குஜராத் சட்டமன்றத்திற்கு 2-வது கட்டத் தேர்தல் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. 14 மாவட்டங்களில், 93 தொகுதிகளுக்கு இந்த வாக்குப்பதிவு!
குஜராத் சட்டமன்றத்திற்கு முதல் கட்டத் தேர்தல் டிசம்பர் 9-ம் தேதி நடந்தது. அன்று மொத்தம் 83 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. மீதமுள்ள 93 தொகுதிகளுக்கு இன்று (டிசம்பர் 14) காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
இன்று தேர்தல் நடைபெறும் 93 தொகுதிகளும் வடக்கு மற்றும் மத்திய குஜராத் பகுதியில் உள்ளவை! முதல் கட்டத் தேர்தலை ஒப்பிடுகையில் இந்தத் தொகுதிகளில் பாஜக.வுக்கு கடும் சவால் அளிக்கும் வகையில் காங்கிரஸ் வலுவாக உள்ள தொகுதிகள் இவை! கடந்த 2012 தேர்தலில் இந்த 93 தொகுதிகளில் காங்கிரஸ் 39 தொகுதிகளையும், பாஜக 52 தொகுதிகளையும் வென்றது குறிப்பிடத்தக்கது.
முதல் கட்டமாக தேர்தல் நடந்த 83 தொகுதிகளில் காங்கிரஸ் 22 தொகுதிகளை மட்டுமே கடந்த முறை ஜெயித்தது குறிப்பிடத்தக்கது. இன்று வாக்குப்பதிவு நடைபெறும் 93 தொகுதிகளில் 851 வேட்பாளர்கள் களத்தில் இருக்கிறார்கள். அவர்களில் பாஜக வேட்பாளர்கள் 93, காங்கிரஸ் 91.
2012 தேர்தலில் பாஜக 115 தொகுதிகளையும், காங்கிரஸ் 61 தொகுதிகளையும் வென்றன. இந்த முறை எந்தக் கட்சி ஜெயிக்கப் போகிறது என்பதை வருகிற 18-ம் தேதி நடைபெற இருக்கும் வாக்கு எண்ணிக்கை முடிவு செய்யும்.
இன்று நடைபெறும் 2-வது கட்டத் தேர்தலின் வாக்குப் பதிவு Live Updates
PM @narendramodi is the first sitting PM to vote from Gujarat.
True to his mantra of 'every person is important', PM Modi stands in queue for voting! #મારો_મત_ભાજપને pic.twitter.com/tqOPmrBx3v— BJP (@BJP4India) December 14, 2017
பகல் 12.15 : பிரதமர் நரேந்திர மோடி சபர்மதியில் உள்ள பூத்தில் வரிசையில் நின்று வாக்களித்தார். அப்போது அங்கு நின்ற சக வாக்காளர்கள், ‘மோடி... மோடி...’ என கோஷம் எழுப்பினர்.
காலை 11.10 : வதோதரா-வில் 12.81 சதவிகித வாக்குப் பதிவு நடந்திருக்கிறது.
10.40 : காங்கிரஸுக்கு ஆதரவு கொடுத்த ஹர்திக் படேல் தனது வாக்கை பதிவு செயுதார்.
10.20 : மொத்தம் 63 இடங்களில் வாக்குப் பதிவு எந்திரங்கள் முறையாக இயங்கவில்லை என புகார்கள் பதிவு செய்யப்பட்டன.
காலை 10.05 : மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, அகமதாபாத்தில் உள்ள பூத்தில் தனது வாக்கை பதிவு செய்தார்.
காலை 8.55 : காந்தி நகரில் உள்ள பூத்தில் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் தனது வாக்கை பதிவு செய்தார்.
#GujaratElections2017 : Former UPA Union Minister of Mines and Congress leader Dinsha Patel casts his vote in Nadiad Assembly Constituency in Kheda district @IndianExpress pic.twitter.com/RCseJ7mQo0
— Aditi Raja (@aditijf) December 14, 2017
காலை 8.45 : வதோதரா நகர் தொகுதியில் 3 பூத்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் தவறாக இயங்குவதாக புகார் கிளம்பியது. அதிகாரிகள் உடனடியாக அவற்றை மாற்றினர்.
To my fellow citizens of Gujarat: Every vote matters. Just go out and vote. Vote for a change of government after 22 years.
— P. Chidambaram (@PChidambaram_IN) December 14, 2017
காலை 8.25 : முன்னாள் முதல்வர் ஆனந்தி பென் படேல் அகமதாபாத்தில் தனது வாக்கை பதிவு செய்தார்.
#GujaratRound2 begins today and we urge citizens to come out and exercise their right to vote towards a prosperous, inclusive Gujarat.
Vote Truth,
Vote Progress,
Vote Navsarjan, #VoteCongress ✋????
— Congress (@INCIndia) December 14, 2017
காலை 8.15 : வதோதரா நகரம் பாபாஜிபுரா பூத்தில் சுவாமி நாராயன் கோவில் சாமியார்கள் மொத்தமாக வந்து வரிசையில் நின்று வாக்களித்தார்கள்.
Today is Phase 2 of the Gujarat elections. I request all those voting today to vote in record numbers and enrich this festival of democracy.
— Narendra Modi (@narendramodi) December 14, 2017
காலை 8.00 : இரண்டாம் கட்டமாக 93 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.