தீபக் மிஸ்ரா பதவி நீக்க தீர்மானம்: ஊடகங்களை தடுத்து நிறுத்த முடியுமா?

விவாதங்களும் தேசிய ஊடகங்களில் தீயாக பரவி வருகிறது.

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கும் விவகாரத்தில்   ஊடகங்கள் விவாதங்கள் வருத்தை அளிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நீதிபதி லோயா மரணம் தொடர்பான  வழக்கில் நேற்று  தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வழங்கினார். அதில், “ நீதிபதி லோயா மரணம் இயற்கையாக நடந்துள்ளது. இந்த வழக்கில் சுதந்திர விசாரணை கேட்பது நீதித்துறை மீதான தாக்குதல்.  லோயா மரணத்தில் சிறப்பு விசாரணை தேவை இல்லை” என்று உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில்,  தீபக் மிஸ்ராவின்  தீர்ப்பு காங்கிரஸ் உட்பட பல்வேறு கட்சிகளுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.அதனைத் தொடர்ந்து, இன்று,  காங்கிரஸ் மூத்தத் தலைவர் குலாம் நபி ஆசாத் தலைமையில் 64 எம்பிக்கள் கையெழுத்திட்ட மனு ஒன்று துணை குடியரசு தலைவர் வெங்கய்யா நாயுடுவிடம்  அளிக்கப்பட்டது.

இதில்  உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி விலக்கோரி  காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ்வாதி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், இந்திய கம்யூனிஸ்ட்,  மார்க்சிஸ்ட் , தேசியவாத காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த எம்பிக்கள்  கையெழுத்திட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

நாட்டில் முதல் முறையாக தலைமை நீதிபதியை தகுதி நீக்கம் செய்ய தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதுக் குறித்து விவாதங்களும் தேசிய ஊடகங்களில்  தீயாக பரவி வருகிறது. இந்நிலையில், இதுக்குறித்து  வருத்தம்  தெரிவித்துள்ள  உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தில் ஊடகங்களை தடுத்து நிறுத்த  முடியுமா என்று கேள்வி எழுப்பியுள்ளனர் என்றும் அட்டர்னி ஜெனரல் இடம் கேட்டுக் கொண்டுள்ளது.

இதற்கு, பதில் அளித்துள்ள நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி, அசோக் பூஷன்  ஆகியோர், “ இந்த வழக்கு குறித்து  எந்தவித அதிகார்பூர்வ விசரணையையும் நடைபெறாத நிலையில், ஊடகங்களின் வாயை அடக்குவது கடினம்” என்று தெரிவித்துள்ளனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close