scorecardresearch

இங்கே யாருக்காவது தமிழ் பேசத் தெரியுமா?’: பிரஸ் மீட்டில் திடீரென தமிழில் கேள்வி எழுப்பிய ஹரியானா முதல்வர்

பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஹரியான முதல்வர் மனோகர் லால் கட்டார் தமிழில் பேசியது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தமிழில் கேள்வி எழுப்பிய ஹரியானா முதல்வர்
தமிழில் கேள்வி எழுப்பிய ஹரியானா முதல்வர்

பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஹரியான முதல்வர் மனோகர் லால் கட்டார் தமிழில் பேசியது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

சண்டிகரில் ஹரியான முதல்வர் மனோகர் லால் கட்டார், செய்தியாளர்களை சந்தித்தார். தெலுங்கானா, ஹரியான உள்ளிட்ட  இடங்களில் இருந்து பத்திரிக்கையாளர்கள் வந்திருந்தனர். இந்த நிகழ்வில் ஹரியான முதல்வர் பத்திரிக்கையாளர்கள் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அப்போது  அவர் ‘இங்கே யாருக்காவது தமிழ் பேசத் தெரியுமா? என்று கேள்வி கேட்டார். அப்போது ஒருவர் எனக்கு தமிழ்பேசத் தெரியும் என்று கூறியதும். ஹரியான முதல்வர் மனோகர் லால் கட்டார் சிறிது புன்னகையுடன் பேசத்தொடங்கினார்.

“கட்சிக்காக தமிழ்நாட்டில் பணிபுரிந்தபோது தமிழ் கற்றுக்கொண்டேன். தமிழ் பேசும் ஒருவரை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று கூறினார்.   

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Haryana cm spoke in tamil press meet