நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிக்கும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) சட்டத்தைக் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. நாடாளுமன்ற மைய வளாகத்தில் நடைபெற்ற ஜிஎஸ்டி அறிமுக விழாவில் கடந்த 30-ம் தேதி இந்த வரிவிதிப்பு முறை அறிமுகப் படுத்தப்பட்டது. தொடர்ந்து, இந்தச் சட்டம் ஜூலை 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தின் படி, அதிகபட்சமாக 28 சதவீதம் வரை வரி வசூலிக்கப்படுகிறது. இந்த வரிவிதிப்பு முறைக்கு ஒரு தரப்பினர் ஆதரவும், ஒரு தரப்பினர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், ஜிஎஸ்டி அறிமுக விழாவின் போது ராஜஸ்தான் மாநிலம் பீவா பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு நள்ளிரவு சரியாக 12.02 மணிக்கு குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து, அக் குழந்தைக்கு அதனுடைய பெற்றோர்கள் "ஜிஎஸ்டி" என பெயர் சூட்டி மகிழந்துள்ளனர். குழந்தையுடன் அதனுடைய தாயார் மற்றும் உறவினர்கள் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதனிடையே, "ஜிஎஸ்டி குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழ வாழ்த்துக்கள்” என அம்மாநில முதல்வர் வசுந்தரா ராஜே தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.