சீனாவுடன் மிக நீண்ட பேச்சுவார்த்தைக்கு தயாராகும் இந்தியா; எப்போது முடிவுக்கு வரும் எல்லை பிரச்சனை?

அதி உயர மலைப்பகுதிகளில் அமைந்துள்ள எல்லை பகுதிகள் ஏற்பட்ட பிரச்சனைகள் மத்தியில் தான் துருப்புகளின் ஆக்கிரமிப்பு பிரச்சனைகள் தலை தூக்கியது.

By: Updated: June 8, 2020, 11:53:50 AM

 Sushant Singh , Shubhajit Roy , Krishn Kaushik

Delhi prepares for the long haul: Military, diplomatic engagements to continue : கிழக்கு லடாக் எல்லை பிரச்சனை தொடர்பாக நீண்டகால நடவடிக்கைகள் மூலமாகவே தீர்வு காண முடியும் என்ற சமிக்ஞையை இந்தியா வெளியிட்டுள்ளது. சீனாவுடனான இந்த பிரச்சனைக்கு ராணுவம் மற்றும் ராஜதந்திர நடவடிக்கைகள் மூலமாக தீர்வுகள் எட்டப்படும் என்று கூறியுள்ளது இந்தியா. சுஷூல் மோல்டோ எல்லை பகுதியில் சனிக்கிழமை இந்தியா மற்றும் சீனாவின் ராணுவ தளபதிகளுக்கு மத்தியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம் குறித்து வெளியுறவுத் துறை அமைச்சகம் ”நேர்மறையான, ஒரு நல்ல சூழலில் நடைபெற்றது” என்று கூறியுள்ளது.

இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க 

இருதரப்பு உறவுகளின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு இந்தியா மற்றும் சீன எல்லைப் பகுதிகளில் அமைதி நிலவுவது அவசியமானது என்று இந்தியாவில் சீன அதிபர் மற்றும் இந்திய பிரதமர் மத்தியில் நடைபெற்ற முறைசாரா மாநாட்டில் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பினை மேற்கோள்காட்டியுள்ளது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அறிக்கை. இரு நாடுகளுக்கும் இடையேயான நட்புறவு உருவாகி இந்த வருடத்தோடு 70 ஆண்டுகள் நிறைவடைகிறது. அதனை குறிக்கும் வகையில் ஆரம்பகால தீர்மானங்கள் இரு நாட்டு நட்புறவின் வளர்ச்சிக்கு உதவும் என்றும் மேற்கோள்காட்டியது வெளியுறவுத்துறை அமைச்சகம்.

இருதரப்பில் நடைபெற்ற பேச்சுவார்த்தை வெளிப்படை தன்மை கொண்டவை என்று கூறியுள்ள வெளியுறவுத்துறை அமைச்சகம், வெள்ளிக்கிழமை நடைபெற்ற காணொளி ஆலோசனை மற்றும் சனிக்கிழமை நடைபெற்ற கூட்டம் தொடர்பாக பெய்ஜிங்கின் நிலைப்பாடு குறித்து சவுத் ப்ளாக் அறிந்து கொண்டதாகவும் கூறியுள்ள்ளது. இது ஒரு நீண்ட பேச்சுவார்த்தை ஆகும். ஆனால் சின்ன சின்ன நடவடிக்கைகள் மூலமாகவே இந்த பிரச்சனைக்கு தீர்வு காண இயலும் என்றும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. பிரிகேடியர் மட்டத்திலும், கள மட்டத்திலும் தொடர்ந்து மற்றும் இணை செயலாளர்களின் மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

