scorecardresearch

கவுரி லங்கேஷ் படுகொலை : பெருகிய கண்டனம், பொங்கிய அனுதாபம்

அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர் பலரும், கவுரி லங்கேஷ் கொலைக்கு கண்டனங்களையும், தங்கள் அனுதாபங்களையும் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

கவுரி லங்கேஷ் படுகொலை : பெருகிய கண்டனம், பொங்கிய அனுதாபம்

லங்கேஷ் பத்திரிக்கையின் ஆசிரியரும், சமூக செயற்பாட்டாளருமான கவுரி லங்கேஷ், செவ்வாய் கிழமை இரவு சுமார் 8 மனியளவில் தன் வீட்டின் வெளியே அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்துத்துவம், சாதியம், வலதுசாரி அமைப்புகளுக்கு எதிராக தொடர்ந்து எழுதிவந்த கவுரி லங்கேஷ் கொலை செய்யப்பட்டது, கருத்து சுதந்திரம் மற்றும் பத்திரிக்கை சுதந்திரத்தின் மீதான பல கேள்விகளை எழுப்பியுள்ளது. கவுரி லங்கேஷின் கொலை ஜனநாயகத்தின் மீதான படுகொலையாகவே சமூக ஆர்வலர்கள் பார்க்கின்றனர்.

இடதுசாரிய செயல்பாட்டாளர்கள் ஜிக்னேஷ் மேவானி, கன்னையா குமார், மூத்த பத்திரிக்கையாளர்கள், அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர் பலரும், கவுரி லங்கேஷ் கொலைக்கு கண்டனங்களையும், தங்கள் அனுதாபங்களையும் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர். அதில், சில பதிவுகளை காணலாம்.

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Gauri lankesh shot dead twitter flooded with mournful tweets for the brave journalist

Best of Express