மாநிலங்களவை உறுப்பினர்களான மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொது செயலாளர் சீத்தாரம் யெச்சூரி, காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது பட்டேல், சாந்தாராம் நாயக் உள்பட 10 பேரின் பதவிக்காலம் ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் முடிவடைகிறது.
இந்த காலியிடங்களை நிரப்ப ஜூன் 8ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று கடந்த 16ம் தேதி தேர்தல் கமிஷன் அறிவித்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்குவதாக இருந்தது. இந்நிலையில் இந்த தேர்தலை ரத்து செய்வதாக தேர்தல் கமிஷன் நேற்று மாலை அறிவித்தது. புதிய தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
ஜூலை மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு நிகழ்த்த வாய்ப்பு உள்ளதாக அரசியல் கட்சிகள் குற்றம் சுமத்துகின்றன. இந்த குற்றச்சாட்டுக்களை நிருபிக்க ஜூன் 3ம் தேதி தேர்தல் கமிஷன் வாய்ப்புக் கொடுத்துள்ளது. இந்த காரணங்களால் மாநிலங்களவை தேர்தல் ரத்து செய்யப்பட்டதாக தெரிகிறது.