ஓட்டுநர் உரிமம் பெற குறைந்தபட்ச கல்வித்தகுதி தேவையில்லை – மத்திய அரசு அறிவிப்பு

ஹரியானா அரசு இது தொடர்பாக போக்குவரத்து அமைச்சரகத்திடம் கோரிக்கை வைக்க இந்த முடிவு வெளியானது

By: June 19, 2019, 10:46:11 AM

Education qualification to obtain driving license : மோட்டர் வாகனச்சட்டம் 1989ன் 8வது விதிமுறைப்படி, வாகனங்கள் ஓட்டுவதற்கான உரிமம் பெற நிச்சயம் 8வது வரை ஒருவர் கல்வி பயின்றிருக்க வேண்டும்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய ஆனால் பள்ளிக் கல்வி கற்காத திறமையான ஓட்டுநர்கள் இந்த சட்டத்தினால் பெரும் பாதிப்பினை அடைவதாக புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து நேற்று, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் ஒரு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டது.

அதில் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு குறைந்தபட்ச கல்வித் தகுதி தேவையில்லை என்று மத்திய அரசு எடுத்த முடிவினை தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து மோட்டர் வாகனச் சட்டம் 8வது விதிமுறையில் திருத்தம் கொண்டு வருவதற்கான நடைமுறைகளில் இறங்கியுள்ளது போக்குவரத்து அமைச்சரகம்.

மாற்றப்பட்ட விதிமுறை குறித்த வரைவு அறிவிப்பாணை விரைவில் வெளியாக உள்ளடது. கல்வித் தகுதி தேவையில்லை என்றாலும், சாலைகளில் வைக்கப்பட்டிருக்கும் போக்குவர்த்து குறியீடுகளை நன்றாக அறிந்து கொள்ளும் வகையில் அவர்களுக்கு வாகனப்பயிற்சியை தருவது பயிற்சிப்பள்ளிகளின் முக்கியக் கடமை என்று கூறியுள்ளது அமைச்சகம்.

ஹரியானா மாநிலத்தில் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய மேவத் பகுதி மக்கள் தான் இந்த கோரிக்கையை முதலில் வைத்தது. ஹரியானா அரசு இது தொடர்பாக போக்குவரத்து அமைச்சரகத்திடம் கோரிக்கை வைக்க இந்த முடிவு வெளியானது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : சென்னை, மதுரை, கோவை நகர சாலைகளில் விரைவில் எலெக்ட்ரிக் பஸ்கள் : அமைச்சர் தகவல்

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Education qualification to obtain driving license now drivers need not be class 8 pass

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X