காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் அலுவலகத்தின் ஏ.ஐ.சி.சி ஒருங்கிணைப்பாளரான கவுரவ் பந்தி, வாஜ்பாய் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை புறக்கணித்ததாகவும், பிரிட்டிஷாருக்கு தகவல் சொல்பவராக வேலை செய்தார் என்றும் ட்வீட் செய்துள்ளார்.
மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்தநாளில் அவரது பங்களிப்பை பா.ஜ.க நினைவுகூரும் நாளில், காங்கிரஸ் உறுப்பினர் ஒருவரின் ட்வீட் வார்த்தைப் போரைத் தூண்டியுள்ளது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் அலுவலகத்தின் ஏ.ஐ.சி.சி ஒருங்கிணைப்பாளரான கவுரவ் பந்தி, வாஜ்பாய் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை புறக்கணித்ததாகவும், பிரிட்டிஷாருக்கு தகவல் சொல்பவராக பணியாற்றியதாகவும் ட்வீட் செய்துள்ளார். ராகுல் காந்தி திங்கள்கிழமை வாஜ்பாயின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்துவார் என்று காங்கிரஸ் அறிவிப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு அவரது ட்வீட் வந்தது. இது பா.ஜ.க தலைவர்களை காங்கிரசை நோக்கி கடுமையாக விமர்சிக்கத் தூண்டியுள்ளது. பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனவல்லா, முன்னாள் பிரதமரை ராகுல் உண்மையிலேயே மதித்திருந்தால், பந்தியை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
சத்தம் ஹவுஸ் விதிகள்
பாதுகாப்பு படிப்புகள் மற்றும் பகுப்பாய்வுகளுக்கான நிறுவனம் இந்த வாரம் ஒய்.பி. சவான் நினைவு சொற்பொழிவை நடத்தியது. ஆனால், அது ஒரு திருப்பத்துடன் வந்துள்ளது: பாதுகாப்புப் படைத் தளபதி ஜெனரல் அனில் சௌஹானின் உரை, சத்தம் ஹவுஸ் விதிகளின் கீழ் இருக்க வேண்டும். ஊடகங்கள் அனுமதிக்கப்படவில்லை. மேலும், ஊடக அமைப்பான ஐ.டி.எஸ்.ஏ உறுப்பினர்களும் அழைக்கப்படவில்லை. இது பாதுகாப்பு அமைச்சகத்தின் நிதியுதவியுடன் செயல்படும் நிறுவனத்தின் உறுப்பினர்களிடையே சிறிது அதிருப்தியை ஏற்படுத்தியது.
நகர்ப்புற ஸ்வச் பாரத் மிஷன் 2.0 -இன் கீழ் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களால் உருவாக்கப்பட்ட குப்பைகளை அகற்றும் திட்டங்களின் நிலையை வெளியிடுவதன் மூலம், மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் அவர்களுக்குள் போட்டியை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சகத்தின் குப்பைகளை கொட்டும் இடம் பற்றிய தகவல் விவரப் பலகை சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு லைவ் செயல்பாட்டுக்கு வந்தது. ஒரு மாநிலம் எத்தனை மரபுவழி இடங்களை வைத்துள்ளது. அவற்றை சரிசெய்யும் திட்டங்களின் முன்னேற்றம் பற்றிய விவரங்களை குறிப்பிட வேண்டும். இந்த தகவல் பகிரங்கப்படுத்தப்பட்ட சில நாட்களுக்குள், ஊடக செய்திகள், தங்கள் முன்னேற்றத்தைக் காட்ட மாநிலங்கள் தங்கள் தரவைப் புதுப்பிக்க துடிக்கின்றன. தகவல் பலகையில் குறிப்பிடுவதற்கு முன்னர், நாட்டில் உள்ள குப்பைத் தொட்டிகளின் எண்ணிக்கை மற்றும் குவிக்கப்பட்ட குப்பைகளின் அளவு தெளிவாகத் தெரியவில்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“