/tamil-ie/media/media_files/uploads/2017/12/gujarat-himachal-pradesh-election.jpg)
குஜராத் மற்றும் ஹிமாசல பிரதேசத்தில் பாஜக வெற்றி பெறும் என தேர்தலுக்கு பிறகு நடைபெற்ற பெரும்பாலான ‘எக்ஸிட் போல்’ முடிவுகள் தெரிவிக்கின்றன.
Thank You Gujarat #ExitPollpic.twitter.com/ep1dvCOzfA
— Narendra Modi (@narendramodi177) December 14, 2017
குஜராத் சட்டமன்றத்திற்கு முதல் கட்டமாக கடந்த 9-ம் தேதி 83 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. 2-வது மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு இன்று (14-ம் தேதி) 93 தொகுதிகளில் நடந்து முடிந்தது. மொத்தமுள்ள 176 தொகுதிகளிலும் வாக்களித்துவிட்டு வெளியே வந்த வாக்காளர்களிடம் பல்வேறு செய்தி நிறுவனங்கள் ‘எக்ஸிட் போல்’ கணிப்புகளை நடத்தின. இதேபோல ஹிமாசல பிரதேசம் சட்டமன்றத் தேர்தலையொட்டியும் எக்ஸிட் போல் நடத்தியிருந்தார்கள்.
குஜராத் சட்டமன்றத் தேர்தலின் இறுதிகட்ட வாக்குப்பதிவு முடிந்ததும், இன்று மாலையில் பல செய்தி நிறுவனங்களும் தங்கள் எக்ஸிட் போல் முடிவுகளை வெளியிட்டனர். அவற்றில் பெரும்பாலானவை குஜராத் மற்றும் ஹிமாசல பிரதேசத்தில் பாஜக வெற்றி பெறும் என்றே குறிப்பிட்டன.
If these visuals are any less than any #ExitPoll can predict...
This is 135++#GujaratRound2pic.twitter.com/1zrjfA5eUk— Яøÿ ???? (@MixedRaita) December 14, 2017
குஜராத் எக்ஸிட் போல் முடிவுகள் :
இந்தியா டுடே-ஆக்சிஸ் மை இந்தியா : காங்கிரஸ் -68 முதல் 82, பாஜக -99 முதல் 113, மற்றவை- 1 முதல் 4
இந்தியா டிவி : காங்கிரஸ்- 65 முதல் 75 , பாஜக- 104 முதல் 114 , மற்றவை- 0 முதல் 4 .
டைம்ஸ் நவ் : காங்கிரஸ்-70, பாஜக-109, மற்றவை- 3
ஏபிபி : காங்கிரஸ் - 78 முதல் 86 வரை, பாஜக- 91 முதல் 99 வரை
நியூஸ் 18 சி வோட்டர்ஸ்- : காங்கிரஸ்- 74 , பாஜக- 108 , மற்றவை - 0.
ஹிமாசல பிரதேசம் எக்ஸிட் போல் முடிவுகள்:
இந்தியா டுடே-ஆக்சிஸ் மை இந்தியா : காங்கிரஸ் -13 முதல் 20, பாஜக -47 முதல் 55, மற்றவை- 0 முதல் 2
நியூஸ் 24 : காங்கிரஸ்-13, பாஜக-55
டைம்ஸ் நவ் : காங்கிரஸ்-17, பாஜக-51, மற்றவை- 0
மேலும் சில செய்தி நிறுவனங்களின் முடிவுகள் எதிர்பார்க்கப்படுகின்றன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.