30-ஆம் தேதி நள்ளிரவு அமலாகும் ஜி.எஸ்.டி!

இந்தியாவின் மிகப்பெரிய வரி சீர்திருத்தங்களில் ஒன்றான ஜி.எஸ்.டி வரி விதிப்புச்சட்டம், வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இதையொட்டி, வரும் ஜுன் 30-ஆம் தேதி நள்ளிரவு பாராளுமன்ற சிறப்புக்கூட்டம் கூடும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி இன்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “ஜூன் 30-ஆம் தேதி நள்ளிரவு நடக்கும் சிறப்புக் கூட்டத்தில், பிரதமரும், குடியரசுத் தலைவரும் ஒரு மணி நேரத்திற்கு இந்த மசோதா குறித்து உரையாற்றுவார்கள். மேலும், ஜிஎஸ்டி தொடர்பாக இரு குறும்படங்களும் ஒளிபரப்பப்பட உள்ளன.

இந்த நிகழ்வில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் எச்.டி தேவகவுடா உள்ளிட்டோர் ஒரே மேடையில் அமர்வார்கள். இந்த நிகழ்ச்சிக்கு அனைத்து மாநில முதல் அமைச்சர்களும் அழைக்கப்படுவர்” என அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

மேலும், ஜி.எஸ்.டி.யால் வருவாய்கள் வளரும். பொருளாதாரத்தில் ஒரு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறியுள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close