XIV கார்ப்ஸ் கமாண்டர் லெப்டினென்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங் மற்றும் தெற்கு சின்ஜியாங் இராணுவ மாவட்டத்தின் தளபதி மேஜர் ஜெனரல் லியு லின் ஆகியோர் சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றனர். கிழக்கு லடாக்கின் சில பகுதிகளை மீட்டெடுப்பது குறித்து சீனாவிடம் இந்தியர்கள் தங்கள் தரப்பு நியாயத்தை கூறினார்கள். சீனா ஆக்கிரமிப்பு செய்த பகுதிகள் தொடர்பான விரிவான விவரங்களையும், இந்த விவகாரம் ஆரம்பிப்பதற்கு முன்பு சீன கட்டுப்பாடு எங்கே இருந்ததோ, அதுவரை, இந்தியாவில் இருந்து சீன படைகள் வெளியேற வேண்டும் என்று அறிவித்துள்ளனர். மேலும் பல்வேறு இடங்களில் நடைபெறும் ரோந்து பணிகள் குறித்தும், இதுவரை இந்தியா ரோந்து பணிகள் மேற்கொண்ட இடங்கள் மறும் தற்போது சீனா அனுமதி மறுக்கப்படும் இடங்கள் குறித்தும் அவற்றை மீட்டெடுப்பது குறித்தும் தங்கள் தரப்பில் இருந்து கூறியுள்ளது இந்தியா.

மேலும் படிக்க : முதல் கட்ட பேச்சுவார்த்தையில் இடம் பெற்ற முக்கிய ஆலோசனைகள்

இந்த பேச்சுவார்த்தைகளில் அதிக முக்கியத்துவம் பெற்றது பங்கோங் சோ பகுதி குறித்து தான். அங்கு சீன படையினர் 8 கி.மீ வரை முன்னேறி, தங்களின் கூடாரங்களை அமைத்து, ராணுவத்தினரை நிறுத்தியுள்ளது. இந்த செய்கையால், ராணுவ வரைபடத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் எல்.ஏ.சி. வரை இந்திய ராணுவத்தினர் ரோந்து செல்வது நிறுத்தப்பட்டுள்ளது. இந்திய தரப்பில் இருந்து, அதிக அளவிலான சீன துருப்புகளின் வகையை குற்றமாக முன்வைத்துள்ளது. ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது என்ற அறிவிப்பு இருந்த போதிலும், இந்திய படையினர் ரோந்து பணிகளை தடுத்து நிறுத்தக் கூடாது என்று கூறியுல்ளது. இது குறித்து இந்தியா சீனா ஆராயும் என்று கூறியதோடு, அந்த பகுதியில் உருவாகிவரும் இந்திய உள்கட்டமைப்பு குறித்தும் கூறியுள்ளது.

கல்வான் பகுதியில் சீனார்களின் ஆக்கிரமிப்பும் பிரச்சனையாக எழுப்பப்பட்டது. ஆனால் சீனா தளதிகளும் அதிகாரிகளும் “இதில் அசாதாரணமாக ஏதும் இல்லை. எங்களின் எல்.ஏ.சிக்குள் தான் ராணுவத்தினர் இருக்கின்றனர்” என்றும் கூறியுள்ளது. இந்த பிரச்சினையை ஒப்புக் கொள்ள மறுப்பது கால்வான் பகுதியில் அவர்களின் ஊடுருவலை உறுதி செய்கிறது என்றும் நம்ப தகுந்த வட்டாரங்கள் கூறுகிறது.

255 கி.மீ தர்புக் ஷியோக் தௌலத் பெக் ஓல்டி சாலையையும், அதற்கு முன்னாள் இருக்கும் கரகோரம் பாஸை நெருங்க இயலும் என்ற காரணத்தால் கல்வானின் ஊடுருவல் அச்சத்தை உருவாக்கியுள்ளது. சனிக்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தை சுமார் 6 மணி நேரம் நீடித்தது. முக்கியமான பேச்சுவார்த்தை 3 மணி நேரம் மட்டுமே நடைபெற்றது. மிச்ச நேரம் மொழி பெயர்ப்பிற்கு செலவிடப்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளது. இரண்டு தரப்பு பிரச்சனைகளையும் நிவர்த்தி செய்ய பேச்சுவார்த்தை நீட்டிக்கப்பட வேண்டும் என இரு தரப்பும் ஒப்புக் கொண்டது. கூட்டத்திற்குப் பிறகு, இராணுவம் பாதுகாப்பு அமைச்சகம், வெளியுறவு அமைச்சகம் மற்றும் பிரதமர் அலுவலகத்திற்கு விளக்கமளித்தது.

சீனாவின் செயல்பாட்டினை பிரதிபலிக்கும் வகையில், அதிக உயரம் கொண்ட இந்த பகுதியில் ராணுவ துருப்புகள் விரிவுபடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. கொரோனா நோய் தொற்றின் காரணமாக ஆரம்ப கால செயல்பாடுகளில் தொய்வு இருந்தாலும் தற்போது அதிக அளவில் ராணுவத்தினர் மற்றும் கனரக ஆயுதங்கள் இந்த பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

லடாக் குளிர்பிரதேச வானிலைக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக் கொள்ள, ராணுவத்தினருக்கு தேவையான தங்குமிடங்கள், தளவாடங்கள் மற்றும் ஆயுதங்களை உருவாக்குதல், இந்த பகுதியில் ராணுவ படையை அதிகரிப்பதில் ஏற்பட்ட சவால்களாகும். இந்த கடினமான பொருளாதார நிலையில் இது மேலும் சவாலாக அமைந்தது. எல்.ஒ.சியில் பாகிஸ்தானின் செயல்பாடு தீவிரமாக இருக்கின்ற காலத்திலும், காஷ்மீரில் போராட்டக்காரர்களின் செயல்பாடுகள் மீண்டும் தலைதூக்கும் இந்த நேரத்தில் ராணுவ பட்ஜெட்டில் 20% குறைப்பது குறித்து அரசு அறிவித்துள்ளது என்று இந்தியாவின் ராணுவ தளபதி ஜெனரல் எம்.எம். நரவானே கடந்த மாதம் நடைபெற்ற செமினார் ஒன்றில் கூறியுள்ளார்.

எல்.ஐ.சியின் மற்ற இடங்களில் பி.எல்.ஏ எந்த ஆச்சரியத்தையும் அளிக்காது என்று அதிகாரி ஒருவர் கூறினார். எல்.ஐ.சி மீது இரு தரப்பினரும் ஒப்புக் கொண்ட கால்வான், ஹாட் ஸ்பிரிங் மற்றும் நகு லா போன்ற பகுதிகளில் அண்மையில் நடந்த சம்பவங்களிலிருந்து இந்த அச்சங்கள் உருவாகின்றன. , சீனாவின் குளோபல் டைம்ஸ், சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்துக்களை அடிக்கடி எதிரொலிக்கிறது, பி.எல்.ஏவால் “பெரிய அளவிலான சூழ்ச்சி” இருப்பதாக அறிக்கை செய்தது. ஆயிரக்கணக்கான துணை ராணுவத்தினரையும் கவச வாகனங்களையும் ஒரு சில மணிநேரங்களில் இங்கே நிலை நிறுத்தலாம் என்று கூறியுள்ளது.

மேலும் படிக்க : சென்னையில் கொரோனா சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகள் முழுவீச்சில் தயார்

ஹை ஆல்ட்டிட்யூட் பார்டர் எனப்படும் அதி உயர மலைப்பகுதிகளில் அமைந்துள்ள எல்லை பகுதிகள் ஏற்பட்ட பிரச்சனைகள் மத்தியில் தான் துருப்புகளின் ஆக்கிரமிப்பு பிரச்சனைகள் தலை தூக்கியது. இதன் காரணமாக இரு தரப்பினரும் தங்களின் எல்லை பாதுகாப்பினை வலுப்படுத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது என்று அந்த பத்திரிக்கை செய்தி வெளியிட்டது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Delhi prepares for long haul military diplomatic engagements to continue

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X