Advertisment

சந்திரசேகர் ஆசாத் மீது துப்பாக்கிச் சூடு: 4 பேர் கைது- விசாரணை

சந்திரசேகர் ஆசாத் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட நிலையில், ஹரியானாவில் 4 பேர் சனிக்கிழமை (ஜூலை 1) கைதுசெய்யப்பட்டனர்.

author-image
WebDesk
New Update
Bhim Army chief Chandra Shekhar Aazad

பீம் ஆர்மி தலைவர் சந்திர சேகர் ஆசாத்

பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் (36), ஆதரவாளர் ஒருவரின் வீட்டில் நடந்த நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு வீடு திரும்யபோது, உத்தரப் பிரதேசத்தின் சஹாரன்பூர் பகுதியில் வைத்து மர்மநபர்களால துப்பாக்கியால் சுடப்பட்டார்.

இந்தத் துப்பக்கிச் சூடு சம்பவம் நாடு முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஹரியானாவில் 4 பேர் சனிக்கிழமை (ஜூலை 1) கைதுசெய்யப்பட்டனர். இவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

Advertisment

எனினும் துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு என்ன காரணம் என்பன போன்ற எந்தத் தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை.

இந்தத் தாக்குதலுக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதில், 'இதுபோன்ற சம்பவங்கள் வேறு எந்த அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களிடமும் நடக்கலாம்” எனத் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ஆசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உத்தரப் பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை மோசமாகி வருகிறது. மேலும் அரசு குற்றவாளிகளுக்கு ஜாதி மற்றும் மதத்தின் அடிப்படையில் பாதுகாப்பு அளிக்கிறது.

இதன் காரணமாக அரசாங்க ஆதரவு குற்றவாளிகள் அதிக உற்சாகத்தில் உள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.

ஆசாத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

இந்த நிலையில் சந்திரசேகர் ஆசாத்துக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து துணை முதலமைச்சர் பிரஜேஜ் பதக், “சந்திரசேகர் ஆசாத் எங்களின் நண்பர். அவர் மீதான துப்பாக்கிச் சூடு சம்பவம் மிகுந்த கண்டனத்துக்குரியது. அவருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது” என்றார்.

சந்திரசேகர் ஆசாத் வயிற்றில் துப்பாக்கிச் சூடு காயம் ஏற்பட்டது. அதற்கு அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Uttar Pradesh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment