பாலியல் பலாத்காரம் குறித்து கருத்து: ஐ.ஏ.எஸ். தேர்வில் முதலிடம் பிடித்த அதிகாரி மீது நடவடிக்கை!

தாயை பலாத்காரம் செய்த செய்தி துணுக்குடன், தனது சொந்த் கருத்து

பாலியல் பலாத்காரம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்த ஜம்மு காஷ்மீர் கலெக்டர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

கடந்த 2010 ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்வில் முதலிடம் பிடித்து ஜம்மு காஷ்மீர் மாவட்ட ஆட்சியராக தேர்வானவர் ஷா ஃபெஷல். சமூகவலைத்தளங்களில் அதிகளவில் ஆர்வம் காட்டி வரும் தன்னுடைய ஃபேஸ்புக், டிவிட்டர் பக்கங்களில் நாள் தோறும் பல தகவல்களை பகிரிந்துக்கொள்வார்.

அப்படித்தான் கடந்த சில தினங்களுக்கு முன்பு, ஷா ஃபெஷல் தனது டிவிட்டர் பக்கத்தில் பாலியல் வன்கொடுமை தொடர்பான ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில், ஆபசமான படங்களுக்கு அடிமையானவர் தாயை பலாத்காரம் செய்த செய்தி துணுக்குடன், தனது சொந்த் கருத்தான”இதே நிலை ஏற்பட்டால் ரேபிஸ்தான் உருவாகும் நிலை ஏற்படும்” என்று கூறியிருந்தார்.

இதனால் கடும் அதிருப்தி அடைந்துள்ள மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை ஐஏஎஸ் அதிகாரி ஹாவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். அந்த கடிதத்தில், அரசின் பொது ஊழியர், அதிகாரிக்கான தகுதி இன்றி செயல்பட்டதால் ஒழுங்கு நடவடிக்கைக்கு மாநில அரசிடம் பரிந்துரைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

இந்த கடிதத்தையும் உடனே தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ள அதிகாரி ஷா, தெற்காசியாவில் நிலவும் பலாத்கார கலாச்சாரம் குறித்த தனது கருத்துக்கு ஆங்கிலோயர் காலத்தைப் போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

×Close
×Close