‘மொடெரா’ கூட்டத்திற்கு நிகர் எதுவும் இல்லை – டொனால்ட் ட்ரம்ப்

அகமதாபாத்தின் மொடெரா மைதானத்தில் வீற்றிருந்து கூட்டத்தைக் கண்டபின் வேறு எந்த கூட்டமும் தன்னை ஆச்சரியப்படுத்தவில்லை என்று டொனல்ட் ட்ரம்ப் கூறினார்.

Donald Trump India Visit, Ahmedabad’s Motera Stadium, Narendra Modi

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று தென் கரோலினாவில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். அதில், கிட்டத்தட்ட பதினைந்தாயிரம் மக்கள் கலந்து கொண்டனர். அப்போது,பேசிய டொனால்ட் டிரம்ப் “அகமதாபாத்தின் மொடெரா மைதானத்தில் வீற்றிருந்து கூட்டத்தைக் கண்டபின் வேறு எந்த கூட்டமும் தன்னை ஆச்சரியப்படுத்தவில்லை” என்று தெரிவித்தார்.

“நான் இந்தியப் பிரதமர் மோடியுடன் இருந்தேன். பெரிய மனிதர், இந்திய மக்களால் விரும்பப்படுபவர். எங்களுக்கு ஒரு ஆச்சரியமான விஷயம் இருந்தது. அது ஒரு பெரிய கூட்டம். பொதுவாக, எனக்கு வரும் கூட்டத்தைப் பற்றி நான் பெருமையாக பேச விரும்புபவன், ஏனென்றால் யாருக்கும்  இல்லாத அளவிற்கு எனக்கு கூட்டம் வரும், இந்தியாவுக்குச் சென்றபின் எந்த கூட்டத்தைப் பார்த்தும் நான் ஆச்சரியப் பட முடியாது.

இதை நினைத்துப் பாருங்கள், அவர்கள் 1.5 பில்லியன் மக்களைக் கொண்டுள்ளனர். நம்மிடம் 350……  அவர்களுக்கு மிகுந்த அன்பு இருக்கிறது. அவர்களுக்கு ஒரு சிறந்த தலைவர் இருக்கிறார், அவர்களுக்கு இந்த நாட்டு மக்கள் மீது மிகுந்த அன்பு உண்டு. இது உண்மையில் ஒரு பயனுள்ள பயணம், ” என்று  கூறினார்.

அதிபர் டொனால்ட் டிரம்பின் முதல் இந்திய சுற்றுப் பயணத்தில் ,மனைவி மெலனியா டிரம்ப் மற்றும் ஒரு உயர் மட்ட தூதுக்குழுவும் உடன் வந்தனர். இவான்கா டிரம்ப் (அதிபரின் மகள் )மற்றும் அவரது கணவர் ஜாரெட் குஷ்னர் ஆகியோரும் பயணித்தனர்.

அகமதாபாத்தில் அவரை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார். பின்னர், அமெரிக்க ஜனாதிபதி பிரதமர் மோடியுடன் அகமதாபாத்தின் மொடெரா மைதானத்தில் நடந்த “நமஸ்தே டிரம்ப்” நிகழ்வில் உரையாற்றினார்.  இரு தலைவர்களும் இரு நாடுகளுக்கும் இடையே வளர்ந்து வரும் உறவுகளை பாராட்டினர்.

பின்னர் டிரம்ப் தாஜ்மஹால் பார்வையிட ஆக்ரா மாவட்டத்திற்கு விரைந்தார். செவ்வாய்க்கிழமை காலை புதுடெல்லியை ராஷ்டிரபதி பவனில் இந்திய ஜனாதிபதி வரவேற்பைப் பெற்றார். இதைத் தொடர்ந்து, டொனல்ட் ட்ரம்ப்-  பிரதமர் மோடி கலந்து கொண்ட தூதுக்குழு அளவிலான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. மூன்று ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டன.

அமெரிக்க ஜனாதிபதியின் பயணத்தின் போது, ​​டெல்லி மிகப்பெரிய வன்முறைகளைக் கண்டது. குடியுரிமை திருத்தம் சட்டம் குறித்து கேட்டபோது, இந்திய ​​பிரதமரிடம்  இது குறித்து விவாதிக்கவில்லை என்றும், “நான் அதை இந்தியாவுக்கு விட்டுவிட விரும்புகிறேன்” என்றும் டிரம்ப் கூறினார். டெல்லியில் நடந்த வன்முறைகள் குறித்து கேட்டபோது, ​​“நான் அதைக் கேள்விபட்டேன், ஆனால் நான் அவருடன் (மோடி) விவாதிக்கவில்லை” என்றார்.

டெல்லியில் ஏற்பட்ட வன்முறைகளில் இதுவரை 42 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Donald trump says its hard to be enthused after delhi visit

Next Story
சுயதணிக்கை செய்துகொள்ளும் கலை – பண்பாட்டு உலகம் !freedom of speech and expression, speaking freely, speaking without fear, arts and culture, censorship, self censorship, survey, indian express, indian express news
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com