ஜிஎஸ்டி: மத்திய-மாநில அரசுகளுடன் இரவு உணவு சாப்பிடுவது போல் உள்ளது-ஹர்பஜன் சிங் சாடல்

ஜிஎஸ்டி குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கும் தன் பங்குக்கு விமர்சித்துள்ளார்

GST, Cricket

ஜிஎஸ்டி குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கும் தன் பங்குக்கு விமர்சித்துள்ளார்.

நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிக்கும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) சட்டத்தைக் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. நாடாளுமன்ற மைய வளாகத்தில் நடைபெற்ற ஜிஎஸ்டி அறிமுக விழாவில், இந்த வரிவிதிப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தச் சட்டம் ஜூலை 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த வரிவிதிப்பு முறைக்கு ஒரு தரப்பினர் ஆதரவும், ஒரு தரப்பினர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.

ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை அமலுக்கு வந்ததும் பாஜக-வினர் நாடாளுமன்ற வளாகத்தின் வாயிலில் வெடி வெடித்து உற்சாகமாக கொண்டாடினர். ஆனால், ஜிஎஸ்டி அறிமுக விழா நிகழ்ச்சியை காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன.

ஜிஎஸ்டி மூலம் 5, 12, 18 சதவீதம் என தொடங்கி அதிகபட்சமாக 28 சதவீதம் வரை வரி வசூலிக்கப்படுகிறது. இந்த வரி விகிதங்கள் பொருட்களுக்கு ஏற்றாற்போல் மாறுபடும். இதனால், பொருட்களின் விலையில் ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றன.

இந்நிலையில், ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை குறித்து கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் சாடியுள்ளார். இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, ஒரு போட்டியிலாவது வென்று விட வேண்டும் என்ற முனைப்பில் ஆடி வருகிறது. இந்திய அணியில் இடம் பெறவில்லை என்றாலும், சமூக வலைதளங்களில் தனது கருத்துகளை பகிர்ந்து கொண்டு மிகவும் ஆக்டிவாக இருப்பவர் ஹர்பஜன் சிங். எந்த ஒரு கருத்தையும் துணிவாக சொல்லும் இவர், பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கியுள்ளார்.

அந்த வகையில்,”ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு பில் கொடுக்கும் போது, மத்திய-மாநில அரசுகள் நம்முடன் சாப்பிட்டது போன்ற உணர்வு ஏற்படுகிறது” என ஜிஎஸ்டி குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் ஹர்பஜன் விமர்சித்துள்ளார். ஹோட்டல்களில் மத்திய அரசின் ஜிஎஸ்டி 9 சதவீதம் – மாநில அரசின் ஜிஎஸ்டி 9 சதவீதம் (CGST, SGST) விதிக்கப்படுவதை அவர் இவ்வாறு விமர்சித்துள்ளார். இதற்கு ஒரு சாரார் ஆதரவான கருத்துகளையும், ஒரு சாரார் எதிரான கருத்துகளையும் டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.


முன்னதாக, மைக்கேல் கிளார்க் தனது ஓய்வு முடிவை மாற்றிக் கொண்டு மீண்டும் களமிறங்க வேண்டும் எனவும், டாப் பேட்ஸ்மென்களை உருவாக்கும் ஆஸ்திரேலிய அணியின் காலம் முடிவுக்கு வந்து விட்டது என்று ஹர்பஜன் விமர்சித்திருந்தார். அதேபோல், ஆஸ்திரேலிய அணி விளையாடுவதை பார்த்தல் மஞ்சள் சட்டைப் போட்டுக் கொண்டு இலங்கை அணி விளையாடுவது போல் உள்ளது என்று இந்தியாவுக்கு எதிரான போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியின் தொடர் தோல்விகளை ஹர்பஜன் விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Harbhajan singh takes dig at gst says feels like state central governments both had dinner with us

Next Story
உயிருக்குப் போராடும் 7 வயது பாகிஸ்தான் சிறுமிக்கு மருத்துவ விசா வழங்கிய சுஷ்மாMinister Sushma Swaraj,pakistan, indian government, medical visa, external affairs
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express