Advertisment

கட்சிக்காக போராடுவதற்கு தலைவராக இருக்க வேண்டியதில்லை - ராகுல் காந்தி

காந்தி குடும்பத்தை சாராத ஒருவர் கட்சியின் தலைவராக வேண்டும் என்ற ராகுல் காந்தியின் விருப்பத்திற்கு முழு ஒத்துழைப்பு - பிரியங்கா காந்தி

author-image
WebDesk
New Update
முக்கியப் பொறுப்புகளில் ராகுல் டீம்: காங்கிரஸில் அதிரடி மாற்றம்!

Latest News Live Updates

 Manoj C G

Advertisment

Don’t need to lead Congress to fight, work for it :  காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்த ஒரு வருடம் கழித்து, கட்சிக்காக போராடுவதற்கோ அல்லது அதை வலுப்படுத்துவதற்கோ அந்த பதவியில் இருக்க வேண்டிய அவசியமில்லை என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். மேலும் அவரது சகோதரி, ஏ.ஐ.சி.சி பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வாத்ரா, காந்தி குடும்பத்தை சாராத ஒருத்தர் காங்கிரஸ் கட்சித் தலைவராக நியமிக்கப்பட வேண்டும் என்ற அவர் சகோதரரின் முடிவில் உடன்படுவதாக அவர் கூறியுள்ளார் என்று, புதிய புத்தகத்தில் அவர்கள் அளித்த நேர்காணல்களின்படி அறிந்து கொள்ள முடிகிறது.

கட்சியை வழிநடத்தும் தலைமைப் பண்போடு ஏராளமானோர் கட்சியில் உள்ளனர். மற்றொருவர் கட்சியின் தலைவராக இருந்தால் அவர் எனக்கும் தலைவர். அவர் நான் உ.பி.யில் வேலை செய்யக் கூடாது மாறாக அந்தமான் நிக்கோபர் தீவுகளில் சென்று வேலை செய்யுங்கள் என்று கூறினால் நான் மகிழ்ச்சியுடன் அங்கே செல்வேன் என்று பிரியங்கா காந்தி கூறியுள்ளார். பிரதீப் சிபர் மற்றும் ஹர்ஷ் ஷா ஆகியோரால் எழுதப்பட்ட இந்தியா டுமாரோ (India Tomorrow ndia Tomorrow: Conversations with the Next Generation of Political Leaders ) என்ற புத்தகம் கடந்த வாரம் வெளியானது.

To read this article in English

கட்சி அவரை மீண்டும் தலைவராக பொறுப்பேற்க வேண்டும் என்று கூறினால் என்ன செய்வீர்கள் என்று ராகுல் காந்தியிடம் கேட்டபோது, “நான் இங்கே தான் இருக்கின்றேன். காங்கிரஸ் கட்சிக்காக போராட நான் எப்போதும் தயார் நிலையில் இருக்கின்றேன். ஏன் என்றால் நான் கட்சியை நம்புகின்றேன். கட்சிக்காக போராடவும், கட்சியை வலுப்பெற செய்யவும் நான் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்க வேண்டியதில்லை என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

பொறுப்பேற்கும் பண்பினை காங்கிரஸ் கட்சி வளர்த்துக் கொண்டு வருகிறது. அது மேல் இடத்தில் இருந்து தான் துவங்குகிறது. 2019ம் ஆண்டு பொதுத்தேர்தல் தோல்விக்கு நான் தான் பொறுப்பு. அதன் விளைவாக நான் பதவி விலக வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தேன் என்கிறார் ராகுல். ராகுலின் முடிவை அவர் குடும்பத்தினர் ஆதரித்தனரா என்று கேள்வி எழுப்பிய போது, நாங்கள் இதை குடும்பமாக விவாதித்தோம். நான் என்னுடைய அம்மா மற்றும் தங்கையின் கருத்துகளை முழுமையாக கவனித்து பாராட்டினேன் என்று கூறியுள்ளார் ராகுல் காந்தி.

கட்சியில் குடும்பத்தின் பங்கு குறித்தும், காந்தி குடும்பத்தினர் தொடர்ந்து தலைமை பங்கு வகித்தல் குறித்தும், புதிய தலைவரை தேர்வு செய்வது குறித்தும் பிரியங்கா காந்தியிடம் பேசிய போது அவர், நான் என்னுடைய மற்றும் ராகுலுடைய பங்கினை பார்க்கின்றேன். மற்ற இளம் தலைவரைகளை முன்னேற்றி அவர்களுக்கு பொறுப்புகள் கொடுத்து தலைவர்களாக மாற்ற எங்களால் முடிந்திருந்தால் நாங்கள் ஏதாவது சாதித்திருப்போம்.

பொதுத்தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்றுக்கொண்டு தலைவர் பதவியை ராஜினாமா செய்யும் எண்ணத்தில் ராகுல் உறுதியுடன் இருந்தார். கடிதத்தில் இல்லை. ஆனால் மற்ற அனைத்து இடங்களிலும் காந்தி குடும்பத்தை சாராத ஒருவர் கட்சியின் தலைமை பொறுப்பேற்க வேண்டும் என்று கூறியுள்ளார், இந்த விசயத்தில் நான் என்னுடைய சகோதரருக்கு முழுமையான ஆதரவை அளிக்கின்றேன். கட்சி தன்னுடைய சொந்த பாதையை தீர்மானிக்க வேண்டும்.

தேர்தல் தோல்விக்கு பிறகு, உட்கட்சி உறுப்பினர்களுடன் ஆலோசனை கூட்டத்தில் ராகுல் ஈடுபட்டு, காந்தி குடும்பத்தை சாராத ஒருவர் காங்கிரஸ் கட்சி தலைவராக பொறுப்பேற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாக அந்த புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

கட்சியில் காந்தி குடும்பத்தினர் இருப்பது, கட்சியின் புதிய தலைவரை ஒரு போதும் குறைத்து மதிப்பிடாது. நாங்கள் நினைப்பதை போல் இல்லாமல் இருந்தால் குறை மதிப்பிற்கு ஆளாவார்கள் என்று நினைக்கின்றேன். நாங்கள் பின்வாங்கி மற்றவர்களுக்கு சுதந்திரமாக முடிவெடுக்கும் உரிமையை தந்தால் அப்படி ஒரு சூழல் உருவாவதற்கு வாய்ப்பில்லை என்கிறார் பிரியங்கா காந்தி.

கட்சியின் ஜனநாயகதன்மையை காந்தி குடும்பத்தினர் நம்புகின்றனர். இளைஞர் காங்கிரஸ் மற்றும் என்.எஸ்.யு.ஐயில் உள்தேர்தல்களை நடத்தி இளம் தலைவர்களை தேர்ந்தெடுத்தார் ராகுல் காந்தி என்று சுட்டிகாட்டுகிறார் பிரியங்கா. ஆனாலும், அதற்காக கட்சிக்குள்ளேயே ராகுல் தாக்கப்பட்டார் என்கிறார் பிரியங்கா. கணவர் ராபர் வத்ரா மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்தும் தனது குழந்தைகளுடன் அதனை அவர் எவ்வாறு கையாண்டார் என்றும் பிரியங்காவிடம் கேள்விகள் முன்வைக்கப்பட்டது.

இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட போது நான் என்னுடைய 13 வயது மகனிடம் சென்று அனைத்து பண பரிவர்த்தனைகளையும் காட்டினேன். புகார்கள் குறித்தும், எதனால் இந்த புகார்கள் எழுந்துள்ளது என்பதையும், எது உண்மை என்பதையும் நான் அவனிடம் கூறி மதிப்பீடு செய்து கொள் என்று கூறினேன். இதையே தான் நான் என் மகளிடமும் கூறினேன்.

என் குழந்தைகளிடம் நான் எதையும் மறைப்பதில்லை. நான் செய்யும் தவறுகள் என்னிடம் இருக்கும் பலவீனம் என அனைத்தையும் நான் அவர்களிடம் கூறியுள்ளேன். நான் அவர்களிடம் வெளிப்படையாகவே நடந்து கொள்கிறேன் என்றும் ப்ரியங்கா காந்தி கூறியுள்ளார்.

To read this article in English

பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு வத்ரா மீது அதிக அளவு தாக்குதல் நடைபெற்றது அவர் அதிக மன அழுத்தத்தை சந்தித்தார். அமலாக்கத்துறையினரால் பல மணி நேரம் விசாரிக்கப்பட்டார். குழந்தைகள் இப்போது வளர்ந்துவிட்டனர். தொலைக்காட்சி விவாத மேடைகளில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் அவர்கள் தினமும் பார்த்து வருகின்றனர். அவர்களுக்கு இது கடினமான சூழல் தான்.  ஆண்கள் படிக்கும் பள்ளியில் படிக்கும் என் மகன் இதனால் நிறைய பிரச்சனைகளை சந்திருக்கிறார் என்றும் அந்த புத்தகத்தில் ப்ரியங்கா காந்தி கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Rahul Gandhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment