Advertisment

உ.பி.-யை உலுக்கிய மூளை வீக்க நோய் காரணங்களும், தடுப்பு நடவடிக்கைகளும்

உத்தரப்பிரதேச மாநிலத்தை உலுக்கி எடுத்து வரும், குழந்தைகளின் உயிரிழப்புக்கு முக்கிய காரணமாக கூறப்படுவது எ‌ன்‌சிப‌லிடி‌ஸ் எ‌ன்ற மூளை ‌‌வீ‌க்க நோ‌ய்.

author-image
manik prabhu
புதுப்பிக்கப்பட்டது
New Update
உ.பி.-யை உலுக்கிய மூளை வீக்க நோய் காரணங்களும், தடுப்பு நடவடிக்கைகளும்

உத்தரப்பிரதேச மாநிலத்தை உலுக்கி எடுத்து வரும், 60 குழந்தைகளின் உயிரிழப்புக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், அதில் முக்கியமான ஒன்று எ‌ன்‌சிப‌லிடி‌ஸ் எ‌ன்ற மூளை ‌‌வீ‌க்க நோ‌ய்.

Advertisment

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள பாபா ராகவ்தாஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஆறு நாட்களில் மட்டும் குழந்தைகள் சுமார் 60 பேர் மூளை வீக்கம் ஏற்பட்டு அடுத்தடுத்த நாட்களில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கடந்த 7-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. குழந்தைகளின் உயிரிழப்புக்கு பிராண வாயு (ஆக்ஸிஜன்) நிறுத்தப்பட்டதே காரணம் என கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக நீதி விசாரணைக்கு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

குழந்தைகள் உயிரிழப்புக்கு ஆக்சிஜன் நிறுத்தப்பட்டது உள்பட பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. அதில், முக்கிய காரணமாக கூறப்படுவது எ‌ன்‌சிப‌லிடி‌ஸ் எ‌ன்ற மூளை ‌‌வீ‌க்க நோ‌ய்.

எ‌ன்‌சிப‌லிடி‌ஸ் என்றால் என்ன?

எ‌ன்‌சிப‌லிடி‌ஸ் எனும் நோய் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் அரிய நோய். மூளையில் "கடுமையான வீக்கத்தை" இந்த நோய் ஏற்படுகிறது. மருத்துவத்துறையில் இந்த "கடுமையான" என்ற வார்த்தை, திடீரென தோன்றி வேகமாக வளர்ச்சியடைவதை குறிக்கும் சொல் ஆகும். இந்த நோயால் பாதிக்கப்பட்ட நபருக்கு தீவிர மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது.

publive-image

எ‌ன்‌சிப‌லிடி‌ஸ் நோய் தாக்க காரணங்கள் என்ன?

இந்த நோய் அனைத்து வயதினரையும் தாக்கவல்லது. ஆனால், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் இந்நோயினால் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள். வழக்கமாக வைரஸ் நோய்தொற்று காரணமாக இந்நோய் ஏற்படுகிறது. சில சமயங்களில் மூளையின் சொந்த நோய் எதிர்ப்பு அமைப்பு தவறுதலாக் மூளையின் திசுக்களை தாக்குவதாலும் ஏற்படுகிறது.

ஜாப்ப‌னி‌ஸ் எ‌ன்‌சிப‌லிடி‌ஸ் என்றால் என்ன?

ஆசிய நாடுகளில் வைரஸ் மூலம் பரவும் எ‌ன்‌சிப‌லிடி‌ஸ் நோய், ஜாப்ப‌னி‌ஸ் எ‌ன்‌சிப‌லிடி‌ஸ் (JEV) என்றழைக்கப்படுகிறது. இந்த வைரஸ் நோய் கொசுக்கள் மூலம் பரவுகிறது. இந்த வைரஸ், டெங்கு, வெஸ்ட் நைல் வைரஸ் உள்ளிட்ட நோய்களை ஏற்படுத்தும் வைரஸ் வகையை சார்ந்தது.

உ‌த்‌தர‌ப்‌பிரதேச‌ம், ‌பீகா‌ர் உ‌ள்‌ளி‌ட்ட ‌வட மா‌நில‌ங்க‌ளி‌ல் ஜாப்ப‌னி‌ஸ் எ‌ன்‌சிப‌லிடி‌ஸ் எ‌ன்ற மூளை ‌‌வீ‌க்க நோ‌ய் வேகமாக‌ப் பர‌வி வரு‌கிறது. ஒ‌வ்வொரு ஆ‌ண்டு‌ம் கோடை கால‌ம் முடி‌ந்தது‌ம் இ‌ந்த நோ‌ய் பரவ துவ‌ங்கு‌கிறது. அதே‌ப்போல ஒ‌வ்வொரு ஆ‌ண்டு‌ம் பல நூ‌ற்று‌க்கண‌க்கான உ‌யி‌ர்களை ப‌லி வா‌ங்‌கி‌‌க் கொ‌ண்டிரு‌க்‌கிறது. பெரும்பாலான இளைஞர்கள் நோய் எதிர்ப்பு சக்தியை இயற்கையாகவே பெறுவதால், இ‌ந்த வைர‌ஸ் ‌சிறுவ‌ர்களையே பெருமளவில் தா‌க்கு‌கிறது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

publive-image

நோய் பரவும் விதம் மற்றும் அறிகுறிகள்:

கோடை கால‌ம் முடி‌ந்தது‌ம் இ‌ந்த நோ‌ய் பரவ ஆர‌ம்‌பி‌க்‌கிறது. மழை‌க் கால‌த்‌தி‌ல் தே‌ங்‌கி ‌நி‌ற்கு‌ம் ‌நீ‌ரி‌ல் கொசு‌க்க‌ள் த‌ங்களது இன‌ப் பெரு‌க்க‌த்தை செ‌ய்து ‌விடு‌கிறது. இதனா‌ல் இ‌ந்த நோ‌ய் வேகமாக‌ப் பரவ ஆர‌ம்‌பி‌க்‌கிறது. ‌வீடுக‌ளி‌ல் வள‌ர்‌க்க‌ப்படு‌ம்‌ ப‌ன்‌றி, பறவைக‌ள் போ‌ன்றவ‌ற்‌றி‌ன் உட‌‌ல்க‌ளி‌ல் இ‌ந்த வைர‌‌ஸ் காண‌ப்படு‌கிறது. ஆனா‌ல் இதே வைர‌ஸ் ம‌னித உடலு‌க்கு‌ள் செ‌ல்லு‌ம்போது ‌மிக மோசமான ‌விளைவுகளை ஏ‌ற்படு‌த்‌தி ‌விடு‌கிறது.

சாதாரண காய்ச்சல், தலைவலி தான் இந்த நோய்க்கான அறிகுறிகளாக இருக்கிறது. ஆனால், 250 பேரில் ஒருவருக்கு திடீரென ஏற்படும் அதிக காய்ச்சல், தலைவலி, விறைப்பு, தன்னிலையிழத்தல், கோமா மற்றும் வலிப்பு உள்ளிட்டவைகள் மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விடுகிறது. நோய்க்கான அறிகுறிகளை தென்பட்ட பின்னர், ஏற்படும் உயிரிழப்பு சுமார் 30 சதவீதம் ஆகும்.

சிகிச்சை முறைகள்:

நோய் முற்றிய நிலையில் மருத்துவமனைக்கு வந்தால் காப்பாற்றுவது கடினம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். பெரும்பாலும் அனைத்து வகையான எ‌ன்‌சிப‌லிடி‌ஸ் நோய்களும் ஒரே மாதிரி தான் இருக்கும். எனவே, எந்த வகையான எ‌ன்‌சிப‌லிடி‌ஸ் நோய் தாக்கியுள்ளது என்பதை கண்டறிவது மருத்துவர்களுக்கு சவாலான ஒன்று. வைரஸ் நோய்த்தொற்று காரணமாக இந்த நோய் தாக்கியுள்ளதா? அல்லது வேறு காரணிகளால் நோய் தாக்கியுள்ளதா என்பதை முதலில் மருத்துவர்கள் கண்டறிய வேண்டும். காய்ச்சலை குறைப்பது, மூளை வீக்கத்தால் ஏற்பட்டுள்ள அழுத்தத்தை குறைப்பது உள்ளிட்டவைகள் முக்கியமாக அளிக்கப்படும் சிகிச்சைகளாகும். நோயின் தன்மையை பொருத்து, ஸ்டீராய்டு ஊசி, வலி நிவாரணி, ஆன்டிபயாட்டிக்ஸ் உள்ளிட்டவைகளை மருத்துவர்கள் வழங்குகின்றனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசிகள் போடுவதன் மூலம் இந்நோய் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம். கொசுக்கள் அதிகமாக இருக்கும் பகுதிகளில் இந்நோய் அதிகம் ஏற்படுகிறது. எனவே, கொசுக்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும்.

இந்தியாவில் எ‌ன்‌சிப‌லிடி‌ஸ்:

இந்தியாவில் இந்நோய்க்கான முக்கிய காரணியாக ஜாப்ப‌னி‌ஸ் எ‌ன்‌சிப‌லிடி‌ஸ் விளங்குகிறது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தரவுகளின் படி, ஜாப்ப‌னி‌ஸ் எ‌ன்‌சிப‌லிடி‌ஸ் நோய், முதன்முதலில் தமிழகத்தின் வடக்கு ஆற்காடு மாவட்டத்தில் கடந்த 1955-ஆம் ஆண்டு பதிவாகியுள்ளது. பின்னர், 1972-ஆம் ஆண்டுகளில் இருந்து மேற்குவங்கம், உத்தரப்பிரதேசம், பீகார், அசாம், மணிப்பூர், ஆந்திரப்பிரதேசம், கோவா, புதுவை மற்றும் கர்நாடக மாநிலத்திற்கும் இந்நோய் பரவியுள்ளது.

தென் மாநிலங்களில் 16 வயதுக்கு கீழ் உள்ள நபர்கள் இந்நோயின் தாக்கத்துக்கு உட்படுகிறார்கள். ஆனால், வட மாநிலங்களில் அனைத்து வயதுடையவர்களையும் இந்நோய் தாக்குகிறது. கடந்த 2012-ஆம் ஆண்டு மட்டும் 272 பேர் ஒடிசா மாநிலத்தில் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதில், 24 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 2014-ஆம் ஆண்டில் நாடு முழுவதும் 550 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதில், மேற்குவங்க மாநிலத்தில் மட்டும் 102 இறப்புகளும், அசாம் மாநிலத்தில் 43 இறப்புகளும் பதிவாகியுள்ளன. கடந்த ஆண்டுகளில் உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களில் இந்நோய் பாதிப்புகள் அதிகமாக காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Gorakhpur Encephalitis
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment