2017-ஆம் ஆண்டின் 100 பணக்கார இந்தியர்களின் பெயர்களை ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை அண்மையில் வெளியிட்டது. இந்த பட்டியலில் கடந்த 10 வருடங்களாக முதலிடத்தை பிடித்துவரும் ரிலையன்ஸ் நிறுவனம் உள்ளிட்ட பல பெருநிறுவனங்களின் நிறுவனர் முகேஷ் அம்பானி, 38 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்புடன் இந்தாண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார்.
இப்பட்டியலில் உள்ள 100 பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பு 479 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என தெரிவித்துள்ள ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை, கடந்தாண்டு இந்த மதிப்பு 374 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்ததாக தெரிவித்துள்ளது.
"பொருளாதார மந்தநிலை நிலவினாலும் இந்தியாவின் பணக்காரர்களிடம் மேலும் அதிக செல்வம் சேர்ந்திருக்கிறது. இதற்கு காரணம் பங்குச் சந்தை உயர்வு. உயர் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளை விலக்கிக் கொண்ட அரசின் பணவிலக்க நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டியுமே இந்தியாவின் பொருளாதார மந்தநிலைக்கு முக்கிய காரணங்கள்", ஃபோர்ப்ஸ் இந்தியாவின் ஆசிரியர் நாஸ்னீன் கர்மாலி கூறுகிறார்.
மேலும், "கடந்த நவம்பரில் அரசு மேற்கொண்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி வரியின் தாக்கத்தினால் இந்த நிதியாண்டின் முதல் காலாண்டிலேயே பொருளாதார வளர்ச்சி விகிதம் 5.7 சதவிகிதமாக சரிந்துவிட்டது" என்றும் ஃபோர்ப்ஸ் குறிப்பிட்டுள்ளது.
இப்பட்டியலில் முதல் 10 இடங்களை பிடித்தவர்களின் விவரங்கள் இதோ:
1. முகேஷ் அம்பானி, ரிலையன்ஸ் நிறுவனம், 38 பில்லியன் டாலர்கள்
2. ஆசிம் பிரேம்ஜி, விப்ரோ, 19 பில்லியன் டாலர்கள்
3. ஹிந்துஜா பிரதர்ஸ், அசோக் லேய்லாண்ட், 18.4 பில்லியன் டாலர்கள்
4. லஷ்மி மிட்டல், 16.5 பில்லியன் டாலர்கள்
5. பல்லோஞ்சி மிஸ்திரி, 16 பில்லியன் டாலர்கள்
6. காத்ரேஜ் ஃபேமிலி, 14.2 பில்லியன் டாலர்கள்
7. ஷிவ் நாடார், எச்.சி.எல். நிறுவனம், 13.6 பில்லியன் டாலர்கள்
8. குமார் பிர்லா, ஆதித்யா பிர்லா குழுமம், 12.6 பில்லியன் டாலர்கள்
9. திலிப் சங்வி, சன் மருந்து தயாரிப்பு நிறுவனம், 12.1 பில்லியன் டாலர்கள்
10. கௌதம் அதானி, 11 பில்லியன் டாலர்கள்