இன்று நடைபெற்ற ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் 170-க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரியை குறைக்க முடிவு செய்யப்பட்டது. குறிப்பாக ஜவுளிக்கு 13 சதவிகிதம் வரி சரிகிறது.
இந்தியா முழுவதும் பொருட்களுக்கு வெவ்வேறு விதமான வரி விதிப்பு நடைமுறை இருந்தது. இவற்றில் மதுபானம் உள்ளிட்ட சில பொருட்களை தவிர்த்து, மற்ற பொருட்களுக்கு நாடு முழுவதும் ஒரே வரியை அமுல்படுத்த முடிவு செய்யப்பட்டது. ‘ஒரே நாடு, ஒரே வரி’ என்கிற கோஷத்துடன், கடந்த ஜூலை 1-ம் தேதி ஜி.எஸ்.டி. (சரக்கு மற்றும் சேவை வரி) அமுல்படுத்தப்பட்டது.
ஜி.எஸ்.டி.யை நடைமுறைப்படுத்தியதில் மத்திய அரசு பெரும் தோல்வி அடைந்துவிட்டதாகவும், இதனால் பெருமளவில் வேலை வாய்ப்பு பறிபோய்விட்டதாகவும் எதிர்க்கட்சிகள் குறை கூறின. குறிப்பிட்ட சில பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி அதிகமாக இருப்பதாகவும் கூறின.
ஆனால் மத்திய அரசு சார்பில் சீரான இடைவெளியில் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூடி இது குறித்து ஆராயும் என தெரிவிக்கப்பட்டது. அது போலவே ஏற்கனவே ஓரிரு முறை ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டங்களில் சில சலுகைகள் அறிவிக்கப்பட்டன.
Chairing 23rd meeting of the GST Council in Guwahati, November 10, 2017 pic.twitter.com/8GigvDtlaW
— Arun Jaitley (@arunjaitley) November 10, 2017
இந்த நிலையில் அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடந்தது. இதில் 70-க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு ஜி.எஸ்.டி குறைக்க முடிவு செய்யப்பட்டதாக முதலில் வந்த தகவல்கள் கூறின. ஆனால் அதன்பிறகு கிடைத்த தகவல்கள் அடிப்படையில் 170-க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு ஜி.எஸ்.டி.யை குறைக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிய வருகிறது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி வெளியிடுவார்.
குறிப்பாக சிறுவர்களுக்கு பிடித்த சாக்லெட்களுக்கும், சாமானியர்கள் பயன்படுத்தும் ஷேவிங் கிரீம், சுவிங்கம் ஆகியவற்றுக்கு ஜி.எஸ்.டி குறைக்கப்பட்டிருக்கிறது. வர்த்தக உலகத்தினரின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப ஜவுளித்துறைக்கும் ஜி.எஸ்.டி குறைக்கப்பட்டிருக்கிறது. இதுவரை ஜவுளி பொருட்களுக்கு 18 சதவிகிதம் அதிகபட்சமாக ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டது. அதனை 13 சதவிகிதம் குறைத்து 5 சதவிகிதமாக குறைத்து இன்று ஜி.எஸ்.டி கவுன்சில் முடிவு செய்துள்ளது.
A Group Photo of the Union Finance Minister Shri @arunjaitley with the Finance Ministers & Senior Officers of the different States/UTs on the occasion of 23rd GST Council Meeting in Guwahati, Assam today. pic.twitter.com/VXL3DXg1rb
— Ministry of Finance (@FinMinIndia) November 10, 2017
1. 177 க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு, ஷேவிக் கிரீம், பற்பசை உள்பட 177 பொருட்களுக்கு 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக வரி குறைப்பு.
2. ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சத்துமாவிற்கு வரி 5% ஆக குறைப்பு.
3.விளைபொருட்கள் சேமிப்புக்கான உள்கட்டமைப்பு பணிகளுக்கான வரி 12% ஆக குறைப்பு.
4. செங்கல் தொழில் தொடர்பான சில்லறை வேலைகள் மீதான சேவை வரி குறைப்பு.
5.சிகரெட் உட்பட பாதிப்பு ஏற்படுத்தும் பொருட்கள், ஆடம்பரப் பொருட்களை 28% வரிப்பிரிவில் வைக்க முடிவு.
6.திரைப்படம் தொடர்பான சாதனங்கள், கருவிகளுக்கு 28% லிருந்து 18% ஆக வரியை குறைக்க பரிந்துரைக்கபட்டு உள்ளது.
7.50 பொருட்களுக்கு மட்டுமே 28 சதவீத வரிப்பிரிவு
தற்போதைய நிலையில் மொத்தம் 50 பொருட்களுக்கு மட்டுமே அதிகபட்ச ஜி.எஸ்.டி-யாக 28 சதவிகிதம் வசூலிக்கப்படுவதாக கவுன்சில் சுட்டிக்காட்டியிருக்கிறது. தொடர்ந்து வரும் கோரிக்கைகள் அடிப்படையில் ஜி.எஸ்.டி விகிதத்தில் தேவைப்பட்டால் மாறுதல்கள் செய்யப்படும் என மத்திய அரசு தரப்பில் கூறப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.