Delhi Starvation Deaths: இந்த வாரத் தொடக்கத்தில், சரியான உணவு இல்லாத காரணத்தால் டெல்லியில் மூன்று குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன.
வறுமை மட்டும் பட்டினியால் தான் இம்மூவரும் உயிரிழந்துள்ளனர் என அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இச்செய்தி பெரிய பரபரப்பினையும் ஆழ்ந்த வருத்தங்களையும் மக்களிடையே கொண்டு சேர்த்தது. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், டெல்லி துணை முதல்வர் சிசோடியா ஒரு முக்கியமான கேள்வி ஒன்றினை எழுப்பியுள்ளார்.
மக்கள் தொகை நெருக்கம் அதிகமாக உள்ள பகுதிகளில் 500 மீட்டர் தொலைவுக்குள் அங்கன்வாடிகள் வைக்கப்பட வேண்டும் என்ற சட்டம் நடைமுறையில் இருக்கிறது. அங்கிருக்கும் குழந்தைகளுக்கு கல்வி மற்றும் உணவினை தரும் வகையில் அது கட்டமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
இது போன்ற சட்டம் நடைமுறையில் இருக்க, இம்மூன்று குழந்தைகளும் உயிரிழந்த பகுதியில் மொத்தம் நான்கு அங்கன்வாடிகள் செயல்பட்டு வருகிறது.
இறந்து போன குழந்தைகளின் அப்பா ஆட்டோ ரிக்சா ஓட்டுகின்றவர். அவருடைய ஆட்டோ ரிக்சாவினை யாரோ திருடிக் கொண்டு போக, அவர்கள் தங்கியிருந்த வீட்டிற்கு வாடகை தர இயலவில்லை. அதனால் அவர்கள் அவ்வீட்டை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டார்கள்.
வெகுநாட்கள் சரியான உணவு கிடைக்காமல், ஊட்டச்சத்து பற்றாக்குறையுடன் காணப்பட்டிருந்தனர் அக்குழந்தைகள். அக்குழந்தைகளில் மூத்த பெண் மான்சி (8)யின் பெயர் 2013 மற்றும் 2014ம் ஆண்டுகளில் அங்கன்வாடியில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் அதன்பின்பு அவர்கள் யாரும் அங்கன்வாடிக்கு வருவதில்லை என்று அங்கன்வாடி ஊழியர் பதில் கூறியுள்ளார்.
To read this article in English
ஒரு அங்கன்வாடியின் மூலமாக 800 - 1000 நபர்களுக்கு உணவிடும் வகையில் அமைக்கப்படிருக்கிறது. ஆனால் இக்குடும்பம் தொடர்ந்து பல்வேறு இடங்களுக்கு வீடு மாறிக் கொண்டே இருந்ததால் அவர்களை கண்டடைவதில் சிக்கல்கள் நீடித்ததாக குறிப்பிட்டார்கள் அந்த ஊழியர்கள்.
மக்களுக்குத் தேவையான அனைத்துவிதமான நலத்திட்டங்களும் செய்யப்பட்ட போதிலும் எதனால் இது போன்ற நிலை உருவானது? எங்கே நாம் முறையாக செயல்படாமல் போனோம் என்ற கேள்விகளை மக்கள் மத்தியிலும், தனக்குள்ளும் கேட்டுக் கொண்டிருக்கிறார் டெல்லி துணை முதல்வர் மற்றும் டெல்லி பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு நல அமைச்சருமான சிசோடியா.