scorecardresearch

டெல்லி வட்டார செய்திகள் : பேசப் பேச ம்யூட் செய்யப்பட்ட டி.ஆர். பாலுவின் மைக்!

ஆலோசனை கூட்டத்தில் வழங்கப்பட்ட பிரசெண்டேசன் முழுக்க முழுக்க இந்தியில் இருந்ததாலும், மொழி பெயர்ப்பு இல்லாமல் இருந்ததாலும் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

டெல்லி வட்டார செய்திகள் : பேசப் பேச ம்யூட் செய்யப்பட்ட டி.ஆர். பாலுவின் மைக்!

Delhi Confidential Put on Mute : காணொளி காட்சி மூலம் பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் கொரோனா நிலை குறித்து அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டத்தை நடத்தியது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த கூட்டத்தில் அனைத்து தலைவர்களும் நேர்மறையான கருத்துகளை தெரிவித்தனர். ஆனால் திமுகவின் டி.ஆர். பாலு மகிழ்ச்சியாக இல்லை. ப்ரெசெண்டேசன் முழுக்க முழுக்க இந்தியில் இருந்ததாலும், ஆங்கில மொழிபெயர்ப்பு அல்லது சப்டைட்டில் ஏதும் இல்லாமல் இருப்பது குறித்து தன்னுடைய கருத்தினை தெரிவித்தார். மேலும் விவசாயிகள் போராட்டம் குறித்தும் தன்னுடைய கருத்துகளை தெரிவிக்க முனைந்தார். ஆனால் பமைச்சர் ப்ரல்ஹாத் ஜோஷி இந்த ஆலோசனை கூட்டம் கொரோனா நிலைகுறித்தும் தடுப்பூசி வழங்கப்படுவது குறித்தும் மட்டும் தான். எனவே அனைவரும் அது குறித்து மட்டும் பேசவும் என்று கூறினார். பாலு அதனை தொடர்ந்தும் மேற்கொண்டு பேசினார். ஆனால் சிறிது நேரத்தில் அவருடைய மைக் ம்யூட் செய்யப்பட்டது.

விரைவில் வர இருப்பது!

ஜி.எஸ்.டி.யை நடைமுறைப்படுத்துவது அரசியல் களத்தில் பெரும் சண்டைகளை சமீபகாலத்தில் ஏற்படுத்தி வருகிறது. அவசரமாகவும் தவறாகவும் வரி விதிப்பை நடைமுறைப்படுத்தியதன் காரணமாகவே மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. அதிர் ரஞ்சன் சவுத்ரி தலைமையிலான நாடாளுமன்றத்தின் பொது கணக்குக் குழு விரைவில் தனது அறிக்கையை முன்வைக்க உள்ளதால் இந்த விவகாரம் மீண்டும் கவனம் செலுத்தப்படலாம். ஜிஏஎஸ்டி அமலாக்கத்தில் உள்ள இடைவெளிகளையும் குறைபாடுகளையும் சுட்டிக்காட்டிய சிஏஜி அறிக்கையை இக்குழு ஆராய்கிறது. சுவாரசியமாக தொழில் மற்றும் நாடு முழுவதிலுமுள்ள நிபுணர்களைத் தவிர பொதுமக்களிடமிருந்து கருத்துக்களைப் பெற்றது. சார்ட்டர்ட் அக்கௌண்ட் ஆஃப் இந்தியா, சி.ஐ.ஐ. மற்றும் எஃப். ஐ.சி.சி.ஐ போன்ற நிறுவனங்களிடம் இருந்தும் இந்த வாரத்தில் கருத்துகளை கேட்டது பி.ஏ.சி. இவர்களின் கருத்துகளுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படும் என்று சௌத்ரி கூறியுள்ளார்.

சிறப்பு பயணி

உலகின் தனிமையான யானை என்று கூறப்பட்ட காவன் பாகிஸ்தானில் இருந்து கம்போடியாவிற்கு அழைத்து செல்லப்பட்டது. அமெரிக்க பாடகர் மற்றும் நடிகையுமான செர் உள்ளிட்ட வன ஆர்வலர்கள் இந்த விவகாரத்தை கையில் எடுத்த பின்னர் யானை கம்போடியாவுக்கு அழைத்து செல்லப்பட்டது. இந்தியாவில் இருக்கும் ரஷ்ய தூதரகமும் இதில் தன்னுடைய பங்கை அளித்துள்ளது. இஸ்லமாபாத்தில் இருந்து கம்போடியாவிற்கு சென்ற யானையை ரஷ்யாவின் விலங்குகளை ஏற்றிச் செல்லும் விமானம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டது. யானையின் மனநிலையை நன்றாக உணர்ந்திருந்த அவர்கள் இந்தியாவில் சில நேரம் நிறுத்த விரும்பினர். அதற்கு ரஷ்யாவின் அதிகாரிகள் இந்திய சிவில் விமானத்துறை மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் ஒப்புதழ் பெற்று, கவானை பத்திரமாக கம்போடியாவிற்கு அழைத்து சென்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Delhi confidential put on mute

Best of Express