சட்ரோவிரோத பணப்பரிவர்தணை தடுப்புச் சட்டத்தின் கீழ் கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
மும்பையை தலைமையாக கொண்டு செயல்பட்டு வருகிறது ஐஎன்எக்ஸ் என்ற தனியார் தொலைக்காட்சி நிறுவனம். இந்த நிறுவனத்தின் இயக்குனர்களாக இந்திராணி முகர்ஜி, அவரது கணவர் பீட்டர் முகர்ஜி ஆகியோர் உள்ளனர். இதனிடையே, ஐஎன்எஸ் நிறுவனத்துக்கு வெளிநாட்டில் இருந்து அதிக முதலீடு வந்ததாகவும், அதற்கு முந்தைய மத்திய அரசின் சார்பில் அனுமதியளிக்கப்பட்டபோது முறைகேடு நடந்ததாகவும் சிபிஐ குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளது.
அன்னிய முதலீட்டிற்கு அனுமதி வழங்கியது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் மற்றும் அவரதுது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோரின் வீடு அலுவலகங்களில் சிபிஐ அதிரடி சோதனை நடத்தித்தியது.
இந்நிலையில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை இன்று வழக்குப் பதிவு செய்துள்ளது. ஏர்செல் மேக்ஸிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரத்தோடு தொடர்புடையதாக கருதப்படும் நிறுவனத்தின் தொடர்பு குறித்தும், வாசன் ஐ கேர் நிறுவனத்தில் அன்னிய முதலீடு செய்யப்பட்டது குறித்தும் அமலாக்கத்துறை ஏற்னெனவே விசாரணை மேற்கொண்டு வருகிறது.
கடந்த 2008-ம் ஆண்டு மத்திய அமைச்சராக ப சிதம்பரம் இருந்த கால கட்டத்தில், ஐஎன்எக்ஸ் நிறுவத்தில் அன்னிய முதலீட்டில் முறைகேடு நடந்ததாக கூப்படுகிறது. அப்போது, கார்த்தி சிதம்பரத்தோடு தொடர்புடையதாக கருதப்படும் நிறுவனத்தின் சார்பில் ஐஎன்எக்ஸ் நிறுவனத்திற்கு ஆலோசனை வழங்கப்பட்டதாகவும், அதற்கு கார்த்தி சிதம்பரம் மறைமுக வழியில் ரூ.10 லட்சம் ஆலோசனை கட்டணம் பெற்றதாகவும் சிபிஐ தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
இது தொடர்பாக சென்னையில் கார்த்தி சிதம்பரத்தின் வீடு, அலுவலகங்கள் மற்றும் முமபையில் உள்ள பீட்டர் முகர்ஜி, இந்திராணி முகர்ஜி ஆகியோர் வீடுகள் உள்ளிட்ட 14 இடங்களில் சிபிஐ கடந்த செவ்வாய் கிழமை அதிரடி சோதனை நடத்தியது.
ஆனால் இது தொடர்பாக கார்த்தி சிதம்பரம் கூறியபோது: எனது தந்தையின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படும் வகையில் இது தனிப்பட்ட முறையிலும், அரசியல் காழ்ப்புணர்ச்சியோடும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகும். சோதனையின் போது என்னிடம் இருந்து அவர்கள் எந்தவித ஆவணங்களையும் கைப்பற்றவில்லை. நான் எந்தவித தவறும் செய்யவில்லை. எனக்கு எதிராக எந்தவித குற்றச்சாட்டையும் நிரூபணம் செய்ய முடியாது என்று கூறினார்.
இந்நிலையில் கார்த்தி சிதம்பரம் இன்று அதிகாலை லண்டன் சென்றார்.