ராம் ரஹிம் சிங் சிறையில் தன் மனைவியை மட்டும் பார்க்க விரும்பவில்லை: ஏன்?

தான் பார்க்க விரும்பும் 10 பேர் அடங்கிய பட்டியலை ராம் ரஹிம் சிங் சிறை அதிகாரிகளுக்கு வழங்கினார். அதில், அவருடைய மனைவி ஹர்ஜீத் கவுர்-ன் பெயர் இல்லை.

தான் பார்க்க விரும்பும் 10 பேர் அடங்கிய பட்டியலை ராம் ரஹிம் சிங் சிறை அதிகாரிகளுக்கு வழங்கினார். அதில், அவருடைய மனைவி ஹர்ஜீத் கவுர்-ன் பெயர் இல்லை.

author-image
Nandhini v
புதுப்பிக்கப்பட்டது
New Update
Gurmeet Ram Rahim,Honeypreet Insan , sexual harassment,

தேரா சச்சா சௌதா அமைப்பின் தலைவரான குர்மீத் ராம் ரஹிம் சிங், இரண்டு பக்தைகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு தற்போது ரோஹ்தக் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Advertisment

இந்நிலையில், தான் பார்க்க விரும்பும் 10 பேர் அடங்கிய பட்டியலை ராம் ரஹிம் சிங் சிறை அதிகாரிகளுக்கு வழங்கினார். அதில், அவருடைய மனைவி ஹர்ஜீத் கவுர்-ன் பெயர் இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. அப்பட்டியலில் தனது வளர்ப்பு மகள் ஹனிப்ரீத் இன்சான் பெயர் இடம்பெற்றுள்ளது. சிர்சா காவல் நிலைய போலீசார் இந்த பட்டியலை கடந்த 4-ஆம் தேதி பெற்றனர்.

வளர்ப்பு மகள் ஹன்ப்ரீத் இன்சான் தவிர, தன் தாயார் சசீப் கவுர், மகன் ஜஸ்மீத் இன்சான், மகள்கள் அமர்ப்ரீத் மற்றும் சரண்ப்ரீத், மருமகள் ஹூசன்ப்ரீத், இரண்டு மருமகன்கள், தேர சச்சா சௌதா அமைப்பின் மேலாளர் விபாசன்னா மற்றும் அவருடைய விசுவாசி தனா சிங் ஆகியோரது பெயர்களும் அப்பட்டியலில் இடம்பெற்றிருந்தன.

இந்த பட்டியலில் இடம்பெற்றோரின் வசிப்பிடங்களை சிர்சா காவல் நிலைய போலீசார் ஆய்வு செய்தனர். ஆனால், தேரா சச்சா சௌதா அமைப்பின் மேலாளர் விபாசன்னா குறித்து மட்டும் விசாரணை மேற்கொள்ள முடியவில்லை என காவல் துறையினர் தெரிவித்தனர்.

Advertisment
Advertisements

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: