சியின் மூத்த தலைவர்களை சந்தித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் தெளிவு கிடைக்கும் என பெரும்பாலான
தலைவர்கள் நம்புகின்றனர். கட்சியின் ஜி 23 தலைவர்களில் சிலர் அவரைச் சந்தித்து பேசவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பிரதேச காங்கிரஸ் கமிட்டி: காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் பிரிவு தலைவர் மதுசூதன் மிஸ்திரி நேற்று கூறுகையில், பிரதேச காங்கிரஸ் கமிட்டிகள் (PCC) புதியதாக தேர்ந்தெடுக்கப்படும் கட்சித் தலைவர் மாநில பிரிவுத் தலைவர்களை நியமிக்கவும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (ஏஐசிசி) பிரதிநிதிகளை நியமிக்கவும் அதிகாரம் அளிக்கும் வகையில் தீர்மானங்களை நிறைவேற்றலாம் என்று கூறினார்.
கேரளா பி.சி.சி இதை முதலாவதாக செய்துள்ளது. ஆனால் புதிதாக நியமிக்கப்பட்ட கேரளாவின் பிசிசி பிரதிநிதிகள் தற்போதைய தலைவர் சோனியா காந்திக்கு பிசிசி தலைவரை நியமிக்கும் அங்கீகாரம், ஏஐசிசி பிரதிநிதிகளை நியமிக்கும் அங்கீகாரத்தை வழங்கியது. இந்த அறிவிப்புக்கான கூட்டம் கேரள மாநில பிஆர்ஓ, கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜி பரமேஸ்வரா தலைமையில் நடந்தது.
மோடி பிறந்தநாள்: செப்டம்பர் 17ஆம் தேதி நாளை பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளில் தொடங்கி, 2 வாரங்களுக்கு மத்திய பாஜக அரசு நாடு முழுவதும் இரத்த தானம் முகாம் நடத்த திட்டமிட்டுள்ளது. இதையொட்டி மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா இரத்த தானம் செய்வதாக கூறியுள்ளார். நாளை காலை சப்தர்ஜங் மருத்துவமனையில் இரத்த தானம் செய்கிறார். ரக்தன் அம்ரித் மஹோத்சவ் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த இயக்கத்தின் மூலம் நாட்டின் வருடாந்திர தேவையான சுமார் 1.5 கோடி யூனிட் இரத்தத்தை சேகரித்து கொடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது கொரோனா பெருந்தொற்று நோய்களின் போது ஏற்பட்ட பற்றாக்குறையை கருத்தில் கொண்டும் மற்றும் கொடையாளர்களை சார்ந்திருப்பதை குறைப்பதற்கும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது எனக் கூறியுள்ளது. மேலும் எதிர்காலத்திற்கு பயனளிக்கும் வகையில் தன்னார்வ கொடையாளர்களை அடையாளம் காண்பதற்கும், மாவட்ட வாரியான தரவுகளைப் பெறுவதற்கும் இந்த இயக்கம் உதவும் எனக் கூறப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.