Advertisment

வருமான வரி தாக்கல் செய்யும்போது இனி டென்ஷன் வேண்டாம்! சந்தேகங்களை தீர்க்க வந்துவிட்டது ‘ஆன்லைன் சாட்’

சந்தேகங்களை உடனடியாக தீர்க்கும் விதமாக, வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் ’ஆன்லைன் சாட்’ வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

author-image
Nandhini v
புதுப்பிக்கப்பட்டது
New Update
income tax department, income tax filings, online chat

வருமான வரி தொடர்பாக வரி செலுத்துவோருக்கு ஏற்படும் சந்தேகங்களை உடனடியாக தீர்க்கும் விதமாக, வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் ’ஆன்லைன் சாட்’ வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisment

வருமான வரி தாக்கல் செய்யும்போது பலருக்கு டென்ஷன் தலைக்கேறிவிடும். பல கேள்விகள் எழும். அதற்கெல்லாம், விடை தெரிந்து வரி தாக்கல் செய்வதற்குள் போதும் போதுமென்றாகிவிடும். இனி அந்த பிரச்சனை இல்லை. வருமான வரித்துறையின் இணையத்தளத்தில், ‘ஆன்லைன் சாட் - உங்கள் சந்தேகங்களை கேளுங்கள்’ (Online Chat - ask your query) என்ற ஐகான் தென்படும். அதை, க்ளிக் செய்தால், உங்களுடைய சந்தேகங்களை கேட்கலாம். அதற்கு தீர்வும் உடனடியாக கிட்டிவிடும். அதற்கு உங்களின் பெயர், மின்னஞ்சல் முகவரியை மட்டும் வழங்கினால் போதுமானது.

உங்களின் கேள்விகளுக்கு, வருமான வரித்துறை நிபுணர்களின் கருத்துகளின் அடிப்படையிலேயே தீர்வுகள் அளிக்கப்படும்.

இந்த புதிய வசதியை உருவாக்க, வருமான வரித்துறை நிபுணர்கள் பலரின் பங்களிப்புகள் உண்டு. மேலும், இந்த வசதிக்கு பொதுமக்களின் ஆதரவை பொறுத்து, மேலும் சில கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.

இந்த ஆன்லைன் சாட் வசதி மூலம், பயனாளர்கள் திரட்டும் தகவல்களை எதிர்கால தேவை கருதி, தங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிக்கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், வரி செலுத்துவோர் பட்டய கணக்காளர்களிடம் செல்லாமல், வீட்டிலிருந்தபடியே வரியை செலுத்துவது எளிதாகும்.

ஆன்லைன் வசதி தவிர்த்து, வரி செலுத்துவோரின் சந்தேகங்களை நேரடியாக தீர்க்க, அக்டோபர் மாதத்தில் துறை ரீதியிலான நிபுணர்கள் 7,600 நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Income Tax Department
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment