Gandhi 150 Birth anniversary Day Speech Tips: வரும் அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி மாகானின் 150வது பிறந்த நாள் விழாவை இந்தியாவில் உள்ள அனைவரும் கொண்டாடத் திட்டமிட்டுள்ளனர். இந்த நாளில் கருத்துகளை பரிமாறிக் கொள்வதற்காகவும், காந்தியவாதம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் நமது பள்ளிகளிலும்,கல்லோரிகளிலும் பேச்சுப் போட்டி மற்றும் கட்டுரைப் போட்டி நடத்தப்படுவது வழக்கம். அப்படி எதாவது போட்டியில் ஆர்வமாய் உங்கள் பெயரைக் கொடுத்துவிட்டு , ஆனால் என்ன எழுதுவது? என்ன பேசுவது? என்று தெரியாமல் யோசித்துக் கொண்டு இருக்கிறீர்களா?
இதோ உங்களுக்கான ஒரு ஐந்த டிப்ஸ்.
- காந்தி பன்முகத் தன்மைக் கொண்டவராய் இருந்தாலும், காந்தி அடிப்படையில் ஒரு வழக்கறிஞர். அதனால் தான், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் அடக்குமுறையை மற்றத் தலைவர்களைவிட காந்தியால் எளிமையாக புரிந்துக் கொள்ள முடிந்தது. எனவே, நீங்கள் இந்த வகையில் உங்கள் போட்டித் தலைப்பை தேர்ந்தெடுக்கலாம். உதாரணமாக, வழக்கரிங்கர்களின் பணியின் சிறப்பம்சங்கள் என்ன? ஒரு நாட்டில் சட்டம் எந்த தன்மையில் இருக்க வேண்டும்? நீதியை எவ்வாறு எளிமையாக்குவது?..... போன்ற தலைப்புகள் உங்களுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்
- காந்திக்கு முன்பு இந்தியாவில் அமைதியைப் பற்றி பலத் தலைவர்கள் பேசியுள்ளனர். அக்பர், அசோகர் இந்த பட்டியலில் அடங்கும். ஆனால், அகிம்சை என்ற கொள்கையை காந்தியைப் போல் யாரும் மையப்படுத்தவில்லை. எனவே, அகிம்சை என்றால் என்ன? ஏன்.... காந்தி அகிம்சையை இந்த அளவிற்கு மையப்படுத்த வேண்டும்? தற்காலிக அரசியல் சூழ்நிலையில் அகிம்சையின் பங்கு என்ன? என்ற தலைப்புகள் உங்களுக்கு மிகவும் பொருந்தக் கூடியதாக இருக்கும்?
- காந்தியின் ஒரு உண்மையான வெற்றி என்னவென்றால் பெண்களை நம்நாட்டின் அரசியலுக்குள் கொண்டு வந்தது. காந்திக்கு முன் நிறைவேற்றப்பட்ட உடன் கட்டை ஏறுதல் தடுப்பு சட்டமாக இருக்கட்டும், குழந்தைத் திருமணம் தடை சட்டமாக இருக்கட்டும் இவைகள்யெல்லாம் பெண்கள் போரட்டத்தால் வரவில்லை. ஆனால், இந்தியாவில் பெண்கள் முதன் முதலில் சாலைக்கு வந்து போராடியது காந்தியின் தலைமையில் தான். எனவே பெண்கள் முன்னேற்றத்தில் காந்தியின் பங்கு என்ன? என்ற தலைப்பு அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
- காந்திக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படவில்லை என்ற தகவல் நம் அனைவருக்கும் தெரியும். இது காந்திக்கு இழைக்கப்பட்ட துரோகம் என்பதல்ல ? மாறாக, அரசு என்பதை அடியோடு வெறுத்தவர் காந்தி. சுயராஜ் அதாவது சுயம் தான் ராஜ் . நம்மை நாம் தான் ஆளவேண்டும். தனிமனிதனை அரசு ஆளமுடியாது என்பது காந்தியின் கருத்து. தேசியவாதத்தை எதிர்த்தவர் காந்தி என்றே சொல்லலாம். எனவே, இந்த கோணத்தில் உங்களது தலைப்பு இருந்தால் மிகவும் கச்சிதமாக இருக்கும்.
- காந்தியின் அகிம்சை ஜெயின் மதத்தில் இருந்து பெறப்பட்டது, காந்தி சொல்லும் நெறிமுறை வாழ்க்கையில் மகாபாரதத்தின் சாயல் இருக்கும், இஸ்லாமியார்களுக்காக அவர் நடத்திய கிலாபத் போராட்டம் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்த்தையே திரும்பி பார்க்க வைத்தது. எனவே காந்தியும், மதநல்லிணக்கம் என்ற தலைப்பு தற்காலிக சூழ்நிலையில் பொருத்தமாக இருக்கும்.