Advertisment

”சபரிமலைக்குள் பெண்களை அனுமதித்தால், அது செக்ஸ் சுற்றுலா தலமாகிவிடும்”: தேவஸ்தான தலைவர் சர்ச்சை கருத்து

”சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதித்தால், அக்கோவில் தாய்லாந்தை போன்று செக்ஸ் சுற்றுலா தலமாகிவிடும்”, என பிரயார் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

author-image
Nandhini v
புதுப்பிக்கப்பட்டது
New Update
Sabarimala temple, kerala Government, Supreme Court,

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதித்தால், அக்கோவில் தாய்லாந்தை போன்று செக்ஸ் சுற்றுலா தலமாகிவிடும் என, திருவிதாங்கூர் தேவஸ்தான வாரியத்தின் தலைவர் பிரயார் கோபாலகிருஷ்ணன் தெரிவித்திருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10-50 வயதிலான பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இது, அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது எனவும், பெண்களை புறக்கணிக்கும் விதமாகவும் உள்ளது எனக்கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை இனி 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி, வெள்ளிக்கிழமை உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை கேரள அரசு வரவேற்றது.

இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்த திருவிதாங்கூர் தேவஸ்தான வாரியத்தின் தலைவர் பிரயார் கோபாலகிருஷ்ணன் கூறியதாவது, “சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதித்தால், அது தாய்லாந்தைபோல் செக்ஸ் சுற்றுலா தலமாகிவிடும். பெண்களை கோவிலுக்குள் அனுமதித்தால் அவர்களுடைய பாதுகாப்புக்கு நாங்கள் உத்தரவாதம் அளிக்க முடியாது. தாய்லாந்தை போல் ஐயப்பன் கோவிலை செக்ஸ் சுற்றுலா தலமாக மாற்ற நாங்கள் விரும்பவில்லை. உச்சநீதிமன்றமே அனுமதித்தாலும், சுயமரியாதை மிக்க பெண்கள் கோவிலுக்குள் செல்ல மாட்டார்கள். கண்ணியமான குடும்பத்தை சேர்ந்த பெண்கள் சபரிமலை வரமாட்டார்கள்”, என அவர் கூறினார்.

இவரது கருத்துக்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ள கேரள அரசு, அக்கருத்தை தேவஸ்தானம் திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன், “கோவிலுக்குள் வரும் பெண்கள் சுத்தமானவர்களா என்பதை கண்டறிய இயந்திரம் கண்டுபிடித்தால்தான் அவர்களை அனுமதிக்க முடியும்.”, என பிரயார் கோபாலகிருஷ்ணன் கூறியிருந்தார். கோவிலுக்குள் வரும் பெண்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கிறதா? இல்லையா? என்பதை சோதிக்கும் இயந்திரம் வேண்டும் என்பதையே அவர் அப்படி கூறியிருந்தார். அப்போது இதற்கு கடும் விமர்சனம் எழுந்தது. ’Happy To Bleed’ என்ற பெயரில் பெண்கள் பிரச்சாரத்தை முன்னெடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Supreme Court Kerala Government
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment