குஜராத் மாநில பாடப்புத்தகத்தில் அச்சிடுவதில் ஏற்பட்ட பிழையால், காலாராவிற்கு பதிலாக ரமலான் நோன்பு குறித்த வார்த்தை இடம்பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இஸ்லாமியர்கள் ரமலான் பண்டிகையையொட்டி நோன்பு இருப்பது வழக்கம். இந்த நோன்பின் போது, இஸ்லாமியர்கள் அதிகாலை முதல் மாலை வரையில் உணவு அருந்தால், நீரருந்தாமல் இருப்பர்.
குஜராத் மாநில அரசு பாடத்திட்டத்தின் 4-ம் வகுப்பு பாட புத்தகத்தில் அச்சிடும் போது ஏற்பட்ட பிழை (printing error) காரணமாக, ரமலான் நோன்பு குறித்து தவறான புரிதலை ஏற்படுத்தியது. அதில், ரமலான் நோன்பு(roza or fasting ) இருக்கும் நிகழ்வை தொற்று நோய் என்று குறிப்பிடும் வகையில் உள்ளது. ( haiza cholera ) ஹைஸா என்பது காலராவை குறிக்கும், ஆனால் அச்சிடும்போது ஏற்பட்ட பிழை காரணமாக ரோஸா( Roza) என பதிவாகியுள்ளது. ரோஸா என்பது ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் கடைப்பிடிக்கும் நோன்பு ஆகும்.
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரி கூறுபோது: காலராவிற்கு, பதில் ரமலான் நோன்பு குறித்த வார்த்தை இடம் பெற்றதால், ரமலான் நோன்பினால் தொற்றுநோய் ஏற்பட்டு டயேரியா, வாந்தி போன்றவை ஏற்படும் என்று பொருள்படும்படி ஆகிவிட்டது. இது அச்சிடும் போது ஏற்பட்ட பிழை தான் இதற்கு காரணம். புத்தகத்தில் உள்ள இந்த பிழையை சரிசெய்ய உத்தரவிடப்பட்டுள்ளது என்று கூறினார்.
முன்னதாக, அம்மாநில 9-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் இயேசு கிறிஸ்து குறித்து இழிவான குறிப்பு இடம் பெற்றது கடும் விமர்சனத்திற்குள்ளானது. இந்த நிலையில், இந்த பிழை ஏற்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.