scorecardresearch

குஜராத் தேர்தல்: 2 பேரணிகளில் கலந்து கொள்ளும் ராகுல் காந்தி.. காங்கிரஸ் நம்பிக்கை

Gujarat polls: குஜராத் சட்டபேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ராகுல் காந்தி நாளை 2 பேரணிகளில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.

குஜராத் தேர்தல்: 2 பேரணிகளில் கலந்து கொள்ளும் ராகுல் காந்தி.. காங்கிரஸ் நம்பிக்கை

ஹிமாச்சல பிரதேச தேர்தலில் ராகுல் காந்தி பிரச்சாரம் செய்யாத நிலையில், நாளை (நவம்பர் 21) குஜராத் மாநிலத்தில் 2 இடங்களில் (சூரத், ராஜ்கோட்) நடைபெறும் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.

ஹிமாச்சல பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் நவம்பர் 12-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. குஜராத் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு டிசம்பர் 1,5 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், மகாராஷ்டிராவில் இந்திய ஒற்றுமை பயணம் மேற்கொண்டுள்ள ராகுல், நாளை குஜராத் சென்று அங்கு பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். ராகுல், ஹிமாச்சல பிரதேச தேர்தலில் பிரச்சாரம் செய்யவில்லை. பொறுப்புகளை தனது சகோதரியும், காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி வதேராவிடம் ஒப்படைத்தார். ஆனால் குஜராத்தில் இம்முறை மும்முனை போட்டி நிலவுகிறது. பா.ஜ.க, காங்கிரஸ், ஆம் ஆத்மி போட்டியில் உள்ளன. ஆம் ஆத்மி அங்கு தீவிரம் காட்டி வரும் நிலையில், ராகுல் காந்தி நாளை 2 பேரணிகளில் உரையாற்றுகிறார். செப்டம்பர் 7-ம் தேதி பாரத் ஜோடோ யாத்திரை தொடங்கிய பிறகு ராகுல் கலந்து கொள்ளும் முதல் அரசியல் பேரணி ஆகும்.

நாளை ( நவம்பர் 21) குஜராத்தின் சூரத், ராஜ்கோட் பகுதிகளில் நடைபெறும் 2 பேரணிகளில் ராகுல் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். நவம்பர் 21, 22 இரண்டு நாட்கள் பாரத் ஜோடோ யாத்திரைக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

2017 தேர்தல் ஒப்பீடு

பாரத் ஜோடோ யாத்திரை தொடங்குவதற்கு முன்பாக செப்டம்பர் முதல் வாரத்தில் ராகுல் குஜராத்தில் பயணம் மேற்கொண்டார். ஆனால் தேர்தல் நேரத்தில் அவர் இதுவரை பிரசாரம் செய்யவில்லை. இது கட்சியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. கடந்த 2017 தேர்தலில் ராகுல் அங்கு சூறாவளி பிரச்சாரம் செய்தார். 1985-க்குப் பிறகு, காங்கிரஸ் அங்கு 77 இடங்களில் வெற்றி பெற்றது. பா.ஜ.க-வின் 100 தொகுதி வெற்றியை எட்டவிடாமல் தடுத்து நிறுத்தியது.

குஜராத்தின் தொழில்துறை மையமான சூரத்தில், பழங்குடியின மக்கள் வசிக்கும் மஹுவாவில் காங்கிரஸ் பேரணி நடத்த உள்ளது. ஜிஎஸ்டிக்கு எதிரான போராட்டங்கள், பணமதிப்பிழப்பு நடவடிக்கை என கடந்த முறை சூரத்தில் பேராட்டங்கள் நடைபெற்றாலும், பா.ஜ.க வெற்றி பெற்றது. இருப்பினும் தெற்கு குஜராத் மற்றும் பிற இடங்களில் உள்ள பழங்குடியின பகுதிகளில்
காங்கிரஸ் சிறப்பாக செயல்பட்டது.

மொத்தத்தில், கடந்த தேர்தலில் எஸ்டி பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட 27 தொகுதிகளில் 17ல் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இவற்றில் 14 தொகுதிகள் தெற்கு குஜராத்தில் உள்ளன.

பழங்குடியினர் வாக்குகள்

இந்த முறை கட்சி அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் என நம்புகிறது. ஆனால் கள நிலவரம் கவலை அளிப்பதாக உள்ளது எனக் கூறப்படுகிறது. தற்போது ராகுல் பேரணி தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மஹுவாவில் நடைபெறும் ராகுல் உரையாற்றியதன் மூலம், அருகிலுள்ள தொகுதிகளான வியாரா, நிசார், வல்சாத், கப்ரதா மற்றும் டாங்ஸ் ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும் என கட்சி நம்புகிறது. பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 6-ம் தேதி வல்சாத்தில் உள்ள கப்ரதாவில் இருந்து பா.ஜ.க பிரச்சாரத்தை தொடங்கினார்.

பழங்குடியினர் மத்தியில் காந்தி குடும்பம் இன்னும் அதிக நன்மதிப்பைக் கொண்டிருப்பதாக கட்சித் தலைவர்கள் கூறுகின்றனர். மேலும் 14% வாக்குகள் கொண்ட பழங்குடியினரிடத்தில்
குடும்ப உறுப்பினர் ஒருவர் பிரச்சாரம் செய்வது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

ஆம் ஆத்மி கட்சியும் பழங்குடியினரின் வாக்குகளை உற்று நோக்குகிறது. டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் பழங்குடியின மாவட்டங்களில் மூன்று பேரணிகளில் கலந்து கொண்டார்.

பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் பிரியங்காவும் பிரச்சாரம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. சூரத் தவிர, சௌராஷ்டிரா பிராந்தியத்தின் மையத்தில் உள்ள பா.ஜ.க
கோட்டையான ராஜ்கோட்டில் ராகுல் பேரணி நடத்துகிறார். 2017 இல் ராஜ்கோட் மாவட்டத்தில்
கட்சி தோல்வியைச் சந்தித்தாலும், சௌராஷ்டிரா பகுதியில் எதிர்பார்த்ததை விட சிறப்பாகச் செயல்பட்டு, 28 இடங்களை வென்றது, முன்பு 15 இடங்களை வென்றது.

ராஜ்கோட் தொகுதி

ராஜ்கோட்டில் உள்ள 3 சட்டமன்ற தொகுதிகளிலும் பா.ஜ.க நீண்ட காலமாக வெற்றி பெற்று வருகிறது. மோடி, முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி ஆகியோர் ராஜ்கோட்டில் நின்று வெற்றி பெற்றவர்கள். ஆம் ஆத்மி கட்சியும் ராஜ்கோட்டில் தனது பார்வையை செலுத்தி வருகிறது.

ஆனால் இந்த ஆண்டு தொடக்கத்தில் காங்கிரஸில் சேருவதற்காக வெளியேறிய இந்திராணி ராஜ்யகுருவின் விலகல் அதன் வாய்ப்புகளைத் தடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராஜ்யகுரு இப்போது காங்கிரஸு போட்டியிடுகிறார். ராஜ்கோட் கிழக்கு தொகுதி வேட்பாளராக
நிறுத்தப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே இங்கு வெற்றி பெற்றுள்ளார்.

2-ம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ள தொகுதிகளுக்கு பிரச்சாரம் செய்ய ராகுல் இந்த மாத இறுதியில் குஜராத் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. அப்போது வடக்கு மற்றும் மத்திய குஜராத்தில் இரண்டு பேரணிகளில் உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவித்தனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Gujarat polls rahul gandhi to hold two rallies monday party hopes for wind in its sails

Best of Express