‘முத்தலாக்’ விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம்: பிரதமர் மோடி வேண்டுகோள்

முத்தலாக் விவகாரத்தை அரசியலாகக்க வேண்டாம் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

By: Updated: June 22, 2017, 03:31:06 PM

முஸ்லிம் மதத்தை சார்ந்த ஒருவர் தனது மனைவியை விவாகரத்து செய்ய ’முத்தலாக்’ கூறும் நடைமுறை உள்ளது. இது தொடர்பான வழக்கில், முத்தலாகக் முறையானது முஸ்லிம் பெண்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் உள்ளதாக குறிப்பிட்ட அலகாபாத் உயர் நீதிமமன்றம், முத்தலாக் முறை அரசியல் சாசனத்துக்கு எதிரானது என தீர்ப்பு வழங்கியது.  இது தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், அனைத்து இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் முத்தலாக் முறைக்கு ஆதரவாக உள்ள நிலையில், மத்திய அரசும் முத்தலாக் முறைக்கு எதிராக வாதாடுகிறது.

இதனால், முத்தலாக் நடைமுறையானது நாடு முழுவம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக பெரும்பான்மையுடம் ஆட்சி அமைத்தது. பாஜக ஆட்சிக்கு வரும்பட்சத்தில் முத்தலாக் முறை குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பாஜக தெரிவித்திருந்தது. ஆனாலும், இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வரும் தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அறிஞர் பசவேஸ்வராவின் பிறந்தநாளையொட்டி தில்லியில் நிகழ்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பிரதமர் மோடி தெரிவித்ததாவது: முத்தலாக் விவகாரத்தை அரசியல் ஆக்க வேண்டாம்.  இஸ்லாமிய சமூதாயத்தில் இருந்து வரும் சிறந்த மனிதர்கள், இந்த நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மேலும், இந்த நடைமுறையில் இருந்து தங்களது தாய் மற்றும் சகோதரிகள் ஆகியோரை விடுவிப்பார்கள் என நம்புகிறேன். இந்தியாவில் இருக்கும் இஸ்லாமியர்கள் இந்தியர்களுக்கு மட்டுமல்லாது, உலகத்தில் உள்ள இஸ்லாமிய சமூகத்திற்கே நல்வழியை காட்ட வேண்டும் என்று கூறினார்.

இந்த நடவடிக்கைக்கு இஸ்லாமிய சமூக அமைப்புகள் பல எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன என்ற போதிலும், மத்திய அரசு முத்தலாக் நடைமுறைக்கு எதிராக குரல் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Dont allow issue to be politicised on triple talaq says pm narendra modi

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X