பா.ஜனதா கட்சியில் இணைந்தார் முன்னாள் கிரிக்கெட் வீரர்

இந்திய கிரக்கெட்அணியின் முன்னாள் வீரர் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் இன்று பா.ஜ.கவில் இணைந்தார்.

இந்திய கிரக்கெட்அணியின் முன்னாள் வீரர் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் இன்று சென்னையில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தலைமையில் பா. ஜனதா கட்சியில் இணைந்தார்.

கடந்த 1983-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் அறிமுகமானவர் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன். சுழற்பந்து வீச்சாளரான இவர் இதுவரை இந்திய அணிக்காக 9 டெஸ்ட்போட்டிகளிலும், 16 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். இதில் டெஸ்ட் போட்டிகளில் 130 ரன்களும் 26 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ள அவர், ஒருநாள் போட்டிகளில், 15 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். இதில் டெஸ்ட் போட்டிகளில் 64 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளும், ஒருநாள் போட்டிகளில் 35 ரன்கள் கொடுத்து 3விக்கெட்டுகள் கைப்பற்றியது இவரது சிறந்த ஆட்டமாகும்.

இவர் கடைசியாக கடந்த 1985-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் விளையாடினார். அதன்பிறகு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வந்த அவர், 1987-ம் ஆண்டு மும்பை வான்கடே மைதானத்தில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக தனது கடைசி டெஸ்ட் போட்டியில் பங்கேற்றார். ஓய்வுக்கு பிறகு வர்ணனையாளராக செயல்பட்டு வந்த அவர் தற்போது பாரதிய ஜனதா கட்சியின் இணைந்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Former indian cricket playar lakshman sivaramakrishnan join to bjp

Next Story
வீட்டை விட்டு வெளியேற சொன்னதால் விபரீதம் : தீக்குளித்த தம்பதி பலி
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com